Home சினிமா ’பிக்பாஸ் வீட்டில் சோமபானமா?’ பிக் பாஸ் 16-ம் நாள் ##BiggBoss4

’பிக்பாஸ் வீட்டில் சோமபானமா?’ பிக் பாஸ் 16-ம் நாள் ##BiggBoss4

பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடிப்படை தன்மை என்பது அனைத்து வகை ரசிகர்களை ஈர்க்க ஒவ்வொரு விஷயத்தையும் சேர்த்து தருவது. அதாவது ஆடல், பாடல் ரசிகர்களுக்குப் பிடித்தமாக ஒருநாள், சீரியல் டைப்பில் அழுகையும் சண்டையுமாக ஒருநாள், காதல், நகைச்சுவையுமாக ஒருநாள் என எல்லோரையும் பார்க்க வைக்கும் முயற்சிகள் நடக்கும். பிக்பாஸ் வீட்டின் 16-ம் நாளிலும் அப்படியாகத்தான் சுவாரஸ்யமான ஒரு டாஸ்க் டிராமா அரங்கேறியது.

பிக்பாஸ் 16-ம் நாள்

’மாரி’யின் ‘பேர் பெருசு…’ பாடல் ஒலிக்க… ’என்னைய யாராலும் கட்டுப்படுத்த முடியாதுடா’ என ஆவேசமாக ஆடினார் அனிதா. கூடவே வேல்ஸூம் சேர அதகளமானது. வழ்க்கம்போல ஷிவானி தனியாக ஆடி ஸ்கோர் செய்ய பார்க்க, பெரிய கண்ணாடியோடு ரம்யா ஆட, அலட்டிக்கொள்ளாமல் ஜித்தன் ரமேஷ், சுரேஷ் உள்ளிட்டோர் ஷேக் டான்ஸ் ஆடினார்கள்.

‘நான் உங்களுக்கு என்ன அட்வைஸ் பண்ணினேன். கமல் சார்ட்ட என்னையப் பத்தி நீங்க சொன்னது ரொம்ப தப்பு’ என்று சுரேஷிடம் அணத்திக்கொண்டிருந்தார் ஆரி. தான் பலம் என நினைக்கும் ஒன்றாலே தான் வீழ்த்தப்படுவதை ஆரியால் ஏற்கமுடியவில்லை.

விழிப்புணர்வு விளம்பரங்களில் வருவதுபோல நல்ல செய்திகளாகச் சொல்வது சரிதான் ஜி. ஆனால், எப்போ வாச்சும்ன்னா பரவாயில்ல… எப்பவுமேன்னா? திகட்டிடும் இல்லையா? சுரேஷ் ஆரியை லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்துகொண்டிருந்தார்.

லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கை அறிவித்தார். அரக்கர் உலகம் vs ராஜா வீடு. ராஜாவும் உறவினர்களும் வீட்டுக்குள் இருக்க, அரக்கர்கள் வெளியே இருப்பார்கள். பெல் அடித்ததும் ராஜா வீட்டிலிருந்து ஒருவர் வெளியே வந்து உட்கார வேண்டும். அடுத்த பெல் அடிக்கும்வரை அரக்கர் கூட்டம் என்ன செய்தாலும் ஆடாமல் அசையால் இருக்க வேண்டும். அசைந்துவிட்டால் அவரும் அரக்கர் கூட்டத்தில் ஓர் ஆள். இதுவே டாஸ்க்.

வேல்முருகன் ராஜா, நிஷா ராணி, இம்சை அரசன் கெட்டப்பில் ரியோ இளவரன், சோம்ஸ், பாலா இன்னும் இரு இளவரசர்கள், ரம்யா, ஷனம், சம்யுக்தா இளவரசிகள்.

மறுபக்கம் அரக்கர் கூட்டத்தின் தலைவர் சுரேஷ், அர்ச்சனா, ஆரி, ஷிவானி, கேபி, அனிதா, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் அரக்கர் அணியினர்.

‘தாடி மீசையை எடுத்துட்டு குழந்தை மாதிரி இருப்பேண்டா’ என்று பறிபோன மீசை, தாடி பற்றி கவலையோடு சொன்னார் ரியோ. அநேகமாக ரியோவை இந்த கெட்டப்பில் மீடியாவில் பார்ப்பது முதன்முறைதான்.

‘என்னைய ராணியாகப் பார்க்கணும்னு பிக்பாஸ் ஆசைப்பட்டிருக்கிறார்’ என கெட்டப்பில் காதல் வசனத்தோடு ஆரம்பித்தார் நிஷா.

பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவருமே நடிப்போடு தொடர்புள்ளவர்கள். அதனால், புதிய டாஸ்க்கை உற்சாகத்தோடு போட்டிப் போட்டுகொண்டு நடித்தார்கள்.

சுரேஷ் கேரக்ட்ராகவே மாறி அடிக்கடி கேமரா முன் நின்று பயமுறுத்திக்கொண்டிருந்தார். மேடை நாடகக் கலைஞரின் தோற்றம் பொருந்திபோனது. ஒரு சாயலில் பழம்பெரும் நடிகர் ஆர்.எஸ்.மனோகரை நினைவூட்டினார் சுரேஷ்.

23-ம் புலிகேசி மன்னனாக தன் நடிப்பை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்தும் சுமராகவே செய்துகொண்டிருந்தார். முதல் நபராக அரக்கர்களுக்குச் சவாலாகக் களத்துக்குச் சென்றவர் ஷனம். பாலா தயங்கி, என்னைய விட்டுடுங்க என கெஞ்சியபோது தானே சென்றது பாராட்டுக்கு உரியது.

அரியாசனம் மாதிரி இருந்த இருக்கையில் உட்கார்ந்த ஷனமை, அரக்கர் சூழ்ந்துகொண்டு என்னென்னவோ சொல்லிப்பார்த்தார்கள். அதுவும் சுரேஷ் தன் பர்சனல் அட்டாக்கை நிகழ்த்திப் பார்த்தார். ‘உனக்கு அப்பறம் இருக்கு’ என்று மனதிற்குள் நினைத்து சிலையாய் உறைந்திருந்தார் ஷனம்.

’என் மகளை கிண்டல் செய்கிறார். நான் சென்றால் சுண்டல் செய்திருப்பார்கள்’ எனக் கிச்சுகிச்சு நிஷா ட்ரை பண்ண, ’இந்த நேரத்துலேயும் எதுகை மோனையா? என கவுண்டர் கொடுத்தார் ரம்யா.  வெற்றி ஷனம் பக்கமே. உள்ளே வந்தவர் என்னவெல்லாம் அரக்கர்கள் செய்வார்கள் என மற்றவர்களுக்கு கிளாஸ் எடுத்தார்.

’அட இவ்வளவுதானா… நான் போறேன்’ என்பதாக முன்வந்தார் சோம்ஸ். அவர் வெளியே வரும்போதே ‘நமக்கு ஒரு அடிமை கிடைச்சுடுச்சு’ என அனிதா சொல்லிவிட்டார். அதேபோல, சுரேஷின் தொப்பையைப் பார்த்ததும் (!) சிரித்துவிட்டார் சோம்ஸ். அவரை அப்படியே கடத்திக்கொண்டுபோய் முகத்தில் கரி பூசி அரக்கராக மாற்றினார்.

சோம்ஸ் வருகையைப் பற்றி சுரேஷ் கமெண்ட் செய்கையில், “முதலில் நஞ்சு.. பின் பிஞ்சு’ என்றார். அப்ப, சுரேஷின் புது பேஷண்ட் ஷனம். பழைய பேஷண்ட் அனிதா நிம்மதியாகலாம்.

மூன்றாவதாக  அரசக் குடும்பத்திலிருந்து வந்தது பாலா. அவர் வந்து உட்காருவதற்குள் கீழே தள்ளிவிட, ஆட்டத்தை மறுக்கா ஆடுங்க என உத்தரவிட்டார் பிக்கி.

‘என் மகனைக் கொடுமைப் படுத்துகிறார்கள். அவன் வரும்வரை நான் உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன்’ என்ற நிஷாவுக்கு ‘ஆமாம். இப்போதான் வயிறு நிறைய சாப்பிட்டீர்கள். உடனே சாப்பிட முடியாது’ என கவுண்டர் கொடுத்தார் ரம்யா. இந்த புது காம்பினேஷனில் இன்னும் சில ஜோக் (!)கள் கிடைக்கும்போல.

ஸ்டெடியாக இருந்த பாலா, லேசாக தலையாட்டி விட்டாராம். அதை ஒரு குற்றம் என தோல்வியை அறிவித்தார் பாலா. இன்னோர் அரக்கர் கூடினார்.

அடுத்தது நீ போ… நீ போ என தள்ளுமுள்ளுக்குப் பிறகு ரியோ வந்தார். கதவைத் திறந்தவர் கன்னத்தில் கை வைத்து கீழே உட்கார்ந்துகொண்டார். அரக்கர் கூட்டம் சூழ்ந்து ரகளை செய்தது.

‘அவன்.. இவன்’ என ஒரு டயலாக்கைப் பேச ஆரம்பித்த அனிதா உஷாராகி, ‘ இந்தச் சாக்கில் அவன் இவன்’ என்று சொல்கிறேன். அதைக்கூட கவனிக்காமல் இருக்கிறார் என ஜகா வாங்கினார். இந்த டாஸ்க் முழுக்கவே அனிதாவின் குரல் கேட்டுக்கொண்டே இருந்தது. எவிக்‌ஷன் நாமினேஷனில் இருப்பது அவங்க ஞாபகத்துக்கு வந்துவந்து போகும்ல. ரியோவையும் அசைய வைக்க அரக்கர் கூட்டத்தால் முடியவில்லை.

’அப்பாடா…’என்றவாறே வீட்டுக்குள் நுழைந்த ரியோ, இந்த வெற்றிக்கு ஏதாவது பானம் கிடைக்குமா… என்று கேட்க, ‘சோமாபானம் கேட்கிறார்’எனப் போட்டுக்கொடுத்தார் நிஷா. பிக்பாஸ் வீட்டில் சோமபானமா?

அடுத்த இளவரசி சம்யுக்தா வெளியே வந்தார். அவரை அசைய வைக்கவும் பர்சனல் அட்டாக் எல்லாம் செய்துபார்த்தார் சுரேஷ். ‘பாம்பை பக்கத்துலேயே போட்டிருக்கியே’ என்றபோது அர்ச்சனா அடக்கினார். அப்போது பலருக்கும் அதன் அர்த்தம் புரியவில்லை.

சம்யுக்தா வெற்றிபெற்று, டாஸ்க் முடிந்ததும் அனிதா அதை விளக்கினார். ‘சம்யுக்தா பக்கத்தில் ஷனம். அதான் பக்கத்தில் பாம்பு என சுரேஷ் சொன்னாராம். ஓஹோ!

அரக்கர் vs ராஜா டாஸ்க்கின் இன்றைய பகுதியை முடித்து வைத்தார் பிக்கி. தான் எதிர்பார்த்தது எதுவும் நடக்க வில்லை என்ற சோர்வு பிக்கியின் குரலில் தெரிந்தது.

இனி, அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமே கொடுக்கப்படும். 5 கிலோ கேஸ், 1000 லிட்டர் தண்ணீர் என ரேஷன் அளவை அறிவித்தார் பிக்பாஸ். சிலருக்கு இதன் சீரியஸ்னஸ் தெரியவில்லை.

ஆனால், சமையல் பொறுப்பை கையில் வைத்திருக்கும் அர்ச்சனாவுக்கு கண்ணீர் வரவைக்கூடிய அளவுக்கு இது பெரிய ஷாக்காக இருந்தது. அர்ச்சனாவை சமாதானப்படுத்த, இன்றைய எப்பிசோட்டுக்கு ‘நன்றி வணக்கம்’ சொன்னார் பிக்பாஸ்.

பிக்பாஸ் பற்றிய முந்தைய பகுதிகளைப் படிக்க கீழ் உள்ளவற்றில் கிளிக் செய்க

ஒன்று | இரண்டு | மூன்று | நான்கு | ஐந்து

ஆறு | ஏழு | எட்டு | ஒன்பது | பத்து

பதினொன்று | பன்னிரெண்டு | பதிமூன்று | பதிநான்கு | பதினைந்து

மாவட்ட செய்திகள்

Most Popular

பங்குச் சந்தைகளில் எவை எவை தாக்கத்தை ஏற்படுத்தும்?…. பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு

நிதி நிலை முடிவுகள், பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகள் உள்ளிட்டவை இந்த வாரத்தில் பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தினை முடிவு செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என்று பங்குச் சந்தை நிபுணர்கள்...

கருணாஸ் யாத்திரை தடுத்து நிறுத்தம்… போலீசார் தம்மை கேவலப்படுத்துவதாக புகார்…

முக்குலத்தோர் புலிப்படை சார்பில் யாத்திரை சென்ற எம்எல்ஏ கருணாஸை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முக்குலத்தோர் புலிப்படை தலைவர்...

“கூட்டணி பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்குங்கள்” – அதிமுகவுக்கு, பிரேமலதா வலியுறுத்தல்

கூட்டணி பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டுமென அதிமுகவுக்கு, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார். தமிழக சட்டமன்ற தேர்லையொட்டி, அதிமுக சார்பில் முதலமைச்சர் எடப்பாடி...

நான் யார் பேச்சையும் கேட்க மாட்டேன்; என்னை கேள்வி கேட்டால் மிதித்துவிடுவேன்.. கடுமை காட்டிய சீமான்

வருகிற 2021 சட்டமன்ற தேர்தலுக்காக நாம் தமிழர் கட்சி தான் வேட்பாளர்கள் பட்டியலை முதலில் அறிவித்திருக்கிறது. இதுதொடர்பாக மதுரை ஒத்தக்கடையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில்...
Do NOT follow this link or you will be banned from the site!