பிக்பாஸில் முதல் அழுகையும் நிஷாவின் நிஜ ‘பிளாக்’ ஹியூமரும்! #BiggBoss4

 

பிக்பாஸில் முதல் அழுகையும் நிஷாவின் நிஜ ‘பிளாக்’ ஹியூமரும்! #BiggBoss4

இன்றைய பிக்பாஸ் எபிசோட் பலருக்கும் நெடுநாள் நினைவில் இருக்கும். ஏனெனில், பலரும் அறிந்த முகங்களுக்குப் பின் உள்ள அறியாத உணர்வுமிக்க கதைகளோடு அமைந்திருந்தது.

இதயம், உடைந்த இதயம் விளையாட்டு இன்றும் தொடர்ந்தது. பாலாஜி இதயத்தை சுரேஷ் சக்கரவர்த்திக்கும் ரியோவுக்கும் தந்தார். அடுத்து வந்த அனிதா சம்பத் முதலில் உடைந்த இதயத்தை ஜித்தன் ரமேஷூக்கும் சம்யுக்தாவுக்கும் சொல்ல வேண்டுமே என்பதுபோல ஒரு காரணத்தைச் சொல்லிக்கொடுத்தார். இதயத்தை வேல்முருகனுக்கும் நிஷாவுக்கும் கொடுத்தார்.

பிக்பாஸில் முதல் அழுகையும் நிஷாவின் நிஜ ‘பிளாக்’ ஹியூமரும்! #BiggBoss4

’நிஷாவைப் பார்த்தால் என் அம்மாவைப் போலவே இருக்கு’ என்று இயல்பாகச் சொல்லத்தொடங்கினார். அவரின் அம்மாவும் கறுப்பு நிறம்தானாம். நகை போட்டுக்கொண்டால்கூட கலரை இன்னும் டார்க்காக காட்டும் என போட்டுக்கொள்ள மாட்டாராம் என்றார். அப்போது நமக்குத் தெரியவில்லை. இன்றைய எபிசோட்டின் ஒன்லைனே அதுதான் என்று. அனிதா சொல்லும்போதே அழத் தொடங்கி விட்டார். பிக்பாஸ் சீசன் 4-ல் முதல் அழுகையாளி அனிதாவே.

பிக்பாஸில் முதல் அழுகையும் நிஷாவின் நிஜ ‘பிளாக்’ ஹியூமரும்! #BiggBoss4

இரவில் பாலாஜியும் ஷிவானியும் வாக்கிங் போய்க்கொண்டே, ‘புரோக்கன் ஹார்ட் நிறைய கொடுத்தாங்களே அதுக்கு ஃபீல் பண்றீங்களா?’ என்று பாலா கேட்டதர்கு “லைட்டா ஃபீல் பண்றேன்’ என்றார் ஷிவானி. இந்த ’லைட்டா’ என்ற ஒற்றை வார்த்தை மக்கள் கலைஞன் வடிவேலு பயன்படுத்தியது அல்லவா… அதனால் வடிவேலு முகம் அகக்கண்ணில் (நமக்கென்ன அகம் டிவியா இருக்கு) வந்துபோனது.

இன்னொரு பக்கம் அனிதா சம்பத் செய்திகள் வாசிப்பதுபோல சுரேஷ் சக்கரவர்த்தியைக் கலாய்த்தார். ஆனால், அது ரசிக்கும்படியாகத்தான் இருந்தது. அதை சுரேஷ் ரசித்தாரா இல்லையா என்று தெரிவதற்குள் ‘வணக்கம்’ சொல்லி எச்சில் துப்புவார்களே… என்று அவரின் நட்பு வட்டத்திற்குள் உள்ள ஜோக் (!) ஒன்றை அடித்தார்.

பிக்பாஸில் முதல் அழுகையும் நிஷாவின் நிஜ ‘பிளாக்’ ஹியூமரும்! #BiggBoss4

அது அனிதாவுக்கு வருத்தத்தை உண்டாக்க, ‘நாளை அவரிடம் நேரடியாகவே சொல்லிவிடுவேன்’ என மற்றவர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தார். பிக்பாஸூம் ஆர்டர் எடுப்பவர் நோட் பண்ணிக்கொள்வதைப்போல ‘இருக்கு… நாளைக்கு சம்பவம் இருக்கு’ என்று குறித்துக்கொண்டிருக்கலாம்.

பிக்பாஸின் இரண்டாம் நாள்…

பிக்பாஸில் முதல் அழுகையும் நிஷாவின் நிஜ ‘பிளாக்’ ஹியூமரும்! #BiggBoss4

காலையில் ’தர்பார்’ படத்தின் சும்மா கிழி பாடலை ஒலிக்க விட்டார் பிக்பாஸ். நேற்றைய விட இன்றைக்குப் பலரும் ஆர்வத்துடன் ஆடினார்கள். திடீரென்று பாடல் நின்றுபோக, என்னாச்சு என எல்லோரும் குழம்ப ’உடைந்த இதயத்தை ஒட்ட வைக்க இந்த வாரம் எலிமினேஷன் கிடையாது’ என்றார். அவர்களுக்கு சந்தோஷம். என்னவாக இருக்கும் நினைத்த ஆடியன்ஸ்க்கு இதுதானா… என்றவாறே ‘ரோஹித் ஷர்மா அவுட்டா இல்லையா… மும்பை எவ்வளவு ஸ்கோர்?’ என 20 செகண்ட் பிக்பாஸிலிருந்து பர்மிஷனில் சென்று வந்தார்கள்.

 பிக்பாஸ் ஆசைப்படியே அனிதா ’எச்சில்’ பிரச்சனையைக் கையில் எடுத்தார். முதலில் சுரேஷ்க்கு இதில் என்ன பிரச்சனை என்பதுபோலத்தான் கையாண்டார். ஆனால், அனிதா ’செய்திவாசிப்பாளர்கள் எச்சில் தெரிக்க பேசுவார்கள். அதனால் அவர்களோடு பேசவே மாட்டேன்’ என்று சுரேஷ் சொன்னதாக விஷயத்தை மாற்ற, சுதாரித்துக்கொண்டார்.

பிக்பாஸில் முதல் அழுகையும் நிஷாவின் நிஜ ‘பிளாக்’ ஹியூமரும்! #BiggBoss4

நான் பொதுவாகச் சொல்லவில்லை. ஒரு குறிப்பிட்ட செய்தி வாசிப்பாளரைத்தான் சொன்னேன் என்றார். (பாஸ்… அவங்களை மட்டுமே சொன்னாலும் தப்புத்தான். ஏனென்றால், அது உங்கள் குறுகிய வட்டத்தில் இருந்தால் வேறு யாருக்கும் தெரியாது. பெரிய ஷோவில் சொல்வது தப்புதானே? ஆனால், இதை கடைசி வரை சுரேஷ் புரிந்துகொள்ளவே இல்லை. ஆனால், அனிதாவும் தான் சொல்வது தவறில்லாமல் சொல்லிவிட வேண்டும் என குறுக்கே பேச விடாமல் பார்த்துக்கொள்கிறார்.

அதேபோல வாய்ப்பை எதிர் நபருக்கும் கொடுக்க வேண்டும் அல்லவா… அவருக்கு தான் பேசும் விதம் சரியா… பேசுகிற விஷயம் சரியான கோணம்தானா… என்பதில் சந்தேகம் இருந்ததுபோல தோன்றியது. அதனால்தான் சுரேஷ் இவ்வளவு வளர்த்தாமல் ’ஸாரி’ எனச் சொல்லிவிட்டால் நல்லா இருக்குமே என்பதுபோல அவரசரப்பட்டார். ஆனால், சுரேஷ் அனுபவசாலி அதனால் நிதானமாக அவர் இந்த விஷயத்தில் வேறு வகையாகவும் கையாண்டு விட்டார். கேமரா முன்நின்று டிஸ்க்லைமராகச் சில வரிகளைச் சொல்லிக்கொண்டிருந்தார். கடைசியாக ரேகா பஞ்சாயத்து தலைவியாக, ஷேக் ஹேண்ட் செய்து வெள்ளைக்கொடி பறக்க விடப்பட்டது.

பிக்பாஸில் முதல் அழுகையும் நிஷாவின் நிஜ ‘பிளாக்’ ஹியூமரும்! #BiggBoss4

இவ்வளவு நீட்டி எழுதுமளவு பிரச்சனையும் இது இல்லைதான். ஆனாலும் பிக்பாஸின் முதல் சண்டை சின்னதாக இருந்தாலும் வரலாற்றில் பதிவு செய்ய வேண்டும் அல்லவா?

’நிலவே என்னிடம் நெருங்காதே…’ என்று ரேகா கேமராவைப் பார்த்து பாட ஆரம்பிக்க, நல்லாத்தானே போய்கிட்டு இருக்கு எனப் பயம் கவ்வியது. ஆனால், ரேகா நன்றாகவே பாடினார். சட்டென்று ஆஜிஸூம் அவரோடு இணைந்துகொள்ள அழகான பாடல் அரங்கேறியது. ஆஜிஸின் குரல் குழந்தைமை உடைந்து வரும் பருவம். அதனால், அது இன்னும் அழகாக ஒலித்தது.

பிக்பாஸில் முதல் அழுகையும் நிஷாவின் நிஜ ‘பிளாக்’ ஹியூமரும்! #BiggBoss4

’உங்களின் கடந்தகால கதையை  மறைக்காமல் ஒளிக்காமல் ஷேர் பண்ணுங்க’ என பிக்பாஸ் உத்தரவிட்டார். உண்மையில் இது பிக்பாஸில் நல்ல பகுதியே. சென்ற சீசனில் வரும்வரை ரேஷ்மாவைப் பலருக்கும் தெரிந்திருக்காது. ஒரு படத்துல சூரியோட வருவாங்களே… புஷ்பா புருஷன் காமெடியில’ என்றுதான் இவரை அறிமுகப்படுத்திக்கொண்டார்கள். ஆனால், அவர் வாழ்வில் நிறைமாத கர்ப்பினியாக தன் பிரசவத்திற்கு தானே காரை ஓட்டிச் செல்லும்போதே பிரசவம் நடந்ததைச் சொன்னபோது அழுத்தமாகப் பலரின் மனதில் பதிந்துகொண்டார் ரேஷ்மா. அப்படித்தான் இன்றும் இருக்கும் என யூகித்த மாதிரியே சென்றது

பிக்பாஸில் முதல் அழுகையும் நிஷாவின் நிஜ ‘பிளாக்’ ஹியூமரும்! #BiggBoss4

முதல் நபராக பாடகர் வேல்முருகன் வந்தார். ‘விருத்தாச்சலம் பக்கத்துல குக்கிராமம் எங்க ஊரு… மத்தியானம் சத்துணவு சாப்பாட்டை வீட்டுக்கு எடுத்து வருவதற்காகவே பள்ளிக்கூடம் போவேன்’ என ஆரம்பித்துப் பேசினார். அது வேல் முருகன் பேச்சாக மட்டுமே பார்த்துவிட முடியாது. அவரின் தலைமுறையில் உள்ள தமிழகத்தின் பெரும்பாலானோரின் அனுபவம் அது. மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய காமராஜரும் (காமராஜருக்கு முன்பே நீதிக்கட்சி காலத்தில் மதிய உணவு திட்டம் இருந்த வரலாறும் உண்டு)  அதை முறையாகவும் வளர்த்தெடுத்த திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளும் இம்மண்ணை எவ்வளவு நெருக்கமாகப் புரிந்துவைத்திருந்தார்கள் என்பதற்கு சாட்சி. சத்துணவு திட்டமே இல்லையெனில் வேல்முருகன் தலைமுறையில் பலரும் கைநாட்டாகவே இருந்திருக்கக்கூடும். ஓகே. கம்மிங் பேக் கிரிக்கெட் ஸாரி… பிக்பாஸ் (ஐபிஎல் தமிழ் கமெண்ட்ரி கேட்டு அப்படி வந்துடுச்சு)

வேல்முருகனின் ஊரில் பாடிய பாடல்களைப் பாடிக்காட்டினார். கலை இரவுகளில் பாடப்படும் பாடல்…

”ஆடு மேய்ஞ்சு வயிறு நிறைஞ்சிருக்கு
மாடு மேய்ஞ்சு வயிறு நிறைஞ்சிருக்கு
மேய்ச்சவன் வயிறு காய்ஞ்சி கிடக்குது!” என்பதாகப் பாடினார். பல மேடைகளில் கேட்ட பாடல். 

பிக்பாஸில் முதல் அழுகையும் நிஷாவின் நிஜ ‘பிளாக்’ ஹியூமரும்! #BiggBoss4

அம்மா, அப்பா இறந்ததும் சென்னைக்கு வர பஸ் டிக்கெட் பணத்திற்கு ஒரு வாரம் உழைத்து சேர்த்ததையும், இசைக்கல்லூரியில் அவருக்கு கிடைத்த காதலையும் இடை மறித்த அழுகையைக் கட்டுப்படுத்திக்கொண்டு சொல்லி முடித்தார் வேல்முருகன். அவர் பேசிக்கொண்டிருக்கையில் இந்த வாழ்க்கை முறையில் அதிகம் தொடர்பில்லாத ஷிவானி அழுதார். கூடவே அனிதாவும். அதற்கு காரணம், வேல்முருகன் பாடிய அம்மா பாடல்.

 அடுத்து வந்தது ஷனம் ஷெட்டி. சென்ற சீசன் பிக்பாஸில் வந்த தர்ஷனின் அன்புக்கு உரியவராகத்தான் பலருக்கும் தெரிந்தவர். நீண்ட பிளாஸ்பேக்குக்குச் செல்லாமல், தனக்கு நேர்ந்த விபத்தையும் அதனால் கிட்டத்தட்ட 14 மாதங்கள் நடக்கக்கூட முடியாமல் இருந்ததையும் மலஜல கழிப்பதை அப்பா சுத்தம் செய்ததை விவரித்தார். அதுவே அவரைப் பற்றிப் புரிந்துகொள்ள வைத்தது.

பிக்பாஸில் முதல் அழுகையும் நிஷாவின் நிஜ ‘பிளாக்’ ஹியூமரும்! #BiggBoss4

‘அம்மா, அப்பா காட்டுற அன்கண்டிசனல் லவ் மட்டுமே எனக்குப் போதும்’ என அவர் முடித்தது வெளியில் இருக்கும் யாருக்கோ சொன்ன செய்தியாகப் புரிந்துகொள்ளப்பட்டது. (ஆமாம்தானே?)

சென்ற சீசன் சாண்டியின் வேறொரு வெர்ஷன் நிஷா. அதுதான் இன்றும் நடந்தது. வேல்முருகனும் ஷனமும் அழுகை எனும் ஓர் உச்சபட்ச உணர்வு எல்லையில் சகப் போட்டியாளர்களையும் ஆடியன்ஸை நிறுத்த, மற்றோர் உச்சமான நகைச்சுவைக்கு எல்லோரையும் நொடியில் இழுத்து விட்டார் நிஷா.

பிக்பாஸில் முதல் அழுகையும் நிஷாவின் நிஜ ‘பிளாக்’ ஹியூமரும்! #BiggBoss4

’ஏம்மா, நான் வயித்துல இருக்கும்போது குங்குமப்பூ வாங்கித் திங்க வேண்டியதுதானே’னு கேட்டேன். 12 பாக்ஸ் தின்னேன். அப்படியும் இந்தக் கலர்லதான் நீ பொறந்தேன்னு சொன்னாங்க’ என ’பிளாக்’ ஹியுமரில் தொடங்கினார்.

’பெரிய வீடு… நான் அம்மா எல்லாம் கிச்சன்லதான் படுத்துப்போம்’ என்று அவர் சொன்னது எழுத வேண்டிய நல்ல சிறுகதையின் மைய வரி. ஆனால், அதை பெரிய ஜோக் ஒன்றைச் சொல்வதற்காகப் போகிற போக்கில் சொன்னார். அவர் முடித்த ஜோக் இப்போது நினைவில் இல்லை. ஆனால், இந்த வரி மறக்காது போலிருக்கிறது.

பிக்பாஸில் முதல் அழுகையும் நிஷாவின் நிஜ ‘பிளாக்’ ஹியூமரும்! #BiggBoss4

’பிளாக்’ ஹியுமர் என்பதற்கு நிஷாவின் இன்றைய பகிர்வு வேறு அர்த்தத்தைத்தான் கொடுத்தது. ‘நான் கறுப்பா இருக்கேன்னு வருத்தம் எல்லாம் இல்லை. ஆனா, ஸ்கூல் ஜனகனமண பாடும்போதெல்லாம் என்னை ஏன் கடைசியில நிற்கச் சொன்னாங்கனு புரிஞ்சப்பதான் வருத்தமாயிடுச்சு’ என்பதாகச் சொன்னார்.

உண்மையில் இப்போதும் எந்தப் பள்ளிக்குச் சென்றாலும், ஆண்டு விழாக்களில் வரவேற்கவும் சந்தனம் கொடுக்கவும் மேடையில் முன் வரிசையில் ஆடுவதும் சிவப்பு நிற குழந்தைகளாக இருப்பதைப் பார்க்க முடியும். எத்தனை நிஷாக்கள் பின் வரிசையில் நிற்கிறார்களோ…

பிக்பாஸில் முதல் அழுகையும் நிஷாவின் நிஜ ‘பிளாக்’ ஹியூமரும்! #BiggBoss4

’முன் வரிசையில் நின்ற யாரும் இப்போ என்ன பண்றாங்கன்னு யாருக்கும் தெரியல… ஆனா ரொம்ப பின்னாடி நின்ன நான்தான் இப்போ முன்னாடி நின்னு பேசிட்டு இருக்கேன்’ என்று நிஷா சொன்னது திமிரில் அல்ல நிறைந்த தன்னம்பிக்கையில்.

’கறுப்பா இருந்தாலும் கலையா இருக்கிற’னு சொன்ன எல்லாரும் சிவப்பாகத்தான் இருப்பான். அவங்களுக்கு கறுப்பா இருக்கிற கஷ்டம் புரியாது’ என வெடிகுண்டு திரிகளைக் கொளுத்திப்போட்டுக்கொண்டே இருந்தார். ஒரு நிறத்தால், அதுவும் கறுத்த பெண் எனில் இரட்டை ஒடுக்கு முறைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதைப் போகிற போக்கில், ஆனால் முகத்தில் அறைவதைப்போல சொல்லிக்கொண்டிருந்தார் நிஷா. இதுவும் ஒரு நிஷாவின் குரல் அல்ல, தமிழகத்தில் குறைந்த பட்சம் ஒரு கோடி நிஷாக்கள் இருப்பார்கள். அவர்களுக்கான குரல்.

’கறுப்பா இருக்கிறவங்களுக்கு தாழ்வுமனப்பான்மை என்றைக்குமே இருந்ததில்லை. ஆனால், சிவப்பா இருக்கிற நீங்கதால் அதை திணிக்கிறீங்க’ என்றபோது உணர்ந்து கைத்தட்டல் கிடைத்தது. மேலே உள்ளதையெல்லாம் படிக்கும்போது நிஷா உணர்வுபூர்வமான, செறிவான, இறுக்கமான உரை நிகழ்த்தியிருப்பார் என்று நினைக்காதீர்கள். ஒவ்வொரு பத்துநொடிக்கும் சிரித்துக்கொண்டே இதைக் கேட்டோம்.

பிக்பாஸில் முதல் அழுகையும் நிஷாவின் நிஜ ‘பிளாக்’ ஹியூமரும்! #BiggBoss4

நுண் உணர்வுகளைப் பகிர்வது என்பது இருபுறமும் கூரான கத்தியைப் போன்றது. பேச்சாளி தன் வலியை முகத்தில் காட்டாமல் சொல்லிக்கொண்டிருப்பார். ஆனால், ஏதோ ஒரு நொடியில் கத்தி எப்போது எந்தப் பக்கம் இறங்கிக்கொண்டிருக்கிறது என்பதை அறிய முடியாது. அதேபோலத்தான் சட்டென்று நிஷாவின் அடுத்த இரண்டு நிமிட பேச்சு அமைந்தது.

’இது யாருக்கும் தெரியாது’ என்று ஆரம்பித்து, ஒரு விபத்தில் தன் குழந்தைக்கு காது பிய்தெறியப்பட்டதைச் சொன்னதும் கத்தியின் மறுமுனை பார்வையாளர் பக்கத்திலும் இறங்கியது. நொடியில் அழுகையின் பக்கம் சாய்ந்தார்கள். ரியோ, எனக்குத் தெரியாது… தெரியாது… என தலையைக் குனிந்து அழுதார். ஆனாலும், அதை ஓரிரு நிமிடங்களில் தானே சரி செய்துகொண்டு ஹியுமர் பக்கம் வண்டியைத் திருப்பினார் நிஷா.

பிக்பாஸில் முதல் அழுகையும் நிஷாவின் நிஜ ‘பிளாக்’ ஹியூமரும்! #BiggBoss4

’அழுகிறது எனக்கு வராது’ என்றவர் பேசி முடித்தும், ரியோவைக் கட்டிக்கொண்டு அழுதது அடித்து பெய்யும் பெரு மழையின் கடைசி நிமிடங்கள்.

அத்தோடு போதும் என பிக்பாஸ் பிரேக் விட்டார். எல்லோரும் வெளியே வந்தனர். மெளனமும் இறுக்கமும் சூழ்ந்திருந்தது. எவராலும் இயல்பாக நடக்க முடியவில்லை. ‘செண்டிமெண்டாகப் பேசினால் கலாய்க்க மாட்டோம்’னு நினைக்காதே என சூழலைச் சகஜமாக்க முயன்றார் ரியோ. அதற்கு நிஷா ஒத்துழைக்க அசல் கலைஞராக ஒளிர்ந்தார் நிஷா.

பிக்பாஸில் முதல் அழுகையும் நிஷாவின் நிஜ ‘பிளாக்’ ஹியூமரும்! #BiggBoss4

தொடக்கத்தில் சொன்னதுபோல, இந்த எபிசோட் சிலரின் வாழ்க்கை பதிவில் பலரும் பொருந்திகொள்வதுபோல இருந்தது. மூன்று பேர் மட்டுமே இன்று பகிர்ந்திருக்கிறார்கள். நாளை இன்னும் என்னென்ன ஆச்சர்யம் காத்திருக்கிறதோ தெரியவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றி என்பது வெறும் கிசுகிசு கேட்கும் மனநிலை மட்டுமல்ல, ஏதோ ஓர் இடத்தில் தன்னைப் பொருத்தமுடிகிறது என்ற நிலைதான் பெரும் வெற்றியைத் தருகிறது என்று நினைப்பதற்கு இன்றைய எபிசோட் சரியான எடுத்துக்காட்டு.

முந்தைய எபிசோட்கள் பற்றிய பதிவுகளைப் படிக்க:

01 யாரு ஓவியா… யாரு ஜூலி… யாரு கவின்… யாரு லாஸ்லியா? முதல்நாளிலேவா தேடுவீங்க? #BiggBoss4

02 ’உங்க வேலையை ஆரம்பிச்சிட்டீங்களே பிக்பாஸ்’ நாள் 2 – #BiggBoss4