Home சினிமா அர்ச்சனா எண்ட்ரியும்... டோட்டல் டேமஜ் விருதுகளும்! பிக்பாஸ் 11-ம் நாள் #BiggBoss4

அர்ச்சனா எண்ட்ரியும்… டோட்டல் டேமஜ் விருதுகளும்! பிக்பாஸ் 11-ம் நாள் #BiggBoss4

விருது நிகழ்ச்சிகளில்தான்  டான்ஸ் நிகழ்ச்சிகள் நடக்கும். பிக்பாஸில் டான்ஸ் நிகழ்ச்சி நடக்கும் எபிசோட்டில் விருது விழா நடந்திருக்கிறது. பிக்பாஸ் வீட்டிற்குப் புதிய போட்டியாளரின் வருகை, அதன் உற்சாகம், உள்குத்து, ஊமைக்குத்து எனச் சுவாரஸ்யமாக அமைந்திருந்தது 11-ம் நாள் எபிசோட்.

எப்போ தியேட்டருக்கு வரும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கும் ‘மாஸ்டர்’ படத்திலிருந்து ‘வாத்தி ரைடிங்’ எனும் துள்ளல் பாடலோடு தொடங்கியது எபிச்சோட். பாஸ், பிக்பாஸில் இது மூன்றாவது விஜய் பாட்டு என நினைக்கிறேன். இன்னும் ஒரு தல அஜித் பாட்டுக்கூட வரல. ’டிஜிட்டல் வார்’யைச் சந்திக்க ரெடியா நீங்க?

கிச்சன் சண்டைகள் பிக்பாஸூக்கே அலுத்துபோக, நேரடியாக ஆடலும் பாடலுக்கும் வண்டியை விட்டார். ‘ரேகா – ஜித்தன் ரமேஷ்’க்கு உடைகள் அனுப்பியிருந்தார்கள்.

 ’அ முதல் ஃ தானடா…’ பாடலை ஒலிபரப்பினார்கள். ஓவர் குசும்பா இருக்கே இது. ரேகாவுக்கு இந்தப் பாடலை செலக்ட் பண்ணினது யாரு? அவர் இந்தப் பாடலை முதன்முறையாகக் கேட்பதுபோல ரியாக்ட் பண்ணி ஆடினார்.

ஆடி முடிந்ததும் ‘எப்படி என் டான்ஸ்’ என ரேகா கேட்டதற்கு நிஷாவின் வலிக்காத மாதிரி ஜோக் அடித்தது செம. ‘ஒரு நிமிஷம் கேமராவை ஆஃப் பண்ணுங்க… நான் உண்மையைச் சொல்லணும்’னு நிஷா நினைத்திருக்கலாம்.

சோம்ஸ் – சம்யுக்தா ஜோடிக்கு பிரபுதேவா – கஜோல் ஆடிய ‘வெண்ணிலவே.. வெண்ணிலவே’ பாடல். சம்யுக்தாவின் காஸ்டியூம் அவரை சங்கடப்பட வைத்ததுபோலவே இருந்தது. ஆடவே முடியவில்லை அவரால். லேசாக கைகளை ஆட்டிக்கொண்டு சமாளித்தார்.

’சோம்ஸ்’ மனதிற்குள் பிரபுதேவா குடிபுக, ஆனா, உடம்புக்குள் வெளிப்பட வில்லை. அது சரி, அதென்ன, பிரபுதேவா ஸ்பெஷல் மாதிரி எட்டுபாடல்களில் மூன்று பிரபுதேவா நடித்ததிலிருந்து.

ஆரி – ரம்யாவுக்கு காஸ்டியூம் செம. ஆனால், பழைய பாடலான ‘மாமா… மாமா’ பாடலை ஒலிக்கவிட, ஒப்புக்கு ஆடினார் ரம்யா. சீரியஸா ஆட ட்ரைப் பண்ணினார் ஆரி. ஆனால், இவர்களை விட வெளியே ரேகா நன்றாக எக்ஸ்பிரஸன் கொடுத்தார். பிக்கி… பாட்டை மாத்தி போட்டுட்டீங்களோ? அப்படி என்ன கன்பிஷன்?

பாலா – ஷிவானி ஜோடி ‘டாக்டர்’ படத்தில் ’செல்லம்மா… செல்லம்மா’ பாடலுக்கு ஆடினார்கள். நிஜமாகவே ஷிவானி நன்றாக ஆடியதாகவே தோன்றியது. ஷிவானிக்கு எவ்வளவு உற்சாகமான பொழுதிலும் ஏதோ ஒரு சோகம் இருப்பதுபோல முகம் வைத்திருந்தார். நல்லவேளை ஆடும்போது அப்படியில்லை.

இப்போது மட்டுமல்ல, எந்தப் பாடல் போட்டாலும் கேபி, ஷிவானியும் தனியே ஒரு கச்சேரி வைத்துக்கொண்டிருப்பார்கள். அதுவும் கேப்பிரியல்லா ஒரு நொடிக்கூட ஆடாமல் இருக்கமுடியாது போலிருக்கும். அவ்வப்போது ரம்யா ஜாயிண்ட் பண்ணிப்பார்.  

’வீட்டில் ஆங்காங்கே கதையாடிக்கொண்டிருக்கும் ரசிகப் பெருமக்களே… புதுசா ஒரு ஆளு வாராங்க’ என்று தீம் மியுஸிக்கைப் போட்டார் பிக்கி. நாம் ஏற்கெனவே யூகித்தது + காலையிலிருந்து புரோமோவில் போட்டு விட்டதால் அது அர்ச்சனா என்பது தெரியும்.

ஆனால், வீட்டில் உள்ள சிலருக்கும் அது தெரியும்போல. அவரை வரவேற்றதில் அது வெளிப்பட்டது. ரியோ, நிஷாக்கு எல்லாம் சர்ப்பரைஸ் இருந்ததுபோலவே தெரியவில்லை.

தனது ட்ரேட் மார்க் சிரிப்போடு உள்ளே நுழைந்தார். ‘ஹாய்… ஹாய்…. என பத்து பதினைந்து ஹாய்க்குப் பிறகு, வீட்டுக்குள் நுழைய வந்தவர் பேக் சென்று, வேல்முருகனைப் பார்த்து ‘நீங்க வழக்கமா பாடி வரவேற்பிங்க இல்ல… ஆரம்பிங்க’ என்று கலாய்த்தலை இனிதே தொடங்கினார். வேல்ஸூம் சீரியஸாக ‘வண்ண நிலவே வா.. ‘ என்று ஆரம்பித்து பாடிக்கொண்டிருந்தார். ’நீங்க வெகுளியா… வெட்டுக்கிளியான்னு புரிஞ்சுக்க முடியல வேல்சு’

துபாய்லேருந்து வந்தவரைச் சுற்றி ஊரில் ஆள் நின்னு விசாரிப்பதுபோல நடந்தது. அர்ச்சனா என் ஒரு கால் இன்னும் துபாய்லதான் இருக்கு என்பதுபோல விசாரணை நடத்திட்டு இருந்தார். ‘உங்க பெஸ்ட் ஃபிரண்டு யாரு…? ’உனக்கு… ஹேய் நீ சொல்லு?’ எனக் கேட்டுக்கொண்டிருந்தார். ஏதாது சொல்லுங்க மேன் , நான் இப்ப கேட்கிற மூடுல இருக்கேன்’ என்பதாக அவரின் ஆக்‌ஷன்ஸ் இருந்தன.

பேச்சின் இடையே சுரேஷை லேசாக ஊமைக்குத்து குத்திக்கொண்டிருந்தார். அது அவருக்கும் புரிந்தது. ‘அவரோட நாற்பது பக்க நோட்டுல ‘அர்ச்சனா’ என தனிப்பக்கம் ஒதுக்கிவிட்டு, இருக்குமா… உனக்கு இருக்கு என்பதுபோல முகத்தில் ரியாக்‌ஷன் காட்டினார்.

‘என் பேரு டேமேஜ் ஆயிடுச்சா?’ என ஓடோடி வந்துக்கேட்டார் அனிதா. ‘இப்ப நான் என்ன சொல்றது…’ என வடிவேல் மாதிரி மனதிற்குள் ஓட்டிவிட்டு, ‘அதான் ரியோ சொன்னான்ல… முடிஞ்சு போனதை நீயே சொல்லிட்டு இருக்காத” என்றார் மையமாய் இல்ல இல்ல மய்யமாய். ‘அடடா… தெளிவாக சொல்லுங்க… நான் நல்லவளா… கெட்டவளா?’ என்று நாயகன் டயலாக்கை உல்டா பண்ணி மட்டும்தான் அனிதா கேட்கவில்லை.

அர்ச்சனாவைக் கரகரவென்று ’வெல்கம்’ கொடுத்தார் பிக்கி. ’சரி… சரி பேசிக்கிட்டே இருந்தா எப்படி… என்ன சொல்லி உள்ளே அனுப்பினமோ அதைச் செய்யுங்க’ என்று சொல்வது நீளமாக இருக்கும் என்பதால், ‘டாஸ்கை ஆரம்பிங்க’ என்றார் சுருக்கமாக.

‘டாஸ்க்கா…’ என எல்லோர் கண்களும் பயத்தில் விரிந்தன. பெரிய டாஸ்க்கெல்லாம் ஒண்ணுமில்ல. ஒவ்வொருத்தவங்களும் விருது கொடுக்கிறாங்க அர்ச்சனா. அவ்வளவுதான்.

‘ஒரு பிரச்னையை சொல்றீங்க… வாதாடுறீங்க… ஆனா… முடிவு சரியில்ல’ என பாலாவுக்கு ’சிம்பிளி வேஸ்ட்’ விருதளித்து மகிழ்ந்தார் அர்ச்சனா. ‘ஜாலியா சிரிச்சிட்டு இருக்காங்களே என நினைச்சிட்டு இருந்தப்ப, டக்குனு மோடு மாறினாங்க’ என சவாலான போட்டியாளர் விருதை ரம்யா பாண்டியனுக்குக் கொடுத்தார் சரியான தேர்வுதான். இதே விருது ரியோவுக்கும் கொடுக்கப்பட்டது. ஓகேதான்.

ஷோகேஸ் பொம்மைகள் விருதுகளை சோம்ஸ், சம்யுக்தாவும் சேர்ந்து பெற்றுக்கொண்டார்கள். சோம்ஸ் உருக்கமான கதைக்குப் பிறகு இன்னும் எதிர்பார்க்கிறாங்க’ என்றார் அர்ச்சனா. ஆமாம், பாஸ். நீங்க என்னன்னா.. அனிதா – வனிதா என வார்த்தைகளை சேர்த்து சொன்னதற்கே ஜகா வாங்கிட்டு இருக்கிங்க…

அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்ட் விருதை வேல்முருகனுக்கும் ஷிவானிக்கும் கொடுத்தார். ஷிவானிக்கு ஓகே. வேல்ஸ் வேட்டிச் சண்டை, ரஜினி பாட்டு டான்ஸ், ஜாடிக்குள் பந்து என ரவுண்ட் கட்டி அடித்தாரே… அவருக்கு இது பொருந்தலையே!

நமுத்துபோன பட்டாசு விருதை ஷனம், ஆரி வாங்கிக்கொண்டார்கள். பெரியளவில் வருத்தம் இருப்பதாக இருவரும் வெளிக்காட்ட வில்லை. இன்னும் பயிற்சி வேண்டுமோ என்பதுபோல முகத்தை வைத்துக்கொண்டார் ஷனம். ஆமாம்.. மேடம்.

’காணவில்லை விருது’ எல்லோரும் எதிர்பார்த்ததுபோல ‘ஆஜித் – கேபி இருவருக்கும் கிடைத்தது. டான்ஸ் என்றால் உற்சாகமாகி விடுகிறார் கேபி. ஆஜித் வந்ததிலிருந்து முழுசா ஒரு பாட்டுக்கூட பாடல. தம்பி, நீங்க ஸ்டேட்டர்ஜி எல்லாம் கத்துகிறது ஒரு பக்கம் இருக்கட்டும் டெய்லி ஒரு பாட்டை எடுத்துவிடுங்க… சேஃப் கேம் விருது நிஷாவுக்கும் ஜித்தன் ரமேஷிக்கும் கொடுக்கப்பட்டன. சரிதான்.

பிக்பாஸ் ட்ரெண்டிங் விருது சுரேஷ்க்கும் அனிதாவுக்கும் கொடுக்கப்பட்டன. ‘ஓஹோ நாம் நினைச்ச பக்கத்துலதான் வண்டி போய்ட்டு இருக்கு என ஹேப்பியாக சுரேஷ் விருது வாங்கிக்கொள்ள, ‘இதெல்லாம் நாம அனுபவிக்கலாமா… வேணாமா… என்பதுபோலவே வாங்கிகொண்டார் அனிதா. அதற்கேற்றார்போல, இது பிளஸாகவும் இருக்கலாம்… மைனஸாகவும் இருக்கலாம்’ என வாழைப்பழத்தில் சிரித்துக்கொண்டே ஊசியேற்றினார்.

’நான் எல்லாத்துக்கும் ஆமா சாமி போடறேன்னா?’ என வெள்ளந்தியாகக் கேட்டுக்கொண்டிருந்தார் நிஷா. ’ஆமாம்’ என்பதை சுத்தி வளைத்து விளக்கிக்கொண்டிருந்தார்.

வெளியே ‘இதை நான் எதிர்பார்த்தேன்’ என ‘காணவில்லை’ என்று போர்டு மாட்டிக்கொண்டு நின்றார் ஆஜித். சட்டென்று சிரிப்பு வந்தது. ‘காணவில்லை’ என்று போஸ்டர் ஒட்டியிருப்பதைத்தான் பார்த்திருப்போம். காணாமல் போன ஒருவரே ‘காணவில்லை’ என போர்ட்டை கழுத்தில் மாட்டிக்கொண்டிருந்தால் எப்படி இருக்கும்?

‘ஆஹா… நீங்க சேர்ந்து டான்ஸ் ஆடறீங்க.. ஒரே மாதிரி விருது வாங்கறீங்க’னு என ஜித்தன் ரமேஷ், அனிதாவை பாராட்டிக்கொண்டிருந்தார். ‘நீ வேற… சோஷியல் மீடியாவில் எப்படியெல்லாம் மீம்ஸ் போட்டுட்டு இருக்காங்களோனு நானே கவலையில இருக்கேன்’ என்பதுபோல ஒரு பதிலைச் சொன்னார் அனிதா.

உண்மையில் அனிதாவுக்கு இந்த விருது பெரும் குழப்பத்தைத்தான் கொடுத்திருக்கிறது. அவர் சுரேஷூடன் சண்டை போட்டது மட்டும்தான் அவருக்கு உறுத்துகிறதுபோலிருக்கிறது. அந்தளவுக்கு மோசமாகச் சித்திரிக்கப்பட வில்லை என்பதே யதார்த்தம். ரியோ சொன்னதை இனியாவது கடைபிடிக்கலாம்.

எவிக்‌ஷன் ப்ரீ பாஸை பாலாஜி திருடி விட்டார். கேமராவிடம் வந்து ‘திருடிட்டேன். காலையில கொடுத்திருவேன்’ எனச் சொல்லிக்கொண்டிருந்தார். ஆஜித்தே பாஸைக் காணவில்லை என்று தேட ஆரம்பித்துவிட்டார். எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதாக ஆஜித்தோடு சேர்ந்து தேடுவதாகச் சென்று தன்னையே காட்டிக்கொடுத்துக்கொண்டார்.

பிறகு அந்தப் பாஸை ஆரி திருடிவிட்டார். அதை ரமேஷிடம் கொடுக்க, அதை நிஷா வாங்கி ஆஜித்திடம் கொடுத்துவிட்டார். ஆரி சும்மாவே ஆத்துவார். சரியான டைமிங் என நிதானமாக ‘என்னை அவன் நம்ப விடாம பண்ணிட்டீங்க இல்ல’ எனக் கேட்க, நிஷாவுக்கு ஒன்றும் புரியல.

’ஆரி என்னிடம் கேட்டால் நான் என்ன செய்வேன். ஏன் இப்படி செஞ்சீங்க?’ என்று ஜித்தன் ரமேஷ் கேட்டதும்தான் நிஷாவுக்கு ஏதோ சீரியஸ் போலிருக்கே என்று புலப்பட்டது.

உண்மையில் அது சீரியஸான விஷயம்தான். அந்த பாஸ் வைத்திருப்பவர்கள் தாங்கள் எவிக்‌ஷன் செய்யப்படும்போது அதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம். பிரம்மாஸ்திரம்போல. எவருக்குமே அது முக்கியம்தான். ஆனால், ஆரி அதை தான் எடுத்துக்கொள்ள நினைத்து திருட வில்லை. நான் எடுத்தேன். நானே கொடுப்பேன் என்பதைத்தான் சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால், அதை உணராமல் நிஷா விளையாட்டாக அதை ஆஜித்திடம் கொடுத்துவிட்டார். அதை ஆஜித் வென்றிருந்தாலும் யார் திருடுகிறார்களோ… அடுத்தவர் திருடும் வரை அவர்களுக்கே அது சொந்தம்.

இதன் அடிப்படை நிஷாவுக்குப் புரியவில்லை. ’நான் ஒரு லூசு…’ என பத்து முறை சொல்லிவிட்டார். பிறகு ஆஜித்திடம் வாங்கி, ரமேஷிடம் கொடுத்தார் நிஷா. அதை ரமேஷ், ஆரியிடம் கொடுத்தார். அதை ஆரி, ஆஜித்திடம் கொடுத்தார். பேசாமல் பருத்தி மூட்டை கொடவுனிலேயே இருந்திருக்கலாமே பாஸ்.

அதற்குள் நிஷா அழுது ஆர்ப்பாட்டமாகி, ஒரு வழியாகி விட்டது. ’அழுதா அசிங்கமா இருக்கேன்னு சொல்லாதீங்க’ அந்த நேரத்திலும் சிரிக்க வைக்க ட்ரை பண்ணினார் நிஷா. அதுக்கு ரிப்ளே ஒன்றையும் கொடுத்தார் ரியோ. அக்கா தம்பிக்குள் கிண்டல் அடித்துக்கொண்டதை நாம எழுத முடியாது பாஸ் அதெல்லாம் சரி, அர்ச்சனா என்பவர் உள்ளே வந்தாரே அவரைக் காணோமே என்று தேடும்போது அவர் ‘அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்டாக ‘ மாறியிருந்தார்.

’போ… போ…. அவ்வளவுதான் பஞ்சாயத்து…போய் நல்லா தூங்க’ என பிக்கி லைட்களை ஆஃப் பண்ணினார். இன்றைக்கு எப்படி ஆனது தெரியுமா… என்று பிக்பாஸ் கரகரவென்று பின்கதை சுருக்கம் சொல்லிட்டு இருந்தார். அதுக்குதான் நாங்க இருக்கிறோமே… என்று என்னைப் போலவே பிக்பாஸ் அப்டேட் எழுதுபவர்கள் நினைத்திருப்பார்கள்.

01 யாரு ஓவியா… யாரு ஜூலி… யாரு கவின்… யாரு லாஸ்லியா? முதல்நாளிலேவா தேடுவீங்க? #BiggBoss4

02 ’உங்க வேலையை ஆரம்பிச்சிட்டீங்களே பிக்பாஸ்’ நாள் 2 – #BiggBoss4

03 பிக்பாஸில் முதல் அழுகையும் நிஷாவின் நிஜ ‘பிளாக்’ ஹியூமரும்! #BiggBoss4

04. நான் ஒண்ணும் சூப்பர் மாடல் இல்ல’ யாரை வம்புக்கு இழுக்கிறார் சம்யுதா! பிக்பாஸ் 3-ம் நாள் #BiggBoss4

05. அஜித் பாணியைப் பின்பற்றிய ’ஜித்தன்’ ரமேஷ்! பிக்பாஸ் 4-ம் நாள் #BiggBoss4

06. ஒருநாள் ஹீரோயின்… குடிகார அப்பா… அழ வைத்த அம்மா பாட்டு! பிக்பாஸ் 5-ம் நாள் #BiggBoss4

07. ஷிவானியின் ’கண்மணி’யும் கமலின் ’பாலிடிக்ஸ் பன்ச்’ம் இன்னும் சில பஞ்சாயத்துகளும் – பிக்பாஸ் நாள் 6 #BiggBoss4

08 நிஷாவின் முத்தம் எதற்காக… மிஸ் பிக்பாஸ் யார்… எவிக்‌ஷனில் டார்கெட் இவரே! பிக்பாஸ் 8-ம் நாள்

09. ரம்யா இன்னொரு ஓவியாவா? பிக்பாஸ் 9-ம் நாள் #BiggBoss

10. ரியோ –எம்.ஜி.ஆர், கேபி – சாய்பல்லவி, சுரேஷ் – பிரபுதேவா மற்றும் சிலரும்! பிக்பாஸ் 10-ம் நாள்

மாவட்ட செய்திகள்

Most Popular

பெண்களாக மாறிய ‘ஆண்’ இரட்டையர்கள்… “பிடிக்காத உறுப்பு நீக்கப்பட்டது” என பெருமிதம்!

ஆணாதிக்க மனோபாவத்தில் ஒருசில ஆண்கள் பாலுறுப்பை காரணம் காட்டி 'ஆண் நெடில்' பெருமை பேசுவார்கள். அவர்கள் எந்த உறுப்பை வைத்து பெருமிதம் கொண்டார்களோ அதே உறுப்பை வேண்டாமென நீக்கி திருநங்கைகள்...

“கர்ப்பமா இருக்கும் போது கூடவா இப்படி செய்வே” -கணவனால் கர்ப்பிணிக்கு நேர்ந்த கதி

கர்ப்பிணி மனைவி மீது சந்தேகப்பட்ட ஒரு கணவன், அவரை கொன்று உடலை இரண்டு நாள் வீட்டிலேயே வைத்திருந்ததால் கைது செய்யப்பட்டார்

6,500 பேரை காவு வாங்கிய கால்பந்து திருவிழா

எதிர்வரும் 2022ம் ஆண்டின் உலககோப்பை கால்பந்து திருவைழா கத்தார் நாட்டில் நடைபெற இருக்கிறது. இதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே இப்போட்டியினை நடத்தும் உரிமத்தினை பெற்றது கத்தார் அரசு.

திருவண்ணாமலையில், பிப்.26, 27-ஆம் தேதிகளில் கிரிவலம் செல்ல தடை!

திருவண்ணாமலை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் நாளை முதல் 2 நாட்களுக்கு பௌர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
TopTamilNews