Home சினிமா ரியோ –எம்.ஜி.ஆர், கேபி – சாய்பல்லவி, சுரேஷ் – பிரபுதேவா மற்றும் சிலரும்! பிக்பாஸ் 10-ம் நாள்

ரியோ –எம்.ஜி.ஆர், கேபி – சாய்பல்லவி, சுரேஷ் – பிரபுதேவா மற்றும் சிலரும்! பிக்பாஸ் 10-ம் நாள்

’ஸ்டேட்டர்ஜி’, ’எவ்வளவு ஓட்டு?’, ’கன்வின்ஸ் பண்ணுங்க’ தொடர்ச்சியாக பிக்பாஸ் பார்ப்பவர்களுக்குப் புரியும்படியான எபிசோட்டாக ஒன்பதாம் நாளாக இருந்தது. ’அப்படி என்னதான் பிக்பாஸ்ல இருக்கு’ திடிரென்று உள்ளே வரும் பார்வையாளர்களையும் இழுக்கணும் இல்லையா…. அதற்கான எபிசோட் பத்தாம் நாளுக்கு உரியது.

ஒன்பதாம் நாள் தொடர்ச்சியாகத் தொடங்கியது இன்றைய எபிசோட். எவிக்‌ஷன் ப்ரீ பாஸை ஒளிய வைக்க படாத பாடு பட்டுக்கொண்டிருந்தார் ஆஜித். ‘எங்கடா செல்லம் வைக்கிறேன்னு கூடவே சுத்திட்டு இருந்தார் கேப்ரியல்லா. அடப்பாவிங்களா… ஒரு தடவை இதை யூஸ் பண்றதுக்கு நித்தம் நித்தம் செத்து செத்துப் பொழைக்கணும் போலிருக்கே! இது வரமா… இல்ல சாபமான்னு மைண்ட் வாய்ஸ் ஆஜித்க்கு ஓடியிருக்கும்.

ரியோவின் குழந்தை போட்டோவைக் கொடுத்திருந்தார் பிக்பாஸ். அன்புருக அந்தப் போட்டோவைப் பார்த்துக்கொண்டிருந்தார். மற்றவர்கள் எல்லோரும் வாங்கிப் பார்த்துக்கொஞ்சிக்கொண்டிருந்தார்கள். சென்ற சீசனில் சாண்டிக்கு இப்படித்தான் அவர் மகளின் போட்டோ வந்தது.

பத்தாம் நாள்

நேற்று ஒரு பறவையைக் காட்டி ஆரம்பித்தால் நிறைய கண்டண்ட் கிடைத்தது. அதையே ஒரு சகுனமாக்கி இன்றைக்கும் அப்படி ஆரம்பித்தார் பிக்பாஸ். வாய்ப்பில்லை ராஜா…. வாய்ப்பில்லை.

’கலாசல கலசல….’ பாடலுக்கு செம டான்ஸ் போட்டாங்க. அப்படியே கட் பண்ணினால், கிச்சன் கேபினெட். என்னப்பா மணி எட்டரையாயிடுச்சு… இன்னும் ஒரு சண்டையைக் கூட காணோமே… என்று கேமராமேன் காத்திருக்க, ஷனம் எண்ட்ரி ஆனார். அங்கே பாலா சுத்தம் செய்துகொண்டிருக்க, இது எங்கள் வேலையாச்சே என உரசலை ஆரம்பித்தார்.

பாலா பிடிகொடுக்காமல் பேச, கிச்சன் கேப்டன் கேப்ரியல்லாவிடம் புகார் அளித்தார் ஷனம். அந்தப் பொண்ணு சண்டை வந்தால் எண்டர்டெயின்மெண்டா இருக்குனு சொல்ற ஆள். ‘பரவாயில்ல.. பரவாயில்ல’னு சொன்னதும் கொஞ்சம் சண்டை முற்றியது. ஆனால், பாலா வெளியே போய் கேமரா கிட்ட, ‘ஷனம் என்னை டார்கெட் பண்றாங்க’னு டிஸ்க்லைமர் சொல்லிட்டு இருந்தார். ‘சரி… சரி…னு பல்லைக் கடிச்சிருப்பார் பிக்பாஸ்.

இன்னொரு பக்கம் சுரேஷிடம் குருப்பிஸம் பற்றி என்னவோ சொல்ல முயன்றுக்கொண்டிருந்தார். ‘அப்ப நீங்க எல்லாம் ஒண்ணு… நேக்கு யாரு இருக்கா?”என்பதாகச் சொல்லிகொண்டிருந்தார் சுரேஷ்.

ரியோவுக்கு ஒரு பிரச்சனை இருக்கு. அவர் நினைத்ததை மிகச் சரியாகச் சொல்ல முடியவில்லை. ஒருவேளைஅப்படியே அவர் சொல்லிவிட்டாலும், ‘நான் கரெக்டா சொல்லிட்டேனா?’ எனும் சந்தேகத்திலேயே இருக்கிறார். இன்னொன்று, சுரேஷிடம் ஒரு பிரச்சனையைப் பற்றி விவாதிக்கும்போது ‘டைம் ஆயிடுச்சு… கிளம்பறேன்’ என்பதாகவே ரியாக்ட் செய்வார். அதனால் ரியோவின் பாடு இன்னும் திண்டாட்டமாகி விட்டது. பலருக்கும் இருக்கும் பிரச்சனைதான் ஆறு மாசம் பொறுங்க ரியோ… சரியாயிடுமா… இல்ல பழகிடும். (இது பழனி அண்ணன் ஜோக்தானே)

குளிக்கச் சென்ற சுரேஷை நிறுத்தி இதைக் கேட்டுட்டு போங்க என்பதாகப் பேசிட்டு இருந்தார் ஷனம். என்ன சொல்றது… நீங்க பண்றது கோபமாகவும் வருது வாழ்த்து சொல்லவும் தோணுது… தொலைஞ்சி போங்க’னு சொன்னபோது, ‘இதுதான் நான்’ என்பதாக குளிக்க ஓடினார் சுரேசு. மனசுக்குள்ள ஷனத்துக்கு சபாஷ் சொல்லியிருப்பார். சுரேஷின் செயல்களைச் சகப்போட்டியாளர்களால் ஒதுக்கவும் முடியல… ஏத்துக்கவும் முடியல…. குறை சொல்லாமல் இருக்க முடியல… திட்டாம இருக்கவும் முடியல… அவரை ஒதுக்கவும் முடியல… மொத்தத்தில் வடிவேலு சொல்லும் ’முடியலடா… முடியல’ என்பதாகத் தவித்தனர்.

ஆட்டம் பாட்டம்

நேற்று பேசிப்பேசியே பார்வையாளர்களை டயர்டாக்கி விட்டோம்னு பிக்பாஸ் நினைத்ததால் ஆட்டம் பாட்டம் போட வைக்க முடிவு செய்திருந்தார். ரன்வேர்ல ஒரு பொட்டி வரும். அதில் ஒரு ஜோடிக்கான டிரஸ் வரும் அதைப் போட்டுக்கிட்டு ஒலிப்பரப்பாகும் பாட்டுக்கு டான்ஸ் ஆடணும்.

முதல் ஜோடியாக ஆஜித் – கேப்ரியல்லாவுக்கு டிரஸ் வந்தது. ரவுடி பேபி பாடலுக்கு இருவரும் ஆடினார்கள். கேபி டான்ஸர் என்பதால், நல்லா ஆடுவாங்க என எதிர்பார்த்ததுதான். ஆனால், கொஞ்சம் ‘ஷை’ டைப் ஆஜித் நன்றாக ஆடியது ஆச்சர்யம்தான். நிஜமாகவே ரெண்டு பேரும் பேபிங்கதான்.

அடுத்து வந்தது ரியோ –நிஷா. ’ஆடலுடன் பாடலைக் கேட்டால்’ வாத்தியாரின் புகழ்பெற்ற பாடலுக்கு காமெடியாக ஆடினார்கள். அவர்களை உற்சாகப்படுத்தினார்கள் ஹவுஸ்மேட்ஸ்.

மூன்றாவது ஜோடி ஷனம் – வேல்முருகன். ‘வெச்சிக்கவா.. உன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள…’ 80 களின் ஹீரோ – ஹீரோயினாக மாறிவிட்டனர் இருவரும். அதிலும் வேல்முருகன் ரகளை கட்டிவிட்டார். கூட ஆடுறவங்க என்ன ஸ்டெப், என்ன ஸ்டைல் ஆடுறாங்க என்பதால் பார்க்காமல் மேடையை ஃபுல்லா ஆக்கிரமித்துகொண்டு லைட்டா டி.ஆர் ஸ்டைலிலும் ஆடினார்.

நான்காவது ஜோடி, புரோமோவில் போட்டிருந்ததால் ஆவலாக எதிர்பார்த்த அனிதா – சுரேஷ் ஜோடி. எலியும் பூனையுமாக இருப்பவர்களை இப்படி ஆட விடும் யோசனை எந்த அசிஸ்டண்ட் டைரக்டர் கொடுத்த ஐடியா பாஸ். தனக்கு ஜோடியாக சுரேஷ்  என்றாலும் ஒரு நொடிக்கூட தயக்கம் இல்லாமல் ஆட ரெடியானார் அனிதா. வெல்டன். ஆட்டத்திலும் பின்னி பிடல் கிளப்பிட்டாங்க இருவரும். செய்தி வாசிப்பாளர் அனிதாவா இது என்பதுபோல டான்ஸில் கலக்கிட்டார் அனிதா. சுரேஷூம் பாம்பு டான்ஸெல்லாம் ஆடி கவர்ந்தார்.

ஒருபக்கம் ஷனம் – பாலா, இன்னொரு பக்கம் ஆரி – வேல்முருகன் தங்களின் பஞ்சாயத்துகளைப் பற்றி விவரிக்க, ’ராஜஸ்தான் டீமில் ஓப்பனிங் யார் யார் இறங்கியிருக்காங்கனு பார்ப்போமா?’என ரிமோட்டை எடுக்கையில் பிக்பாஸ் ஓலை அனுப்பிய காட்சி வந்துவிட்டது. ரிமோட்டுக்கு ரெஸ்ட்.

இருவர் இருவராக அணி சேர வேண்டும். கார்டன் ஏரியாவில் பெரிய வட்டம் நடுவே ஒரு நீர் உள்ள ஜாடி. வட்டத்தின் வெளியே இருந்த ஜாடிக்குள் பந்தைப்போட வேண்டும். ஆ…. தெரிஞ்சிடுஞ்சு… அப்படியே பந்தைப் போட்டு போட்டு தண்ணியை வெளியே எடுக்கணும்… அதானே…’ அதுக்கூட சுவாரஸ்யமாக இருக்கும் இல்ல… ஆனா, இந்தப் போட்டியில் ஒரு ஜோடியில ஒருத்தர் கரெக்டா போட்டுவிட்டால் மற்றவர்களில் ஒருவரை ஆட்டத்திலிருந்து நீக்கி விடலாம்.

ஷிவானி – ஆரி, ரியோ – நிஷா, ஆஜித் – ரம்யா, அனிதா – கேபி, சனம் – வேல்முருகன்,சுரேஷ் – பாலா, ரமேஷ் – ரேகா, சோம்ஸ் – சம்யுக்தா என டீம் பிரிந்தன.

முதலில் பந்தைச் சரியாகப் போட்ட ஷனம், பாலாஜியை வெளியே அனுப்ப, ரியோ, ஆஜித்தை அனுப்ப, கேபி, சுரேஷை அனுப்ப, அனிதா, சம்யுக்தாவை அனுப்ப, ரமேஷ், கேபியை அனுப்ப, ஆரி, அனிதாவை அனுப்ப…… ஒரு வழியாக வேல்முருகன் – ஷனம் டீம் வென்றது.

இந்த விளையாட்டில் முதலில் ஆவலோடு பந்தைச் சரியாகப் போட்டவர்கள் எல்லோரும் வெளியேற்றப்பட்டனர். பாயிண்ட் வரட்டும்… பாயிண்ட் வரட்டும் எனக் காத்திருந்த ஷனம் – வேல்ஸ் ஜோடி வெற்றி பெற்றுவிட்டது. இதனால், அவர்கள் அடுத்த வாரம் இருவருக்கும் எவிக்‌ஷனிலிருந்து விலக்கு அளிக்கப்படுமாம். அது சரி.. இந்த வார கண்டத்திலிருந்து ஷனம் தப்பிக்கணுமே… இந்த ஏழு பேரில் ரேகா, ஷனம், சம்யுக்தா மூவரில் ஒருவர் வெளியேறவே வாய்ப்பிருக்கிறது என்கிறது சோஷியல் மீடியா பட்ஷி.

போட்டி முடிந்ததும் சுரேஷ், ரம்யா, சம்யுக்தா இன்னபிற வகையறாக்கள் ஒருபுறமும், பாலாஜி, கேபி வகையறாக்கள் இன்னொரு புறமுகமாகவும் ஆட்டக்காரர்கள் பற்றி புரணி பேச… க்ளோஸப் ஷாட்டெல்லாம் வைத்தார் பிக்பாஸ். ஒரு கண்டண்ட்டும் தேறல… சரி.. தூங்கப்போங்க… லைட்டை ஆஃப் பண்ணிட்டார். எவ்வளவு ட்ரிக்கா இருக்காங்க… – இன்றைய பிக்பாஸ் மைண்ட் வாய்ஸ்.

01 யாரு ஓவியா… யாரு ஜூலி… யாரு கவின்… யாரு லாஸ்லியா? முதல்நாளிலேவா தேடுவீங்க? #BiggBoss4

02 ’உங்க வேலையை ஆரம்பிச்சிட்டீங்களே பிக்பாஸ்’ நாள் 2 – #BiggBoss4

03 பிக்பாஸில் முதல் அழுகையும் நிஷாவின் நிஜ ‘பிளாக்’ ஹியூமரும்! #BiggBoss4

04. நான் ஒண்ணும் சூப்பர் மாடல் இல்ல’ யாரை வம்புக்கு இழுக்கிறார் சம்யுதா! பிக்பாஸ் 3-ம் நாள் #BiggBoss4

05. அஜித் பாணியைப் பின்பற்றிய ’ஜித்தன்’ ரமேஷ்! பிக்பாஸ் 4-ம் நாள் #BiggBoss4

06. ஒருநாள் ஹீரோயின்… குடிகார அப்பா… அழ வைத்த அம்மா பாட்டு! பிக்பாஸ் 5-ம் நாள் #BiggBoss4

07. ஷிவானியின் ’கண்மணி’யும் கமலின் ’பாலிடிக்ஸ் பன்ச்’ம் இன்னும் சில பஞ்சாயத்துகளும் – பிக்பாஸ் நாள் 6 #BiggBoss4

08 நிஷாவின் முத்தம் எதற்காக… மிஸ் பிக்பாஸ் யார்… எவிக்‌ஷனில் டார்கெட் இவரே! பிக்பாஸ் 8-ம் நாள்

09. ரம்யா இன்னொரு ஓவியாவா? பிக்பாஸ் 9-ம் நாள் #BiggBoss

மாவட்ட செய்திகள்

Most Popular

நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி

பிரபல நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் உடல்நலக்குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை மதுரவாயலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு...

‘ராகுலிடம் நாராயணசாமி பொய் சொன்னார்’ – காங்கிரஸ் மீது மோடி கடும் விமர்சனம்!

ராகுல் காந்தியிடம் நாராயணசாமி பற்றி பெண் ஒருவர் புகாரளித்த வீடியோ குறித்து பிரதமர் மோடி விமர்சித்தார். புதுச்சேரியில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ஆளும்...

“இந்த காலேஜ்ல என்னை தவிர எவன்கிட்டேயும் பேசக்கூடாதுடி” -மறுத்த மாணவிக்கு நேர்ந்த நிலை

தன் காதலி வேறொருவரிடம் நட்பு கொண்டதால் கோவப்பட்ட காதலன், அந்த காதலியை கொன்று ஒரு கால்வாயில் வீசியுள்ளார்.

9,10,11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்க் எப்படி?

சென்னை வாலாஜாசாலையில் இருக்கும் கலைவாணர் அரங்கில் கடந்த 23ம் தேதி இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. அதில் துணை முதல்வர் ஓபிஎஸ் 14-வது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன் பிறகு,...
TopTamilNews