Home சினிமா ’கொளுத்தி போடுவதில் சுரேஷே பொறாமை படும் ஆள் இவர்தான்’- பிக்பாஸ் 15-ம் நாள்

’கொளுத்தி போடுவதில் சுரேஷே பொறாமை படும் ஆள் இவர்தான்’- பிக்பாஸ் 15-ம் நாள்

சுயமுகத்தைக் காட்ட தயங்கிக்கொண்டிருந்தவர்களை உசுப்பேத்த டபுள் மடங்காகக் கொட்டியதும், ஆரியிடம் ஒட்டுமொத்த வீட்டுக்கும் பிடிக்காத ஒரு குணம் எவிக்‌ஷனில் வெளிப்பட்டதும் கொசுறாகச் சின்ன சண்டையுமாகச் சென்றது பிக்பாஸ் 15 –ம் நாள் எபிசோட்.

பிக்பாஸ் 15-ம் நாள்

சூப்பர் ஸ்டார் ‘எத்தனை சந்தோஷம்’ என்று துள்ளலோடு எழுப்ப, உற்சாகமாக வந்து ஆடினார்கள் போட்டியாளர்கள். என்ன… நீ என்ன பாட்டு வேணா போடு, நான் ஒரே ஸ்டெப்ஸ்தான் ஆடுவேனு உறுதியா இருக்காங்க… பாலா தூக்கக் கலக்கமோ சோகமோ ஆடாமல் உட்கார்ந்திருந்தார்.

புதிய கேப்டன் ரியோவின் தலைமையில் வேலைகள் செய்ய டீம் பிரித்துவிட்டார்கள் போலும். டாய்லெட் கிளினிங் டீமில் சுரேஷ். அவரை காலையிலேயே உரசிவிட்டிருந்தார் ஷனம். கைக் கழுவும் சிங்கில் துணி துவைக்காதீங்க என்று சொல்ல, ஏதோ பேச்சு வாக்கில் வரும் விஷயம் என நினைத்தால் பெரியதாகியது. சுரேஷால் குனிந்து துணி துவைக்க முடியவில்லை என்பதே பிரச்னையின் ஒன்லைன்.

‘சுரேஷ் பாத்ரூம் க்ளின்… பண்றார்… துணி துவைக்க முடியாதா?’ ரியோவிடம் சொல்லி விட்டு, வெளியே உட்கார்ந்திருந்த சுரேஷிடம் ‘அண்ணா… அண்ணா… நாம் ஃப்ரெண்ட்ஸ்’ எனச் சொல்லும்போது விவரம் இல்லாத சகுனியாகத்தான் தெரிந்தது. ஷனமால் ஒரு பெரிய கலகத்தை ஏற்படுத்த முடியவில்லை. உப்பு பெறாத விஷயத்தைப் பெரிதாக்க முயன்று மொக்கை வாங்கிக்கொண்டிருக்கிறார்.

ஷனம் சொன்னதை பேத்தி கேபிரியல்லா, சுரேஷிடம் போட்டுகொடுக்க, சுரேஷ் ருத்ரதாண்டவம் ஆடிவிட்டார். என் பர்சனல் விஷயங்களில் தலையிட்டால். அவ்வளவுதான்…’ என எச்சரித்துவிட்டுச் சென்றார். அதையே ஒரு பஞ்சாயத்தாக ரியோவிடம் கொண்டுபோனபோது ‘அதெல்லாம் உங்க பர்ஷன். வேலையை மட்டும் என்னிடம் பேசுங்க’ என அழகாக பிராதை முடித்து வைத்தார்.

திங்கள் கிழமையில் ஆவலோடு எதிர்பார்க்கும் எவிக்‌ஷனுக்கு நாமினேட் செய்யும் பகுதி வந்தது. அர்ச்சனாவுக்கு முதல் வாரம், சென்ற வார டாஸ்கில் வென்றதால் ஷனம்-வேல்முருகன், கேப்டன் என்பதால் ரியோ ஆகியோர் இந்த வாரம் எவிக்‌ஷனிலிருந்து எஸ்கேப் ஆகிறார்கள்.

முதலில் வந்த அர்ச்சனா, நாமினேட் செய்தது ஆரி மற்றும் ஆஜித்தை. இப்படி நாமினேட் செய்வதில் வீட்டுக்குள் ஒரு குருப்பிஸம்… ஆரியில் மொழியில் சொன்னால் ஃபேவரிட்டிஸம் இருந்ததைப் பார்க்க முடிந்தது. ஆஜித்தும் கேபியும் ஒன்றாகவே சுற்றுபவர். இவர்களின் வயதை ஒட்டிய செட் ஷிவானி. அவர்கள் மூவரும் நாமினேட் செய்தது அனிதா மற்றும் ஆரியை. இதற்கான காரணமாக அனிதா சட்டென்று கோபப்படுவதையும், ஆரியின் அட்வைஸையும் சொன்னார்கள்.

ஆரிக்கும் ஜித்தன் ரமேஷுக்கும் ஒரு புரிதல் உணர்வு இருப்பதைப் பார்க்க முடியும். அவர்கள் இருவரும் நாமினேட் செய்தது சுரேஷ் மற்றும் ஆஜித்தை. சொல்லப்பட்ட காரணங்களும் கிட்டத்தட்ட ஒன்றுதான்.

நல்ல நண்பர்களான அனிதாவும் சோம்ஸூம் சுரேஷை மறக்காமல் நாமினேட் செய்தார்கள். சென்ற வாரத்தில் சுரேஷை நாமினேட் செய்ய முடியாததால்தான் வேறு ஒருவரை தேர்ந்தெடுத்தார் என்று இதன்மூலம் தெரிகிறது. ஆனால், சுரேஷ் செமையாக விளையாடுகிறார். சென்ற வாரம் மட்டுமல்ல.. இந்த வாரமும் அனிதாவை நாமினேட் செய்ய வில்லை. அவரின் பட்டியலில் இருந்தது ஆரி மற்றும் ஜித்தன் ரமேஷ்.

’கெட்ட வார்த்தை பேசறார்’ என பாலாவை நாமினேட் செய்தார் வேல்முருகன் கூடவே சுரேஷையும். ரியோவின் சப்போர்ட் கேரக்டராக இருக்கிறார் என நிஷாவையும் ஆரியும் செலக்ட் பண்ணினார் பாலா. நேற்று ரேகா எவிக்‌ஷன் ஆனதும் ரியோ அழத் தொடங்கியதுமே ஓடிச்சென்று டிஸ்யூ பேப்பர் எடுத்து தயாராக இருந்தார். எப்போதுமே ரியோ மீது அக்கறையோடு இருக்கிறார் நிஷா. ஆனால், அதை பாலா சொல்வதுபோல எடுத்துக்கொள்ள முடியுமா என்பது குழப்பமே.

எதிர்பார்த்ததுபோலவே ஷனம், பாலாவையும் சுரேஷையும் செலக்ட் பண்ண, ரியோவின் இருவர் சுரேஷூம் ரம்யாவும் (மாஸ்க் பஞ்சாயத்து தீரல)

’நான் கேப்டனாக இல்லாட்டி, ஷனம்க்கு விழுந்த 9 எவிக்‌ஷன் ஓட்டுகள். எனக்குத்தான் விழும்’ சென்ற வாரத்தில் சுரேஷ் இதைச் சொன்னார். அப்படியே இந்த வாரத்தில் பலித்தது. அதிக ஓட்டுகள் வாங்கிய சுரேஷ், ஆரி, அனிதா, ஆஜித், பாலா ஆகியோர் மக்களின் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறார்கள்.

நாமினேட் செய்யும்போது அதிகம் சொல்லப்பட்ட வார்த்தைகளோடு யார் யார் எவிக்‌ஷன் பட்டியலில் இருக்கிறார்கள் என்று வாசித்தார் பிக்பாஸ். என்ன ஒரு வில்லத்தனம்.

‘ஆஜித் கிட்ட பாஸ் இருக்கு. சண்டை போட சுரேஷ் வேணும்’ என ஏதேதோ கணக்குப் போட்டு ‘இந்த வாரம் நான்தான் எவிக்‌ஷன் ஆவேன்’ என அழுதுகொண்டிருந்தார் அனிதா சம்பத். தன் பெயரைக் கெடுத்துக்கொண்டிருப்பதாக அவர் நினைத்து, அதை மாற்றுவதற்கு செய்யும் ஒவ்வொரு செயல்தான் பெயரைக் கெடுத்துக்கொண்டிருக்கிறது.

’என்னதான் பத்த வெச்சாலும் நனைஞ்ச விறகாவே இருக்காங்களே’ என்று நினைத்த பிக்கி, ‘வேட்டியை மடிச்சிகட்டிட்டு’ நானே களத்தில் இறங்குகிறேன் என்று முடிவெடுத்தார். போட்டியாளர் முகங்கள் அடங்கி வீல் ஒன்றைக் கொடுத்து ’சொல்றியா… செய்யறியா’ விளையாட்டை ஆடச் சொன்னார்.

எவிக்‌ஷனில் உள்ள ஐவரும் ஒரு டீம், மற்றவர்கள் ஒரு டீம். எனக்கென்னவோ அந்த வீலிங் மிஷினைப் பார்த்தால் நாரதர் கையில் இருக்கும் இன்ஸ்ட்ரூமெண்ட் போலவே தெரிந்தது.

முதலில் வந்தவர் வேல்முருகன். வில்லங்கமாகச் சொல்லமுடியாது என நினைத்தவர் டாஸ்காக கொடுக்கப்பட்ட ஷேவிங் கிரீமால் மூன்று பேருக்கு மீசை வரைந்துவிட்டு சென்றார்.  

அடுத்து அர்ச்சனாவிடம் மாஸ்க் விளையாட்டை ஆடச் சொல்ல, வேல்ஸ், ரியோ, ஷிவானிக்கு கொடுத்தார். ’யாரையெல்லாம் எவிக்‌ஷனுக்கு நாமினேட் செய்வீர்கள்?” என ரியோவிடம் கேட்டதற்கு கன்பெக்‌ஷன் ரூமில் சொன்ன ஸ்கிரிப்டை திரும்ப சொல்ல ஆரம்பித்தார். சுரேஷைச் சொல்லக்கூடாது என்றதால் ரம்யா, ஷனம், சம்யுக்தா என்று பட்டியலில் சேர்த்தார்.

நான் சொல்றேண்டா… என துணிவோடு எதிர்கொண்டார் நிஷா. சிம்ப்ளி வேஸ்ட் விருதை வேல்முருகன், ஷிவானிக்குத் தந்தார் வேல்ஸ் முகம் மாறியது. நமுத்து போன பட்டாசாக சோம்ஸ் மற்றும் ஷனமைத் தேர்ந்தெடுத்தார் நிஷா. ‘ரம்யாவை எல்லோருக்கும் பிடிக்கும் (ஆர்மி காரர்கள் காதில் தேன் பாய்ந்த தருணம்) ரொம்ப ஸ்டார்ங் போட்டியாளர் என்பதால் நாமினேட் செய்தார் நிஷா. ஆனால், உண்மையில் ரம்யாவை நாமினேட் செய்ய வில்லை நிஷா. இந்த விளையாட்டின்மூலம் தன்னை இவர் சொல்லியிருப்பாரோ என்று ரம்யா நினைத்திருக்கக்கூடும். இதுதான் கேம் ப்ளானா பிக்கி.

ஜித்தன் ரமேஷ் தனது செய்யறேன் டாஸ்க்காக ‘மொக்க ஜோக் சொல்லாதீங்க நிஷா’ என்றதும் ரியோ டக்கென்று சூடானார். இந்தப் போட்டியில் நீங்க ஐந்து பேரும் வர மாட்டீங்களா… இந்த கேமின் ப்ளூ ப்ரிண்டைக் கொண்டு வா… சவுண்ட் விட்டார். முகமூடி மாட்டியிருக்கார் என திரும்பவும் இன்றும் சொல்லப்படுவதால் ‘சண்டை போட்டே ஆகணும்’ என நிர்பந்தம் வந்து விட்டது ரியோவுக்கு. அதனால், பழைய படங்களில் யாரையும் அடிக்க மாட்டேன் என்று அம்மாவுக்கு சத்தியம் செய்துதரும் ஹீரோ அநியாயத்தைக் கண்டு பொறுக்க முடியாமல் எல்லை மீறுவாரே அந்த எமோஷனில் நின்றுகொண்டிருந்தார் ரியோ. ஆனால், முடிவு சப்பென்று ஆயிற்று.

ஆனால், பேச்சு வாக்கில் சுரேஷை நேரடியாக ஒரு பஞ்ச் விட்டார் ரியோ. இங்கிருந்தால் மரியாதை இல்லை என ’டூ மினிட் ப்ரேக்’ என வெளியேறினார். அங்கே பிக்பாஸைப் பார்த்து நல்லா கொளுத்தி போட்டிங்க பிக்பாஸ் என பொறாமை வழியும் கண்ணோடு சொல்லிக்கொண்டிருந்தார் சுரேஷ். அட… நம்ம கொளுத்திங் ஸ்டார் சுரேஷே பொறாமை படும் அளவுக்கா நம்ம வேலை செஞ்சிருக்கோம் என பிக்பாஸ் காலரைத் தூக்கி விட்டிருப்பார்.

மறுபடியும் கேம் ஆரம்பிக்க, கேபி என்ன டாஸ்க்குக்கோ வேல்முருகன் பெயரைச் சொல்ல, கொத்திக்க ஆரம்பித்துவிட்டார். ஒரு மனுஷன் அமைதியா இருந்தா எல்லோரும் என்னையே சொல்வீங்களா… என கொந்தளிக்க, அர்ச்சனா சமாதானப்படுத்தினார்.

இந்த கேம் மூலம் பலரும் சண்டை போடும் மோடுக்கு திருப்பப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பிரச்னையைப் பற்றி ஆரி, ரியோ, அனிதா காம்பினேஷன் கூட்டணி பேசிக்கொண்டிருக்க, வழக்கம்போல சற்று தூரத்தில் கவனிக்காதது மாதிரி நின்று கவனித்துகொண்டிருந்தார் ஷனம்.  ஆரி, ரியோ இருவரும் தான் பேசறதைக் கேட்கவே இல்லை என அழுகையும் ஆத்திரமுமாக வெடித்தார். ‘நான் குழந்தை இல்லை… கல்யாணம் ஆயிடுச்சு… எல்லா நியூஸூம் படிப்பேன்’என்று நீண்ட நேரம் ‘என்னைய பேச விடுங்க… என்னைய பேச விடுங்க’ என்றுதான் சொன்னாரே தவிர கடைசி வரை என்ன பேச நினைத்தாரோ அதைப் பேச வில்லை. அனிதாவுக்கு எவிக்‌ஷனுக்கு வந்தில் ஸ்ட்ரெஸ்ஸில் இருக்கிறார்.

டான்ஸ் ஆடலைன்னா லக்ஸரி பட்ஜெட் பாயிண்ட்ஸ் இல்ல என்றதுபோல, சண்டை போடலன்னா இடமில்லைனு பிக்கி மறைமுகமாகச் சொல்ல, ‘பாகுபலியில் தமன்னா சண்டை போடுவதுபோல துள்ளிக் குதித்து எகிறினார்கள் இன்று. அதாவது கொஞ்சம் வேடிக்கையாகவும் இருந்தது.

பிக்பாஸின் சுழற்றிய மாயச்சுழலில் பல விக்கெட்டுகள் விழுந்துகொண்டிருக்கின்றன. அந்த சந்தோஷத்தோடு எண்ட் கார்டு போட்டார் பிக்கி.

01 யாரு ஓவியா… யாரு ஜூலி… யாரு கவின்… யாரு லாஸ்லியா? முதல்நாளிலேவா தேடுவீங்க? #BiggBoss4

02 ’உங்க வேலையை ஆரம்பிச்சிட்டீங்களே பிக்பாஸ்’ நாள் 2 – #BiggBoss4

03 பிக்பாஸில் முதல் அழுகையும் நிஷாவின் நிஜ ‘பிளாக்’ ஹியூமரும்! #BiggBoss4

04. நான் ஒண்ணும் சூப்பர் மாடல் இல்ல’ யாரை வம்புக்கு இழுக்கிறார் சம்யுதா! பிக்பாஸ் 3-ம் நாள் #BiggBoss4

05. அஜித் பாணியைப் பின்பற்றிய ’ஜித்தன்’ ரமேஷ்! பிக்பாஸ் 4-ம் நாள் #BiggBoss4

06. ஒருநாள் ஹீரோயின்… குடிகார அப்பா… அழ வைத்த அம்மா பாட்டு! பிக்பாஸ் 5-ம் நாள் #BiggBoss4

07. ஷிவானியின் ’கண்மணி’யும் கமலின் ’பாலிடிக்ஸ் பன்ச்’ம் இன்னும் சில பஞ்சாயத்துகளும் – பிக்பாஸ் நாள் 6 #BiggBoss4

08 நிஷாவின் முத்தம் எதற்காக… மிஸ் பிக்பாஸ் யார்… எவிக்‌ஷனில் டார்கெட் இவரே! பிக்பாஸ் 8-ம் நாள்

09. ரம்யா இன்னொரு ஓவியாவா? பிக்பாஸ் 9-ம் நாள் #BiggBoss

10. ரியோ –எம்.ஜி.ஆர், கேபி – சாய்பல்லவி, சுரேஷ் – பிரபுதேவா மற்றும் சிலரும்! பிக்பாஸ் 10-ம் நாள்

11. அர்ச்சனா எண்ட்ரியும்… டோட்டல் டேமஜ் விருதுகளும்! பிக்பாஸ் 11-ம் நாள் #BiggBoss4

12. எட்டு நிமிடத்தில் இதயங்களை வென்ற சுரேஷ் தாத்தா – பிக்பாஸ் 12-ம் நாள் #BiggBoss4

13. ’பாலிடிக்ஸ் பன்ச்’கள்… ‘குறுக்கு விசாரணை’, ’சிண்டு முடிதல்…’ வெல்கம் பேக் கமல் சாரே! பிக்பாஸ் -13-ம் நாள்

14. பாத்திமா பாபு, ரேகா… முதல் எவிக்‌ஷன் சீனியர்களே… – மக்கள் தீர்ப்பா.. பிக்பாஸின் திட்டமா?

மாவட்ட செய்திகள்

Most Popular

கருணாஸ் யாத்திரை தடுத்து நிறுத்தம்… போலீசார் தம்மை கேவலப்படுத்துவதாக புகார்…

முக்குலத்தோர் புலிப்படை சார்பில் யாத்திரை சென்ற எம்எல்ஏ கருணாஸை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முக்குலத்தோர் புலிப்படை தலைவர்...

“கூட்டணி பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்குங்கள்” – அதிமுகவுக்கு, பிரேமலதா வலியுறுத்தல்

கூட்டணி பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டுமென அதிமுகவுக்கு, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார். தமிழக சட்டமன்ற தேர்லையொட்டி, அதிமுக சார்பில் முதலமைச்சர் எடப்பாடி...

நான் யார் பேச்சையும் கேட்க மாட்டேன்; என்னை கேள்வி கேட்டால் மிதித்துவிடுவேன்.. கடுமை காட்டிய சீமான்

வருகிற 2021 சட்டமன்ற தேர்தலுக்காக நாம் தமிழர் கட்சி தான் வேட்பாளர்கள் பட்டியலை முதலில் அறிவித்திருக்கிறது. இதுதொடர்பாக மதுரை ஒத்தக்கடையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில்...

குடியரசு தின முன்னெச்சரிக்கை – போலீஸ் பாதுகாப்பில் பாம்பன் பாலம்!

குடியரசு தினத்தை முன்னிட்டு இந்தியா முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லியில் குடியரசு தினத்தன்று பெட்ரோல் நிலையங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்களும் மூடப்படுகின்றன.
Do NOT follow this link or you will be banned from the site!