’நான் ஒண்ணும் சூப்பர் மாடல் இல்ல’ யாரை வம்புக்கு இழுக்கிறார் சம்யுதா! பிக்பாஸ் 3-ம் நாள் #BiggBoss4

’நான் ஒண்ணும் சூப்பர் மாடல் இல்ல’ யாரை வம்புக்கு இழுக்கிறார் சம்யுதா! பிக்பாஸ் 3-ம் நாள் #BiggBoss4

ஒரு ஓவரில் முதல் பந்தை சிக்ஸருக்கு விளாசிய பிறகு அடுத்தடுத்து டாட் பால்… சிங்கள் ரன் என ஆடினால் எப்படி சுவாரஸ்யம் குறைந்து போகுமோ அப்படித்தான் இன்றைய பிக்பாஸ் எபிசோட் இருந்தது. நேற்று வேல் முருகனும் நிஷாவும் எந்தவித தயக்கமுமின்றி இதைத்தான் சொல்ல போகிறோம் என்ற தெளிவோடு பேசினார்கள். இன்றைக்கு அது மிஸ்ஸிங்.

’நான் ஒண்ணும் சூப்பர் மாடல் இல்ல’ யாரை வம்புக்கு இழுக்கிறார் சம்யுதா! பிக்பாஸ் 3-ம் நாள் #BiggBoss4

பிக்பாஸ் வீட்டில் என்ன நடக்கிறது என்பதை அனிதா சம்பத் நியூஸாக வாசித்தார். இனி, அடிக்கடி இப்படிப் பேசுவாங்க போலிருக்கே… சிரமம்தான் (இல்ல பாஸ்… சிரமப்பட்டு பேசுவாங்களே அதைச்சொன்னேன்) ஆனால், பாலாவை, ரியோவை கிண்டல் செய்தது நன்றாகவே இருந்தது. நேற்று சுரேஷிடம் பட்டபாட்டால் எதிர் தாக்குதல் இல்லாத ஆட்களாகத் தேர்வு செய்துகொண்டார் அனிதா.

சரி, பிக்பாஸ் இன்றைக்கு ப்ரமோவில் அனிதா, சுரேஷ் சண்டை மாதிரி காட்டினீங்க.. அது இன்னும் வரலையே..

’நான் ஒண்ணும் சூப்பர் மாடல் இல்ல’ யாரை வம்புக்கு இழுக்கிறார் சம்யுதா! பிக்பாஸ் 3-ம் நாள் #BiggBoss4

கடந்து வந்த பாதையில் பேச கேப்ரில்லாவை அழைத்திருந்தார் பிக் பாஸ். பெரிய ஷோவில் டைட்டில் வின் பண்ணியபிறகும் வாய்ப்புகளே இல்லாதது பற்றிச் சொன்னவர். தான் ஒல்லி என எல்லோரும் சொல்லச் சொல்ல தன் உடலையே வெறுத்ததாகச் சொன்னபோது ஆச்சர்யமாகத்தான் இருந்தது. பிறகு ஜிம்க்கு போய் எடையை கூட்டினாராம், ஸீரோ சைஸ்க்காக ஆளாளுக்கு தவியாய் தவிக்கிறார்கள்.  பல பிஸினஸ்களும் அதை நம்பி ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால், கேப்ரில்லா இப்படிச் சொல்கிறார் எனில், இக்கரைக்கு அக்கரை பச்சைதான்போல.

மீண்டும் கிச்சன் ஏரியாவுக்கு ஷிப்ட் ஆனது நிகழ்ச்சிகள். ஆரி என்னவோ படித்துக்கொண்டிருந்தார். மற்றவர்கள் பேசிக்கொண்டிருந்ததிலிருந்து பிக்பாஸ் ரூல்ஸைத்தான் படித்துகொண்டிருந்தார் என அவதானிக்கலாம். என்னாது… இப்பதான் ரூல்ஸையே படிக்கிறீங்களா?

’நான் ஒண்ணும் சூப்பர் மாடல் இல்ல’ யாரை வம்புக்கு இழுக்கிறார் சம்யுதா! பிக்பாஸ் 3-ம் நாள் #BiggBoss4

ஆரி சோபா ஏரியா அருகே படிக்க, சுரேஷ் கிச்சனில் வேலை செய்துகொண்டே கேட்டுக்கொண்டிருந்தார். ரேகாவிடம் ஏதோ அனிதா பேச, பேசாமல் இருக்கும்படி கேட்டார். ஆனால், அனிதா யாரையும் யாரும் டாமினேட் பண்ண முடியாது. பேசறது எங்க உரிமை… என போராளி மோடுக்குத் தாவிட்டார். அப்போதான்… ஒரு மாட்டுக்கு ஒரு சூடு விஷயமெல்லாம். ஒரு ரூபாய்க்கு எத்தனை பழம் கதையாய் மாறி மாறி பேசிக்கொண்டிருந்தார்கள். எல்லோருக்கும் கேமரா குறித்த கவனம் இன்னும் விலகாததால் ஜாக்கிரதையாகவே பேசினார்கள்.

சுரேஷ்க்கு சட்டென்று ஈகோ தலை தூக்கி விடுகிறது. நான் பெரிய ஆள்… நான் வயதில் மூத்தவன்… இன்னும் எவ்வளவு இறங்கிறதாம் என்ற தொனியிலேயே ஹேண்டில் செய்கிறார். ஒரு கட்டத்தில் இவங்க கிட்ட பேச முடியாது. நேற்று மாதிரி கேமராகிட்டேயே டிஸ்க்லைமராகப் பேசிவிடலாம் என நினைத்தாரோ என்னவே வேக வேகமாக நடந்து வெளியே சென்று விட்டார்.

’நான் ஒண்ணும் சூப்பர் மாடல் இல்ல’ யாரை வம்புக்கு இழுக்கிறார் சம்யுதா! பிக்பாஸ் 3-ம் நாள் #BiggBoss4

எப்படியோ, அனிதா Vs சுரேஷ் என்ற நிலை வந்துவிட்டது. இனி ஒவ்வொருவரும் தங்கள் அணிக்கு ஆள் பிடிப்பார்கள். அதை பிக் பாஸ் சார்ஜ் ஏற்றுவார் (பத்த வைப்பார்னு சொன்னா நல்லா இருக்காது பாஸ்).

மூன்றாம் நாள்…

’நான் ஒண்ணும் சூப்பர் மாடல் இல்ல’ யாரை வம்புக்கு இழுக்கிறார் சம்யுதா! பிக்பாஸ் 3-ம் நாள் #BiggBoss4

பட்டாசு படத்தின் ’சில் ப்ரோ’ பாடலோடு நாள் தொடங்கியது. வழக்கம்போல ஆடினார்கள். ஆனால், உற்சாகம் குறைந்திருந்தது போல தெரிந்தது. இன்னும் சூடேத்தணும் என பிக்பாஸ் நினைத்திருப்பார்.

’நான் ஒண்ணும் சூப்பர் மாடல் இல்ல’ யாரை வம்புக்கு இழுக்கிறார் சம்யுதா! பிக்பாஸ் 3-ம் நாள் #BiggBoss4

கதை சொல்ல ரேகா வந்தார். சீனியர் நடிகை. சொல்வதற்கு ஏராளம் இருக்கும். நிச்சயம் நிறைய பேசுவார். ரஜினி, கமல் பற்றியெல்லாம் சொல்வார் என ஸ்நாக்ஸோடு காத்திருந்தால், இளையராஜா மியூசிக் நடித்தது பாக்கியம். வைரமுத்து பாட்டுக்கு ஆடியது பாக்கியம் என வண்டியை வேறெங்கோ இழுத்து, குணா சூட்டிங்கில் கடலை உருண்டை கொடுத்தாங்க… அது இப்போ கிடைக்குமா? என்று சொல்லி ‘நமஸ்காரம்’ என்று முடித்தார். சூப்பர் சிங்கர் ஜீனியர் நமஸ்காரம் ஹரிகிருஷ்ணன் நினைவுக்கு வந்தான். நமஸ்காரம் ஹரி.

அடுத்து சம்யுக்தா கதையாட வந்தார். ’சாப்பாட்டுக்கு எல்லாம் கஷ்டப்பட்டது இல்ல’ என்று ஆரம்பித்தார். ‘மிஸ் சென்னை’ ஆனது பற்றியும் அப்பாவுக்குப் பயப்படுவது பற்றியும் அதிகம் கவனிக்காத கணவர் பற்றியும் இதை சொல்லலாமா… வேண்டாமா என்ற குழப்பத்தோடு சில விஷயங்களைச் சொன்னார். பிறகு, அவரின் குழந்தையின் மூச்சுக் குழாயில் கேரட் துண்டு மாட்டிக்கொண்டது பற்றி உணர்ச்சி வசப்பட்டு சொன்னார். அது எல்லோரையும் தொற்றிக்கொண்டது. ’என்னதான் மாடர்னாக இருந்தாலும் ஒரு பெண், பெண்தான்’ என்றார். சிலருக்கு மாற்றுக்கருத்து இருக்கக்கூடும். ஆனால், அந்த வார்த்தைகள் அவரின் வாழ்விலிருந்து அவர் பெற்றவை. அதன் பூர்ணப் பொருள் அவர் மட்டுமே அறிவார். அதைப் பொதுமைப்படுத்திப் பார்ப்பது, அலசுவது வீண் வேலை.

’நான் ஒண்ணும் சூப்பர் மாடல் இல்ல’ யாரை வம்புக்கு இழுக்கிறார் சம்யுதா! பிக்பாஸ் 3-ம் நாள் #BiggBoss4

அதற்கு அப்பறம் சம்யுதா ஒரு பிரபலத்தை வேறு வம்பு இழுத்துவிட்டிருக்கிறார். நான் என்னை சூப்பர் மாடல்னு சொல்லிக்க மாட்டேன். நல்ல டாக்டரை மற்றவங்கத்தான் சொல்வாங்க… அவரே சொல்லிக்க மாட்டார்’ என சென்ற சீசன் மீரா மிதுனை வம்பு இழுத்திருக்கிறார். இன்றைக்கு சோஷியல் மீடியாவில் என்ன எதிர்வினை வருமோ தெரியல.

’நான் ஒண்ணும் சூப்பர் மாடல் இல்ல’ யாரை வம்புக்கு இழுக்கிறார் சம்யுதா! பிக்பாஸ் 3-ம் நாள் #BiggBoss4

’ஒன்றரை வயது வரை தாய்ப்பால் கொடுத்தது ரொம்ப நல்ல விஷயம்மா’ சம்யுக்தாவைப் பாராட்டிக்கொண்டிருந்தார் சுரேஷ். ஆமா, பாஸ் சுரேஷ்தான் பாராடினார். நம்ப முடியலையா? அப்பறம் ’மாடல்ன்னா… ஆரம்பித்து சில வரிகள் சொன்னதும் அடடா என்ன இப்படிச் சொல்றாரே என யோசிக்கும்போதே ‘இப்படி எல்லாம் வெளியே சொல்வாங்க’ என சேஃபாக வண்டியை லேண்ட் பண்ணிட்டார்.

’காந்தி கிராமம்தான் எங்க ஊரு’ என்று மிக லேசாக கொங்கு தமிழ் எட்டிப்பார்க்க பேசினார். படிப்பு வராமல் போக, அப்பா தந்த பத்தாயிரம் ரூபாயில் வந்தது, வாய்ப்பு தேடி அலைந்தது, சேரன் உதவியால் ஒரு படம் நடித்து முடித்து விருது கிடைத்தும் திரைக்கு வரமுடியாமல் போனது பற்றியும் சரியான சொற்களோடு பகிர்ந்தார். அவர் சொன்ன ஒவ்வொன்றுமே போராடி வரும் பலரும் அனுபவித்துக்கொண்டிருப்பதே. ஆனாலும், மனித மனம் இன்னும் மோசமான அனுபங்களாக இருந்தால் சொல்லேன்.. கேட்கலாம் என்று கேட்கும் சூழலுக்கு மாறிவிட்டது.

’நான் ஒண்ணும் சூப்பர் மாடல் இல்ல’ யாரை வம்புக்கு இழுக்கிறார் சம்யுதா! பிக்பாஸ் 3-ம் நாள் #BiggBoss4

ஆரி தனது பெற்றோர் மறைவைப் பற்றிச் சொல்லும்போது ஒருவித நிதானத்துடன் இருந்தது ஆச்சர்யம்தான். எல்லா சிரமங்களுக்கும் பின்பும் சமூகத்திற்காக ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தையும் பகிர்ந்துகொண்டார்.

கேப்ரில்லா, சம்யுக்தா, ரேகா இவர்களோடு ஒப்பிட்டால் தான் சொல்ல வந்ததை சரியாக, குழப்பம் இல்லாமல் சொன்னார். ஏதோ பேசிக்கொண்டு ரிலாக்ஸாக இருந்த ரியோவை, அடுத்து நீங்கதான் என பிக்பாஸ் சொன்னார்.

’நான் ஒண்ணும் சூப்பர் மாடல் இல்ல’ யாரை வம்புக்கு இழுக்கிறார் சம்யுதா! பிக்பாஸ் 3-ம் நாள் #BiggBoss4

ஈரோட்டில் பிறந்த ரியோவை குடும்பம் படிக்க வைக்க முடியாத சூழலையும் ஸ்பான்ஸர் வாங்கிப் படித்ததையும் சொல்லியதோடு எப்படி விஜே ஆனார் என்பதையும் சொன்னார். ஆனால், அதை இன்னும் தெளிவாகச் சொல்லியிருக்கலாமோ என்று தோன்றியது. ஒருவேளை சில சேனல் பெயர்களைச் சொல்ல தயங்கியதால் முழுமையாக அவரால் சொல்ல முடியவில்லையோ என்று தோன்றியது. இதற்கெல்லாம் பிக்பாஸில் தடையா? கஷ்டப்பட்டதைச் சொன்னவர், அடுத்து சக்ஸஸ் கதையைச் சொல்வார் என எதிர்பார்க்கையில் ’ஸ்டெச்சு’ என யாரோ சொன்னதைப் போல பாதியிலேயே நிறுத்தி விட்டார்.

’நான் ஒண்ணும் சூப்பர் மாடல் இல்ல’ யாரை வம்புக்கு இழுக்கிறார் சம்யுதா! பிக்பாஸ் 3-ம் நாள் #BiggBoss4

மீண்டும் வழக்கம்போல உருளைக்கிழக்கு எடுக்க முடியல, சமையல் டீம் எங்கே… கேப்டன் இங்கே வாங்க என சுரேஷ் ஆரம்பித்துவிட்டார். அதற்கு ரம்யா பாண்டியன் பதில் சொல்ல, ஷனம் ஷெட்டி உள்ளே வர… அப்படி ஒண்ணும் சுவாரஸ்யம் இல்லை பாஸ். பார்த்தீங்களா… பெரிய சண்டையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று மனம் எதிர்பார்க்கத் தொடங்கி விட்டது பாருங்கள்… ரொம்ப கெட்ட குணம் சார்… இந்த மனசுக்கு.

முந்தைய எபிசோட்கள் பற்றிய பதிவுகளைப் படிக்க:

01 யாரு ஓவியா… யாரு ஜூலி… யாரு கவின்… யாரு லாஸ்லியா? முதல்நாளிலேவா தேடுவீங்க? #BiggBoss4

02 ’உங்க வேலையை ஆரம்பிச்சிட்டீங்களே பிக்பாஸ்’ நாள் 2 – #BiggBoss4

03 பிக்பாஸில் முதல் அழுகையும் நிஷாவின் நிஜ ‘பிளாக்’ ஹியூமரும்! #BiggBoss4