Home சினிமா ’உங்க வேலையை ஆரம்பிச்சிட்டீங்களே பிக்பாஸ்’ நாள் 2 - #BiggBoss4

’உங்க வேலையை ஆரம்பிச்சிட்டீங்களே பிக்பாஸ்’ நாள் 2 – #BiggBoss4

முதன்நாள் நிகழ்ச்சியிலிருந்து தொடங்கியது இன்றைய பிக்பாஸ். பூட்டியிருந்த டாய்லெட் இன்றே திறக்கப்படும் என்று கறாரான குரலில் (ஒருநாள்கூட முடியல… அப்பறம் என்ன கறார்?) பிக்பாஸ் சொல்ல, ‘அப்பாடி’ என நிம்மதி பெருமூச்சு விட்டனர் போட்டியாளார்கள். அது மனிதர்களின் இயல்புதான். கமல் சொன்னதுபோல ஆரோக்கியம் கெட்டுப்போயிடும் இல்லையா?

ஸ்டோர் ரூம் பெல் அடிக்க, ஏதோ ஸ்பெஷல் ஐட்டம் வந்திருக்கு என ஆவலோடு போனார் ரியோ. அங்கே டாய்லெட் சாவியைப் பார்த்தது, இதுதானா… என்று சொல்லிக்கொண்டே எடுத்தார்; பூட்டைத் திறந்தார்; உள்ளே எட்டியும் பார்த்தார்.

அன்றைய நாள் முடிவடையதற்காக லைட்டுகள் அணைக்கப்பட்டன. பெட்ரூம் அறை ஒன்று திறக்கப்படாததால் பெண்கள் பெட்டில் படுத்திருக்க, ஆண்கள் ஹாலில், சோபாவில் என கிடைத்த இடத்தில் தூங்கினார். சின்ன பெட்ஷீட்டை எடுத்து வந்த ஆரி, யாருக்கோ போர்த்தி விட்டார். எஸ்.ஏ.ராஜ்குமார் பின்னணி இசையை பிக்பாஸ் போடல… ஆனா, உங்களுக்கும் கேட்டிருக்குமே?

தூக்கம் வராமல் ஷிவானி பாடல் ஒன்றை முணுமுணுத்துக்கொண்டே வெளியே வர, எங்கிருந்தே திடீரென்று ஒரு குரல்… ’உனக்குப் பாட வருமா?’ கேமரா திரும்ப, லுங்கியோடு சுரேஷ் சக்கரவர்த்தி எண்ட்ரி ஆகிறார். இருவரும் சேர்ந்து ‘கண்மணி அன்போடு நான்….’ பாடலைப் பாட…. அது எப்படி இருந்துச்சு தெரியுமா? வேணாம் பாஸ் சேகர் செத்திருவான்.

இரண்டாம் நாள்…

’மாஸ்டர்’ படத்து ’வாத்தி கம்மிங்’ பாட்டுதான் போடப்போகிறார் என விஜய் டிவி ப்ரமோவில் போட்டுவிட்டதால், ’என்ன பாட்டா இருக்கும்?’ என்ற சுவாரஸ்யம் ஆடியன்ஸ்க்கு இல்லை. வழக்கம்போல ஆடத் தெரியாதவர்கள் கஷ்டமான ஸ்டெப்ஸை ட்ரைப்பண்ண  {கஷ்டம் அவர்களுக்கு மட்டுமா… என்ற உங்களின் மைண்ட் வாய்ஸ் கேட்டுடுச்சு பாஸ்) ஆட, கேப்ரில்லா மாதிரி டான்ஸர் சிம்பிளான ஸ்டெப்ஸில் ஆடினார்கள். சென்ற சீஸனில் கூட டான்ஸ் மாஸ்டர் சாண்டியும் இப்படித்தான் தினசரி பாடலுக்குப் பெரிதாக அலட்டிக்கொண்டு ஆடியதில்லை.

போன சீசன் பிக்பாஸில் வந்த மும்தாஜ் மாதிரி, இரண்டாம் நாளே மேஜையைச் சுத்தம் செய்யறேன் என்று ரேகா ஆரம்பித்துவிட்டார். ஆரி, பாலா, சோம் முவரும் கெஸ்ட் அப்பியரன்ஸ் ரோல் மாதிரி நடந்துகொண்டார்கள்.

ஒரு பக்கம் மும்முரமாய் சமையல் நடந்துகொண்டிருக்க, இன்னொரு பக்கம் நிஷாவும் ஷிவானியும் ஹாயாக பெட்டில் படுத்துக்கொண்டிருந்தார். குறுக்கே கண்ணாடி இருக்கும் தைரியத்தில் பாலாஜியை ஓட்டிக்கொண்டிருந்தார் நிஷா. இந்த சீசனில் கிண்டல் செய்துகொண்டிருக்க, அதற்கு எப்படி ரியாக்ட் பண்ணுவது எனப் புரியாமல் வந்த வழியே திரும்பிபோய்விட்டார் பாலாஜி.

’முதல் டாஸ்க் இருக்கு கார்டன் ஏரியாவுக்கு வாங்க’ என பிக்பாஸ் கூப்பிட்டதும் ஜாலியாகச் செல்ல, அங்கே ஒரு கட்டத்திற்கு வெளியே நிற்கச் சொன்னார். கட்டத்தின் நடுவே ஏதோ ஒரு மூட்டை கட்டியிருக்க, ’சரி, ஏதோ பெரிய கேம் இருக்கும்போல’ என்ற பில்டப்பை ஏற்றினார் பிக்பாஸ். ஆனால், மூட்டையை அவிழ்க்கச் சொன்னதும் நிறைய பந்துகள் விழ, ஒருவருக்கு மட்டும் பந்து கிடைக்க வில்லை. அது ரம்யா பாண்டியன். சுரேஷ் தான் எடுத்த பந்தை தானம் கொடுக்க முன்வந்தார். ‘இதனால என்ன இருக்கு… தலையையா சீவிடுவாங்க என்பதாக ரம்யா மறுத்துவிட்டார்.

பந்து கிடைக்காதவரை கன்ஃபெஸன் ரூம்க்கு வரச் சொல்லி இந்த வாரத்தின் தலைவி ஆக்கினார் பிக்பாஸ். என்ன லாஜிக்கோ தெரியல… சோம்பேறித்தனமாக, ஆர்வம் இல்லாமல் பந்தைப் பொறுக்காமல் இருந்தால் அவர்தான் தலைவியா… ஒரு விளம்பரத்தில் வருமே ஒண்ணுமே பண்ணாததற்கு ரொம்ப தேங்க்ஸ்ப்பா என்று அதுபோல பிக்பாஸ் சீசன் 4-ன் முதல் தலைவியானார் ரம்யா பாண்டியன். இதை அவர் எதிர்பார்க்க வில்லை (நாமும்தான்).

கிரீடம் வைத்துக்கொண்டு நான்தான் தலைவி எனச் சொல்ல, சம்பிரதாய பாராட்டு கைத்தட்டல்கள் கிடைத்தன. ஒவ்வொரு வேலைகளுக்கும் டீம் பிரித்தார் தலைவி. டாய்லெட் கிளின் டீமில் ரியோவைப் போட்டதும் , முதல் வாரமேவா’ என்று ஜெர்க்கானார்.

இந்த சீசனில் எண்டர்டெயின்மெண்ட் நிஷாவிடமிருந்துதான் கிடைக்கும்போல. தன் பொருட்கள் சிலவற்றைக் காணோம் என ரேகா புலம்பிக்கொண்டிருக்க, அவரை செமையாகக் கலாய்த்துக்கொண்டிருந்தார் நிஷா.

’ஜூம் பண்ணிடாதேய்யா’ என்று கேமராவிடம் கெஞ்சியவர், பிறகு கேமராவைப் பார்த்து லவ் புரப்போஷலை அனுப்பினார். ஓவியா, பிந்து மாதவி என புரப்போஷலைப் பார்த்த கேமராமேன் நிஷாவிமிடருந்து வரும் என எதிர்பார்க்க வில்லை போலும். அதனால் கொஞ்சம் லேட்டாகவே தலையாட்டி ஏற்றுக்கொண்டார். ‘இந்த பெட்டுக்கு யாராவது அழகா வருவாங்கன்னு… அழகா போக்கஸ் பண்ணலாம்னு பிக்பாஸ் நினைச்சிருப்பாரு…’ என கேமராவின் மைண்ட் வாய்ஸைக் கேட்ச் பண்ணியவராய் கலாய்த்தார். ஆனாலும் லவ் அக்செப்ட் ஆனதில்  நிஷா செம ஹேப்பி அண்ணாச்சி.

கிராமங்களில் சிறுவர்கள் விளையாடும் டிக்டிக்… யாராவது?… திருடன்… எனும் விளையாட்டை ஆடலாமா? என்று அனிதா சம்பத் ரியோவிடம் கேட்க, அவர் தொடக்கத்தில் ஆர்வமில்லாமல்தான் ஓகே சொன்னார். பிறகு ஆட்டத்தின் சுவாரஸ்யத்தில் கலந்துவிட்டார். முதல் கேட்சரே ரியோதான்.

 யாரது? எனக் கேட்டால் திருடன் என்று ரியோ சொன்னார். ஆனால், அடுத்து ஆட வந்த பெண்களும் திருடன் என்றே சொன்னபோது, ‘திருடி’ என்று சொல்லலாமே என்று தோன்றியது. அனிதா விளையாடுகையில் யாராது… என்றவுடன் ’திருடி’ என்று சொல்லி அந்தக் குறையைத் தீர்த்துவிட்டார். குழந்தைகள் விளையாடுவதைபோலவே கைகளை ஆட்டி, குரலை குழைத்து அனிதாவின் ஆட்டிடியூட் செம. அனிதாவின் ஆட்டிடியூட் மற்றும் டிரெஸ்ஸிங் சென்ஸ்க்கு சோஷியல் மீடியாவில் நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கு… ஆர்மி லிஸ்ட்டில் இவரும் இருக்கார்போல. அதெல்லாம் சரி, எந்தக் கிராமத்துல ‘பேபி பிங்க்’ன்னு சொல்லி விளையாடுறாங்க?

சரி… சரி… இப்படியே ஜாலியா போய்ட்டு இருந்தா ப்ரமோவுக்குக்கூட கண்டண்ட் கிடைக்காது என கடுப்பான பிக்பாஸ், அடுத்த டாஸ்க்கைக் கொடுத்தார். ‘நாளைக்கு எலிமினேஷனுக்கு பேர்களைப் பரிந்துரைக்கணும். அதற்கு ஒரு டிரையலா (ட்டரியலா…)  இதயம், உடைந்த இதயம் விளையாட்டைக் கொடுத்தார் பிக்பாஸ்.

அதாவது, ஒவ்வொருவரும் இருவருக்கு இதயம் சிம்பளும் இருவருக்கு உடைந்த இதயம் சிம்பளும் கொடுக்கணும். பத்த வெச்சிட்டியே பரட்ட.

முதலில் வந்தது சம்யுக்தா. இதயத்தை ரம்யா பாண்டியனுக்கும் வேல்முருகனுக்கும் கொடுத்தார். வாசலிலேயே நின்று வரவேற்றதுக்காக வேல்முருகனுக்கு கிடைத்த ஹார்ட். பெட் பிரிக்கும்போது நடந்த பஞ்சாயத்திற்காக ஷிவானிக்கு உடைந்த இதயம் தந்தார். அதற்கு அவர் மறுப்புச் சொல்ல முழு விவரம் தெரியல…. இந்த விஷயம் குறும்படம் போடுமளவுக்கு பெரிதாகுமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். இன்னொரு உடைந்த இதயம் ரேகாவுக்கு.

ஷனம் ஷெட்டியும் உடைந்த இதயத்தை ஷிவானிக்கும், ஜித்தனுக்கும் கொடுத்தார். சம்யுக்தாவுக்கும் பாலாஜிக்கும் இதயம் ஷனம் ஷெட்டியின் இதயம் கிடைத்தது.

அடுத்து வந்தது நிஷா. யாருக்கு என்ன கொடுப்பது என ஒருநிமிடம் குழம்பியவர். ஏற்கெனவே இரண்டு உடைந்த இதயங்கள் வைத்திருந்த ஷிவானிக்கு நிஷாவும் உடைந்த இதயத்தைக் கொடுத்தார். இந்த நடைமுறை எல்லா பிக்பாஸ் சீசனிலும் இருக்கிறது. யாராவது ஒருவர், இன்னொருவரை இப்படி முதலில் செய்தால் அடுத்தடுத்து வருபவர்கள் அதையே பின்பற்றுகிறார்கள். அதிலும் நெகட்டிவான விஷயத்தில் இப்படி எதிரொலிக்கிறது. இன்னொரு உடைந்த இதயத்தை ‘உங்க பேரு என்னங்க’ என்று சோம் –யைக் கேட்க, அவர் என்னடா இது வீட்டுக்குள் வந்து ஒருநாள் முடிஞ்சிடுச்சு இன்னுமா பேர் தெரியாம இருக்காங்கனு ஒரு லுங் விட்டு, சோம் என்றார். அவருக்கு இன்னொரு உடைந்த இதயம் தந்தார்.

சம்பிரதாயத்தை எல்லாம் முடித்து, ’உங்க வேலையை ஆரம்பிச்சிட்டீங்களே?’ என்றார் நிஷா. அங்கிருந்தவர்கள் மனதில் ஓடிக்கொண்டிருந்த ஒன்லைன் அதுதான் என்றபடியால் அதற்கு நிறைய லைக்ஸ் கிடைத்தது.

ரேகாவும் ஷிவானிக்கு உடைந்த இதயம் கொடுக்க, ஆடியன்ஸ்கிட்டேயிருந்து ’பாவம் இந்தப் பொண்ணு’ என்ற எண்ணத்தை விதைத்துக்கொண்டிருந்தார்கள். வேணாம் மக்களே… யாருக்கு ஆர்மி ஆரம்பிக்கிறது என சோஷியல் மீடியா குழம்பியிருக்கு. இந்த நேரத்தில் நீங்களே எடுத்துக்கொடுத்திடாதீங்க…

’இன்னா செய்தாரை ஒறுத்தலாக’ ஷிவானி இதயம் கொடுத்தது ஷனம் ஷெட்டிக்கு. இன்னொன்று வேல் முருகனுக்கு. உடைந்த இதயம் சம்யுக்தா மற்றும் பாலாவுக்கு.

இப்படி ஒவ்வொருவரும் கொடுக்க, சில இதயங்கள் ரம்யா பாண்டியனுக்குக் கிடைத்தன. ரம்யா பாண்டியன் இதயம் சம்யுக்தாவுக்கும் சுரேஷ் சக்கரவர்த்திக்கும் கிடைத்தது. (பிக்பாஸ் கொஞ்சம் ஏமாந்திருப்பார்) மதியம் சாப்பாட்டில் பொறியலை மிஸ் பண்ணியவருக்கு ரம்யாவின் இதயமே கொடுத்திட்டாங்க.

சூப்பர் சிங்கர் ஆஜிஸ் ’வீட்டு அக்கா மாதிரி இருக்காங்க’ என அனிதாவுக்கும் ரம்யாவுக்கும் இதயம் கொடுத்தார். இந்தப் பையன் எல்லாரையும் அக்கா… அக்கான்னுதான் கூப்பிடுவார் போல… (இப்போ உடைந்தது பிக்பாஸ் இதயம்… உன்னைய வெச்சி நிறைய ப்ளான் பண்ணியிருந்தேமேடா என்று) ஆமாம். இன்றைக்கு முழுக்க இவரை காணேமே எங்கே போனார்… டாஸ்க் எதுவும் பண்ண வில்லை யென்றாலும் பரவாயில்லை, தினமும் ஒரு பாட்டாவது பாடுங்க ப்ரோ.

ஆஜிஸ்தான் இப்படிப் பண்ணிட்டாரே…. கேப்ரில்லா என்ன செய்வார்ன்னு பார்க்கலாம்னு எதிர்பார்த்திருந்தவருக்கு அங்கும் ஏமாற்றம்தான். இதயத்தை ஷிவானிக்கும் ஆரிக்கும் கொடுக்க, உடைந்த இதயம் ரேகாவுக்கும் ஷனமுக்கும் போனது. (உங்களை வெச்சி என்னதான் செய்யறதோன்னு நினைச்சிருப்பாரு பிக்பாஸ்)

யார் யாருக்கு ஹார்ட் கொடுக்கிறாங்க விளையாட்டு என்பது ‘ஆ…. எனக் கொட்டாவி விடுமளவுக்கு போய் ரொம்ப சுவாரஸ்யமாகச் சென்றுக்கொண்டிருந்தது.

 ஷிவானியை சோபாவில் உட்கார விடாத அளவுக்கு அவரை அழைத்துக்கொண்டே இருந்தார்கள். நேற்று மட்டுமே 13 பேர் இந்த விளையாட்டை ஆடியிருக்கிறார்கள். அதில் 9 உடைந்த இதயங்கள் ஷிவானிக்குத்தான். யாரையாவது இப்படி ஒதுக்க ஆரம்பித்தால் அவரே ஆடியன்ஸ் மத்தியில் நன்கு பதிவாகுவார். நேற்றும் அப்படித்தான்… இவர் சம்யுக்தா… இவர் ஷனமா… ஓ அவர்தான் ஷிவானியா… என அதிகம் பாப்புலர் ஆகாதவர்களைப் பார்த்து குழம்பியவர்களுக்கு ஷிவானி யார் என்பதை அழுத்தமாக அடையாளத்தி விட்டீர்கள் மக்களே… இப்படித்தான் ஜூலி என்பவர் உருவானார் என்பதை நினைவில் கொள்க.   

இன்னும் 3 பேர் ஹார்ட் கொடுக்க வேண்டிய நிலையில் கடையைச் சாத்திவிட்டார் பிக்பாஸ். சஸ்பென்ஸோடு நிறுத்தியதாக பிக்பாஸே நினைக்க மாட்டார்.

இன்றைக்கு நடந்ததைப் பார்த்து, காமடிக்கு நிஷா ஓகே… ஆனால், அது பத்தாதே… என பிக்பாஸ் நினைத்திருப்பார். அதனால், நானே களத்தில் இறங்குகிறேன் என புதுப்புது திருவிளையாடல்களோடு அடுத்தடுத்த எப்பிசோடுகளும் வரும் என எதிர்பார்க்கலாம்.

நாளைக்கு சும்மாவாச்சும் எலிமினேஷனுக்குப் பரிந்துரைக்க வேண்டும் என்பதால் சுவாரஸ்யமாக இருக்கலாம். மூணு சீசன் பார்த்த போட்டியாளர்களுக்கு முதல் வாரம் எலிமினேஷன் இல்லைன்னு தெரியாதான்னு கேட்கிறீங்களா…. தெரியாதுனு நம்பினாதால் சான்ஸ் கொடுப்பேன் சொல்லியிருப்பாங்க பாஸ்.  நாமளும் அவங்களுக்கு இந்த உண்மையைத் தெரியாதுனு நம்பிகிட்டே நிகழ்ச்சியைப் பார்ப்போம்.  

மாவட்ட செய்திகள்

Most Popular

திருவண்ணாமலையில், பிப்.26, 27-ஆம் தேதிகளில் கிரிவலம் செல்ல தடை!

திருவண்ணாமலை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் நாளை முதல் 2 நாட்களுக்கு பௌர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மனைவி வீட்டு வேலைகளை செய்யவேண்டுமென கணவன் எதிர்பார்க்க கூடாது! – உயர் நீதிமன்றம் கருத்து!

திருமண உறவில் மனைவி மட்டுமே அன்றாட வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டும் என்று கணவான்மார்கள் எதிர்பார்க்கக் கூடாது என்று மும்பை உயர் நீதிமன்றம் கருத்து கூறியிருக்கிறது. டீ போட்டுக் கொடுக்காததால்...

நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி

பிரபல நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் உடல்நலக்குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை மதுரவாயலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு...

‘ராகுலிடம் நாராயணசாமி பொய் சொன்னார்’ – காங்கிரஸ் மீது மோடி கடும் விமர்சனம்!

ராகுல் காந்தியிடம் நாராயணசாமி பற்றி பெண் ஒருவர் புகாரளித்த வீடியோ குறித்து பிரதமர் மோடி விமர்சித்தார். புதுச்சேரியில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ஆளும்...
TopTamilNews