Home சினிமா எட்டு நிமிடத்தில் இதயங்களை வென்ற சுரேஷ் தாத்தா - பிக்பாஸ் 12-ம் நாள் #BiggBoss4

எட்டு நிமிடத்தில் இதயங்களை வென்ற சுரேஷ் தாத்தா – பிக்பாஸ் 12-ம் நாள் #BiggBoss4

புதிய தலைவருக்கான கடும்போட்டி, நட்பில் வரும் எதிர்பார்ப்பு, அது பொய்க்கையில் அடையும் ஏமாற்றம், ஒருவரின் முகம் சட்டென்று மாறுவது, உருக்கும் நாட்டுப்புறப் பாடல் என உணர்ச்சி பெருக்குடன் அமைந்திருந்திருந்தது பிக்பாஸ் 12 நாள் எபிசோட்.

பிக்பாஸ் 12-ம் நாள்

காலையில் எல்லோரையும் எழுப்புவதற்கு ’மரணம்.. மாஸூ மரணம்’ என அலற விட்டிருந்தார் பிக்பாஸ். ’என்ன பாட்டு இது’ ஒருசில நொடிகள் குழம்பி, பின் டான்ஸ் ஆடத் தொடங்கினார் அனிதா. நிஷாவும் அர்ச்சனாவும் வீட்டுக்குள்ளேயே செந்திலின் ’ஹவா.. ஹவா…’ டான்ஸ் ஆட முயன்றார்கள். சீரியஸாக பெட்ஷீட்டை மடித்துக்கொண்டிருந்தார் ரியோ. மற்றவர் டான்ஸை ரசித்துக்கொண்டிருந்தார் ஜித்தன் ரமேஷ்.

இப்படி, காலை பாட்டுக்கு டான்ஸ் ஆடாதத்தைக் கவனித்த பிக்கி, அதற்கும், தான் கூப்பிட்டால் லேட்டாக வருவதையும் காரணங்களாகச் சொல்லி லக்ஸரி பட்ஜெட்டில் 200 பாயின்டை லவிட்டிக்கொண்டார். இது இரண்டாம் வாரம்தான். அடுத்தடுத்த வாரம் என்றால் இன்னும் அதிக பாயிண்டுகளை எடுத்துக்கொள்வேன் என மிரட்டினார்.

அதைப் படித்தவர் ஷிவானி. வாலைபலத்தோலில் வலுக்கி விழுந்து என்பதாக இருந்தது அவர் தமிழ் உச்சரிப்பு. ஆனால் 2K கிட்ஸ் தமிழ் படிக்கிறார் என்பதே ஆச்சர்யம்தான்.

சம்யுக்தா வழியும் கண்ணீரை யாரும் அறியாமல் துடைத்துக்கொண்டிருந்தார். ஷிவானி, டிஸ்யூ பேப்பர் கொடுத்தபோது ‘பிள்ளையின் பிரிவு’ என்றார். அர்ச்சனா வந்து ஆறுதல் சொல்ல, சுபம் போட்டு அடுத்த காட்சிக்கு விரைந்தார் பிக்பாஸ்.

’ஆடலும் பாடலும்’ கலக்கியது யார் என்ற முடிவெடுக்கச் சொன்னார் பிக்கி. ஒருங்கிணைப்பாளர் அர்ச்சனா. யாரைச் சொல்வது… இவரைச் சொன்னால் அவர் கோவிச்சுப்பார் என எல்லோரும் தயங்க, அர்ச்சனா தனது நிகழ்ச்சித் தொகுப்பாளர் பணியைத் தொடங்கினார்.

ஒவ்வொருவர் பெயரைச் சொல்லி எத்தனை ஓட்டு எனக் கேட்டார் அர்ச்சனா. பல சீசனில் இப்படி ஒருங்கிணைக்க ஆள் இல்லாததே பல குழப்பங்களை ஏற்படுத்தியது (எனக்கு அதுதானே வேணும் – பிக்பாஸின் இன்றைய மைண்ட் வாய்ஸ்). ஆனால், அர்ச்சனா குழப்பம் இல்லாமல் ஓட்டுகளைக் கேட்டு முடிவெடுத்தார்.

கேபிரியல்லா மற்றும் வேல்முருகனுக்கு 14 ஓட்டுகள் கிடைக்க இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். கேபி அவர் டான்ஸர் என்பதால் எதிர்பார்த்ததுதான். வேல்சு உயிரைக் கொடுத்து ஆடினதுக்குக் கொடுக்கலாம்தான். இது பெரிய அடிதடி, மனஸ்தாபம் இல்லாமல் முடிய, அடுத்த கத்தியை விட்டெறிந்தார் பிக்கி.

இந்த வாரத்தில் அதிகம் ஆர்வத்துடன் பங்கேற்றவர் யார்? என்று தேர்ந்தெடுக்கச் சொன்னார். அதிக ஓட்டுகள் விழுந்ததால் ரியோ தேர்ந்தெடுக்கப்பட்டார். அதெல்லாம் சரி. இதை வெச்சி என்ன செய்யபோறீங்க பாஸ்? அங்கேதான் ட்விஸ்ட். ரியோ, வேல்ஸ், கேபி மூவரும் அடுத்த வார கேப்டனுக்கான நாமினேஷனாம். இவர்களில்  யாருக்கு உங்க ஆதரவு என்று இன்னொரு சர்வேயைத் தொடங்கினார்.

கேப்ரியல்லாவுக்கு சுரேஷ் மட்டுமே ஆதரவு தெரிவித்து எழுந்தார்.மற்ற இருவருக்கும் கணிசமாக ஓட்டுகள் விழுந்தது. ஓ! அதன் அடிப்படையில் கேப்டன் தேர்வா என்றால்… அதுவும் இல்லையாம். ரியோவுக்கு ஆதரவு கொடுத்தவர்களில் ஒருவர் ரியோவைத் தூக்கொள்ள வேண்டும். மற்றவர்கள் அவரைப் பிடித்தபடியே நிற்க வேண்டும். மூவருக்கும் இதே விதிகளாம். கேபிக்கு சுரேஷ் மட்டுமே ஆதரவு கொடுத்ததால் என்ன செய்வார் என்ற குழப்பம் எல்லோருக்கும்.

மோசமான பர்ஃபாமன்ஸ்க்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜித்தன் ரமேஷ், ஷிவானி இருவரும் ஓய்வெடுக்கும் அறைக்கு அனுப்பப்பட்டார்கள். ஜெயில் என்றுகூட சொல்லக்கூடாதாம் பாஸ். இன்னொரு பக்கம் எனக்கு ஏன் ஓட்டுப்போடல என அனிதாவிடம் கோபித்துக்கொண்டிருந்தார் சோம்ஸ்.

வருங்கால கேப்டனைத் தேர்ந்தெக்க, தூக்கி நிற்கும் நேரம் நெருங்கியது. சுரேஷ் துணிந்து இடுப்பு பெல்ட்டைக் கட்டிக்கொண்டு கேபியைத் தூக்கத் தயாரானார். ஆனால், கேபியோ வேண்டாம் தாத்தா… எனக் கெஞ்சிக்கொண்டிருந்தார். இந்த டாஸ்க் இப்படி மாறும் எனத் தெரிந்திருந்தால் வேறு யாரும்கூட கேபிக்கு ஆதரவு தெரிவித்திருப்பார்கள். இதுதான் விளையாட்டின் ட்விஸ்ட். சருகு போல இருக்கே என காலை அழுத்தினால், பெரும் பள்ளம் இருக்கும்.

கேபியை உப்புமூட்டைத் தூக்குவதுப்போல ஸ்டெடியாக நின்றார் சுரேஷ். ரியோவை பாலா தூக்கிக்கொள்ள, வேல் முருகனை ஆரி தூக்கிக்கொண்டார். முதுகு வலி உள்ளிட்ட பல தொந்தரவுகள் சுரேஷ்க்கு இருக்கு. தரையில் படுக்க முடியாது; அதனால் பெட்டில் படுக்கச் சொல்லி மருத்துவர்களே அறிவுறுத்திய உடல்நிலை சுரேஷ்க்கு. அவற்றைப் பொருட்படுத்தாமல் கேபியைத் தாங்கிக்கொண்டு நின்றார். கேபி குற்றவுணர்ச்சியில் இறங்கி விடவா… இறங்கி விடவா… என்று கேட்டவாறே அழுகை பூக்க உட்கார்ந்திருந்தார். அந்தக் காட்சி உண்மையிலே நெகிழ்ச்சியானதாக இருந்தது. பேத்திக்காக ஏழு கடல், ஏழு மலை தாண்டி பூப்பறிக்கச் சொல்வதாக நாம் கதைகளில் சொல்வோமே அப்படியான சித்திரம் அது. வியர்த்து ஒழுக, கால்கள் நடுங்க நின்றிருந்த சுரேஷ், ‘கேபி.. நல்லா இருக்கமா பிடிச்சுக்கோ’ என்று சொல்லிக்கொண்டிருந்தார்.

எடை அதிகம் உள்ள சுரேஷ் அந்த நிலையில் நிற்பது அபாயமான ஒன்று. தன் உடலோடு மனத்தைச் சண்டை போட வைத்து உறுதியோடு நின்றார். ஆனால், குற்றவுணர்ச்சி போல பெரும் சித்திரவதை இல்லை. அது கேபியைத் தொந்தரவு செய்ய 8;41 நிமிடங்களில் கீழே இறங்கி விட்டார். ‘ஏன் இறங்கின?’ என்று கோபித்துக்கொண்டார் சுரேஷ். கேபி இறங்கியதும்தான் மற்றவர்கள் நிம்மதியானார்கள். நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சிகளால் சுரேஷ் மீது எதிர்மறை பிம்பம் கட்டமைக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்று அது நெகிழ்ந்து உருகி, ’பாசமிகு ஊர்பெருசு’ எனும் அன்பு வந்திருக்கும் அனைவருக்கும்.

சுரேஷிடம் அழுதுகொண்டே மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தார் கேபி. இருவருக்கும் தாத்தா – பேத்தி என்பதாக ஓர் உறவு வலுவானது. (எத்தனை நாள் இருக்கும் எனத் தெரியாது. இப்போதைக்கு அழகான உறவாக மலர்ந்திருக்கிறது)

வேல்முருகனைத் தூக்கி நிற்கும் குழுவில் ரேகா இரண்டு கையையும் எடுத்துவிட்டதால், ரியோ வெற்றிபெற்றதாக அறிவிக்கபட்டு அடுத்த வார தலைவரானார். தூக்கி நின்ற ஆரிக்கு முடியவில்லை என்று அவுட்டாகியிருந்தால்கூட கொஞ்சம் நிம்மதியாக இருந்திருக்கும். சும்மா தொட்டவாறே நின்றவரால் அவுட்டாவது அநியாம்தான்.

”நான் அங்கே போய்ட்டு இருக்கையில் ’கேப்டன்’னு கூப்ட்டியே, எனக்கு ஆதரவா ஏன் எழுந்து நிக்கல’ என பாலாவிடம் கேட்டுக்கொண்டிருந்தார் கேபி. அத்தனை பெரிய கும்பலில் ஒரே ஒருவர் மட்டுமே

இன்னொரு பக்கம் வலியால் துடித்துக்கொண்டிருந்தார் சுரேஷ். அர்ச்சனா வந்து தைலம் தடவினார். வலி பொறுக்க முடியாமல் சுரேஷ் அழ, ‘அழாத மொட்டை’ என ஆற்றுப்படுத்தினார் அர்ச்சனா. இதை பார்த்த கேபி, ஓடிவந்து மீண்டும் அழ, ‘ஒண்ணுமில்லம்மா, போய் வென்னீர் வெச்சி எடுத்துட்டு வா” என்றார் சுரேஷ்.

வென்னீர் வைக்கப்போகும்போது அங்கே பாலா வர, புரோமோவில் போடப்பட்ட காட்சிகள். சென்னை 28 பாடலோடு லவ் கிரியேட் ஆவதைப் போல காட்டப்பட்டிருந்தது. உண்மையில் அப்படி இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், இருவர் இருவராக குரூப் சேர்ந்து வருகிறார்கள். சோம்ஸ் – அனிதா, நிஷா – ரியோ என்று. ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இல்லையெனில், பொசஸவ்நஸில் கடுப்பாகிறார்கள். அப்படியான குருப்பில் கேபி – ஷிவானி அல்லது கேபி – ஆஜித் என்று நினைத்திருந்தோம். இல்ல.. இல்லை. கேபி – பாலா என்று தெரிந்திருக்கிறது.

இன்னொரு பக்கம் ‘நான் என்ன சொல்ல வந்தேன்னா’ என்று சோம்ஸ் ஆரம்பிக்க, ‘நான் பண்ணினது தப்பு.. நீ பண்ணினது பெரிய பெரிய தப்பு’ என சோம்ஸ் ஒத்துக்கொள்ளும்வரை பேசிக்கொண்டே இருந்தார் அனிதா.

இரவானதும் ’பாடத் தெரிந்த’ வெள்ளைச் சாமி போல வேல்முருகன் பாடத் தொடங்கிவிடுவார் என்று நினைக்கிறேன். இன்று ‘ஓடக்கரை ஓரத்துல..’ என்ற அற்புதமான பாடலைப் பாட, அனிதா, ரியோ, சோம்ஸ் உள்ளிட்டோர் சுற்றி உட்கார்ந்து ரசித்து பாராட்டினர். பிக்பாஸே அப்பாடலில் மயங்கியிருப்பார்போல, பாடல் முழுவதும் ஒலிக்க விட்டிருந்தார்.

’ஓய்வறையிலிருந்து வெளியே போகலாம்’ என்று ஜித்தன் ரமேஷையும் ஷிவானியும் ரிலீஸ் செய்தார் பிக்பாஸ். ஜெயில் செட்டப் இல்லாததால் அங்கே செல்பவர்கள் மீது பரிதாபமே வர மாட்டங்குது பிக்கி. ஜெயிலிருந்து ரிலீஸ் ஆன இருவரையும் பொன்னாடை, பூச்செண்டு கொடுத்து வரவேற்றார்கள். அரசியல் வாதிகளைப் பார்த்து ரொம்ப கெட்டுபோயிட்டிங்க மக்களே..

”பிக்பாஸ் தூக்கம் வருது குட்நைட். லைட்டை ஆஃப் பண்ணுங்க’ என்று கேபி சொன்னதும், உடனே ஆஃப் பண்னினார். என்ன பாஸ் நடக்குது அங்கே?

உணர்ச்சி குவியலோடு பெரிய டிராமாவாக 12-ம் நாள் எபிசோட் இருந்தது. உண்மையில் நல்லதொரு எபிசோட்தான். காலை டான்ஸ் தொடங்கி குட்நைட் சொல்வது வரை பெரும்பாலான காட்சிகளில் கேபிரியல்லா வந்ததும் இன்றுதான். பின் கதைச் சுருக்கத்தை இன்றும் சொன்னார் பிக்பாஸ்.

01 யாரு ஓவியா… யாரு ஜூலி… யாரு கவின்… யாரு லாஸ்லியா? முதல்நாளிலேவா தேடுவீங்க? #BiggBoss4

02 ’உங்க வேலையை ஆரம்பிச்சிட்டீங்களே பிக்பாஸ்’ நாள் 2 – #BiggBoss4

03 பிக்பாஸில் முதல் அழுகையும் நிஷாவின் நிஜ ‘பிளாக்’ ஹியூமரும்! #BiggBoss4

04. நான் ஒண்ணும் சூப்பர் மாடல் இல்ல’ யாரை வம்புக்கு இழுக்கிறார் சம்யுதா! பிக்பாஸ் 3-ம் நாள் #BiggBoss4

05. அஜித் பாணியைப் பின்பற்றிய ’ஜித்தன்’ ரமேஷ்! பிக்பாஸ் 4-ம் நாள் #BiggBoss4

06. ஒருநாள் ஹீரோயின்… குடிகார அப்பா… அழ வைத்த அம்மா பாட்டு! பிக்பாஸ் 5-ம் நாள் #BiggBoss4

07. ஷிவானியின் ’கண்மணி’யும் கமலின் ’பாலிடிக்ஸ் பன்ச்’ம் இன்னும் சில பஞ்சாயத்துகளும் – பிக்பாஸ் நாள் 6 #BiggBoss4

08 நிஷாவின் முத்தம் எதற்காக… மிஸ் பிக்பாஸ் யார்… எவிக்‌ஷனில் டார்கெட் இவரே! பிக்பாஸ் 8-ம் நாள்

09. ரம்யா இன்னொரு ஓவியாவா? பிக்பாஸ் 9-ம் நாள் #BiggBoss

10. ரியோ –எம்.ஜி.ஆர், கேபி – சாய்பல்லவி, சுரேஷ் – பிரபுதேவா மற்றும் சிலரும்! பிக்பாஸ் 10-ம் நாள்

11. அர்ச்சனா எண்ட்ரியும்… டோட்டல் டேமஜ் விருதுகளும்! பிக்பாஸ் 11-ம் நாள் #BiggBoss4

மாவட்ட செய்திகள்

Most Popular

நல்ல பழக்கங்களை குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுப்போம்!

குழந்தைகள் தங்கள் தாய், தந்தை, உடன் பிறந்தவர்களைப் பார்த்து பார்த்துத்தான் ஒவ்வொரு விஷயத்தையும் செய்யப் பழகுகின்றனர். கண் விழித்ததிலிருந்து தூங்கச் செல்வது வரையில் ஒவ்வொரு நிகழ்வையும் அவர்கள் கண்காணிக்கிறார்கள். அதன்...

எம்ஜிஆர் செய்த அந்த செயலை உதயநிதி செய்ய முடியுமா? அமைச்சர் செல்லூர் ராஜூ

மதுரை பேச்சியம்மன் படித்துறை பகுதியில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ,...

27 ஆம் தேதி வெளியே வரும் சசிகலாவால் ஆட்டம் காணப்போகிறார் எடப்பாடி- முக ஸ்டாலின்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், சேலம் மாவட்டம் – எடப்பாடி தொகுதிக்குட்பட்ட குரும்பப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

திராவிட இயக்கத்தை அசைத்து பார்க்க சிலர் முயற்சி ஆனால் இங்கு யாரும் நுழைய முடியாது- அமைச்சர் செங்கோட்டையன்

எம்.ஜி.ஆரின் 104வது பிறந்த நாளையொட்டி கே.கே.நகர் சிவன் பார்க் எதிரில் உள்ள பொப்பிளி ராஜா சாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் முன்னாள் அமைச்சர், அமைப்பு...
Do NOT follow this link or you will be banned from the site!