Home சினிமா நிஷாவின் முத்தம் எதற்காக... மிஸ் பிக்பாஸ் யார்... எவிக்‌ஷனில் டார்கெட் இவரே! பிக்பாஸ் 8-ம் நாள்

நிஷாவின் முத்தம் எதற்காக… மிஸ் பிக்பாஸ் யார்… எவிக்‌ஷனில் டார்கெட் இவரே! பிக்பாஸ் 8-ம் நாள்

ஆட்டம், பாட்டம், செந்தமிழ்,கேட் வாக், சிண்டு முடிதல், கோபம், கண்ணீர்… என பிக்பாஸின் வழக்கமான ஃபார்ம்க்குத் தயாராகும் நாளாக நேற்றைய எபிச்சோட் காட்சிகள் நிறைந்திருந்தன.

நேரடியாக மதியம் என ஆரம்பித்தது எட்டாம் நாள் பிக்பாஸ் காட்சிகள். லக்ஸரி பட்ஜெட்டுக்காக 3300 பாயிண்டுகள் உங்களுக்கு ரெடி… என்றதும் போட்டியாளர்களுக்கு மட்டுமல்ல, நமக்கு கொஞ்சம் ஷாக். வழக்கமாக ஏதாச்சும் போட்டிகள் வைத்துதானே பாயிண்ட் முடிவு பண்ணுவார் பிக்பாஸ்.

ஆனால், இதையெல்லாம் முன்பே யூகிச்சு, பொருட்களைப் பார்த்துச் சொல்ல ஓர் ஆள், எழுத ஓர் ஆள், எவ்வளவு மதிப்பு எனக் கணக்கு போட ஓர் ஆள் என முன்பே அப்பாயின்மெண்ட் பண்ணின வில்லங்க கேப்டன் சுரேஷ் திங்கிங் செம… மூளைக்காரருதான் பாஸ் நீங்க!

அனிதா சம்பத் என்ன பொருட்கள் எனப் பார்த்துச் சொல்ல, சம்யுக்தா எழுத, ரியோ எவ்வளவு மதிப்பு சேர்ந்திருக்கு எனக் கணக்கு போட்டார். சிக்கன், மீன், கடலை மாவு என எழுதிட்டே இருக்கையில் பிக்பாஸ் ஒரு ட்விஸ்ட் வெச்சார். லக்ஸரி பட்ஜெட் வேணுமா… பெட்ரூம் & டாய்லெட் சாவி வேணுமா? என்றதும், உடனே போர்ட்டில் உள்ள எல்லாத்தையும் அழிச்சிட்டங்க. இதுதான் சொல்லப்போறீங்கன்னா நேரடியாவே சொல்லியிருக்கலாமே பிக்பாஸ். சிக்கன் பீஸ்ஸெல்லாம் கண்முன்னாடி வந்துபோச்சே’ என ரொம்ப ஃபீல் பண்ணினார் ரியோ.

ஒரு வழியாக சாவிகள் கிடைக்க, பிக்பாஸ் வீட்டின் அனைத்துப் பகுதிகளும் பயன்பாட்டுக்கு வந்தது. ஜெயில் தவிர… அதை என்னிக்கு ஆரம்பிக்க போறீங்க தல?

கிச்சன் கேபினட்டின் சமையல் மணக்குதோ இல்லையோ சண்டை வெடிக்குது. ஷனமிடம் ஒரு பாத்திரத்தை க்ளீன் செய்து தரக் கேட்டிருக்கிறார் கேப்டன் சுரேஷ். அதுக்கு ஏதோ விளக்கம் கேட்க, பேச்சு நீண்டு, ‘அப்படித்தான் ராஜாத்தி’ என சிவாஜி ஸ்டைலில் கொஞ்சுவதுபோல குத்தினார் சுரேஷ்.

இதுகூட தெரியாமல பிக்பாஸ்க்கு வந்திருக்கேன் என்பதாக ‘இப்படியெல்லாம் ஃபேக்கா புகழாதீங்க” என வெட்டினார் ஷனம். அதுக்கும் ஒரு பதிலைச் சொன்னார் சுரேஷ். பாஸ் எல்லா பந்துக்கும் நீங்களே ஸ்டிரைக் எடுக்கணும்னா எப்படி… ஒண்ணு ரெண்டு பந்துகளை மத்தவங்களும் ஆடட்டும். (ஆமா…. டி வில்லியர்ஸ் பேட்டிங் விளாசினதுல, சமைக்க வைச்சிருந்த கத்திரிக்காய் எல்லாம்கூட கிரிக்கெட் பந்து மாதிரிதான் தெரியுது)

 ’காலையில எழுந்திருச்சதும் என்ன குழம்பு வெக்கலாம்னு யோசிக்கிறதை விட்டுட்டு, எப்படி குழப்பலாம்னு இருக்காங்க’ என நிஷா பட்டிமன்ற ஜோக் ஒண்ணை எடுத்துவிட்டார். பட்டிமன்றமாக இருந்திருந்தால் பழனி இதுக்கு ஒரு கவுண்டர் போட்டிருப்பார். நல்லவேளை நிஷா சொன்னது யார் காதுக்கும் கேட்கல.

ஒரு வழியாக எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்த ’ஆடலும் பாடலும்’ ஸாரி… ஸாரி… எவிக்ஸன் விஷயம் வந்தது. வழக்கம்போல முதல் ஆளாக ரியோவைக் கூப்பிட்டார் பிக்பாஸ். வீட்டில் சில பிரச்சனைகள் ஷனமால் வந்ததால் ஷனம், மிங்கிள் ஆகல என்று ஷிவானியைச் செலக்ட் பண்ணினார்.

அடுத்து வந்த ஷனம் முதல் பேராக சம்யுக்தாவைச் சொன்னார் (எதிர்பார்த்ததுதான்) அடுத்த பெயர் கேப்ரில்லா. ரேகா வந்தார். 4 வயது குழந்தையை விட்டுட்டு வந்ததால சம்யுக்தாவையும், ஏற்கெனவே ஃபேமஸாகி விட்டதால் ரம்யாவையும் சொன்னார். ரம்யாவுக்கான காரணம் லாஜிக்தான்.

பாலா யாரைச் சொல்வார் எனத் தெரியுமே… முதல் பேராக ஷனம். ஒரு சண்டையை வளர்த்தாங்க என்பது காரணம். பாஸ் நீங்க பத்த வெச்ச நெருப்புதானே அது. அவங்கள மட்டும் எப்படி குற்றம் சொல்ல முடியும்? நேற்று கமல் எடுத்த கிளாஸ் வேஸ்ட்டா? அடுத்த பெயர் சம்யுக்தா.

நேற்று ரம்யாவைப் புகழ்ந்த வேல்முருகன் இன்று அவரை எவிக்ஸனுக்கு தேர்ந்தெடுத்திருந்தார். என்னப்பா வாழ்க்கை இது. ரம்யா ஆர்மியின் பொல்லா கோபத்துக்கு ஆளாகிட்டீங்க வேலு… இன்னொரு பெயர் கேப்ரில்லா.

ஜித்தன் ரமேஷ் சொன்னது ஷிவானி மற்றும் ஷனம். ஷிவானி மற்றும் ரேகா ஆகியோரைச் சொன்னார் சோம்ஸ். ஆரி தேர்ந்தெடுத்தது ரேகா, ஷனம். கேப்ரில்லா தெளிவாகச் சொன்ன பெயர்கள் சம்யுக்தா, ஷனம்.

நான் ஒரு பெயரை நினைச்சிட்டு இருந்தேன். அவரைச் சொல்லக்கூடாது என சொன்னதால என இழுத்தார் நிஷா. சுரேஷ் வீட்டின் தலைவராகி விட்டதால் அவரை செலக்ட் பண்ணக்கூடாதுன்னு பிக்பாச் சொன்னார். ஒருவேளை அவரா இருக்குமோ. நிஷா சொன்ன பெயர்கள் ஷனம் என்பது எதிர்பார்த்ததுதான், ஆஜித் என்பது ஆச்சர்யம்தான்.

சம்யுக்தா எதிர்பார்த்ததைப் போலவே ஷனம், ஷிவானி ஆகியோரைத் தேர்ந்தெடுத்தார். சுரேஷ் முன்மொழிந்த பெயர்கள் ஆஜித், ஷனம். வழக்கமாக அனிதா சம்பத் பெயரைச் சொல்வார் எனப் பலர் நினைத்திருக்கலாம். ஆனால், சுரேஷ் இந்த விளையாட்டின் சூட்சுமத்தின் அடிநாதத்தைத் தெரிந்திருக்கிறார். அனிதாவின் தவறுகளை மன்னித்துவிட்டேன் என்று சொல்லிவிட்டு, எலிமேனஷனுக்கு அனிதா பெயரைச் சொன்னால், ஆடியன்ஸ் மத்தியில் நம் பெயர் லேசா டேமேஜ்ஜாகிடும் என்பதை உணர்ந்திருக்கிறார்.

அதனால் தவிர்த்திருக்கக்க்கூடும். அதேபோல நானும்தான் என்பதுபோலவே அனிதா சொன்ன இரண்டு பேர் ஷனம் மற்றும் சம்யுக்தா. ஒருவேளை சுரேஷ் கேப்டனாக இல்லாவிட்டால் சொல்லியிருக்கலாம்.

ஆஜித் உள்ளே வந்து உட்கார்ந்ததும் சம்யுக்தா என்று ஆரம்பித்தார். சட்டென்று இல்ல… இல்ல… என்று தடுமாறி ஷனம் மற்றும் ஷிவானி பெயரைச் சொன்னார். இன்னும் குழந்தை புள்ளையாவே இருக்க ஆஜித்.

ஷனம் பெயரை 11 பேரும், ஷிவானி பெயரை 6 பேரும் சம்யுக்தா பெயரை 5 பேரும் எலிமேனசனுக்குத் தேர்ந்தெடுத்திருந்தார்கள். அவர்களோடு சேர்த்து, ரேகா, கேப்ரில்லா, ஆஜித், ரம்யா ஆகியோரையும் எலிமேனஷன் லிஸ்ட்டில் சேர்த்து விட்டார் பிக்பாஸ். யார் யாருக்கு ஆர்மி இருக்கு என்பதை நிருப்பிக்க வேண்டிய நேரம் மக்களே… ரெடி ஸ்டார்ட்.

எவிக்‌ஷனுக்கு செலக்ட் செய்யப்பட்ட ஒரே ஆண், ஆஜித் மட்டும்தான். ஒருவேளை ரேஸில் சுரேஷ் இருந்திருந்தால் அவரை ஓரிருவர் சொல்லியிருக்கலாம். இதில் உள்ள உளவியல் நுட்பமானது. ஆண்கள் பலரும் இன்னும் விளையாட்டுக்குள்ளேயே வர வில்லை. அதனால், அவர்களுக்கு கெட்ட பெயர் ஏதுமில்லை. அதனால், எவிக்‌ஷன் லிஸ்ட்டில் இடம்பெற வில்லை. இது முதல் வாரம்தான் போகப்போகப் பார்ப்போம். பிக்பாஸ் நம்பியிருப்பது கேப்டன் சுரேஷைத்தான்.

ரொம்ப சீக்கிரம் சீக்கிரமாக நிகழ்ச்சிகள் போய்க்கொண்டிருக்கிறதே என்று நினைத்தால், ரேம்ப் வாக் ஷோ, திறமையை வெளிகாட்டும் நிகழ்ச்சி என ஏற்பாடுகள் பிரமாதமாக இருந்தது. இந்தப் போட்டிக்கு ஷனம் மற்றும் பாலா நடுவர்களாம். ஆஹான்!

வழக்கம்போல ரியோ ஆரம்பித்து எல்லோரும் ரேம்ப் வாக் போனார்கள். சிலர் ’வாக்கிங்’ சென்றது தனிக்கதை. பெஸ்ட் டிரஸ்ஸிங் பட்டத்தை ஆண்களின் ரமேஷ்க்கும், பெண்களில் சம்யுக்தாவுக்கும் கொடுத்தார்கள். பெஸ்ட் ஆட்டிடியூட் பட்டத்தை ஆரிக்கும் ஷிவானிக்கும் கொடுத்தார்கள் (பின்னால், அது ரேகாவுக்கு என மாற்றினார்கள்) முன்னாடி சீசன்கள்ல ஏன் கொடுக்கறோம்னு ஒரு காரணத்தைச் சொல்வாங்க. அது மொக்கையா இருந்தாலும் கணக்குக்குனு வெச்சிப்போம். இப்ப பட்டம் கொடுக்கும்போது காரணத்தைக்கூட சொல்ல மாட்டங்கறீங்க.

அடுத்து தனித்திறமை சுற்று. ’கருத்தவாலு…’ பாட்டு செமையான டான்ஸைப் போட்டார் ஷிவானி. ‘அதாரு.. உதாரு’ என டான்ஸில் தூள் கிளப்பினார் ஜித்தன் ரமேஷ். ‘படங்கள்ல நீ இப்படி ஆடி பார்த்ததே இல்லையே’ என மெய்மறந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள் மற்றவர்கள்.

கேப்ரில்லா நிச்சயம் டான்ஸ்தான் ஆடுவார் என யூகிக்கலாம். ஆனால், மேடையை விட்டு இறங்கி, செமையா ஆடி ரகளை விட்டார். அனிதா சம்பத் பெண்களின் பெருமை என அழகான எதுகை மோனை தமிழில் நீண்ட உரையை நிகழ்த்தினார். அங்கிருந்த பலருக்கும் இதுபோல பேச முடியாது என்பதால் ‘ஆபிஸ் மீட்டிங்கில் இங்கிலிஷில் பொளந்து கட்டுபவரை வாய்பிளந்து பார்ப்பதை’ப்போல பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், அனிதா பேசிய கண்டண்ட் ரொம்ப பழக்கமான டெம்ப்ளேட் கண்டண்ட்தான். பேச்சுப் போட்டியில் பேசியதை திரும்ப பேசினதைப் போல இருந்தது. அதனால், என்ன மற்றவர்களும் பாட்டுக்கு ஆடி பிராக்டிஸ் பண்ணியதைத்தானே அடிக்காட்டினார்கள்.

அனிதா பேசி முடித்ததும் எல்லோரும் எழுந்து நின்று கைத்தட்டுவார்கள் என எதிர்பார்த்ததுதான். ஆனால், மிஸ் டேலண்ட் பட்டம் கிடைக்கும் என்பது எதிர்ப்பார்க்க வில்லை. அதேபோல, பரதம் எப்படி வந்திருக்கும் என சொல்றேன் என மாம்பழம் திருடும் கதை ஒன்றைச் சொல்லி ஆடிக்காட்டினார். அதற்கு மிஸ்டர் டேலண்ட் பட்டமாம். நிகழ்ச்சி ஏற்பாடு பண்ணின ஒரு நிறுவனத்தைப் பற்றி பாலா சொன்னதைத்தான் அவரின் ஜட்ஜ்மெண்ட்டுக்கும் நாம் சொல்ல வேண்டியிருக்கிறது.

அப்பறம் கேள்வி பதில் பகுதிக்குச் செல்லாமா? (வடிவேல் இசையின் பல வடிவங்களைத் தெரிந்துகொள்வது எனக்கு நினைவுக்கு வந்துச்சு. உங்களுக்கும் இஷ்க்… இஷ்க் என்று கேட்டதா?)

இந்தப் போட்டியில் வென்றால் எப்படி வெல்ல வேண்டும் என்பதாகக் கேட்டார் பாலா.. (அதுதானே கேட்டிங்க… நானே ரியோ சொன்ன பதிலிருந்துதான் கேள்வியை யூகிச்சேன்) பர்ஃபெக்ட் ஜெண்டில்மேனாகப் புரிந்துகொள்ளப்பட்டு வெல்ல வேண்டும் என்றார் ரியா.

’உங்களை எப்படி முன்மாதிரியாகக் காட்ட விரும்பறீங்க ஷிவானி?’ 1000 பேர் 1000 விதமாகச் சொல்வாங்க… ஆனா, நாம் நினைச்ச பாதையில போய்க்கிட்டே இருக்கனும். நீ எதுவாக நினைக்கிறாயோ; அதுவாக மாறுவாய்’ என விவேகானந்தர் சொல்லியிருக்கார் நினைக்கிறேன்’ என்றார்.

’போன தோல்வியில் என்ன தவறு செய்தீங்க… இப்ப எப்படி ப்ளான் பண்னியிருக்கீங்க?’ என்ற கேள்விக்கு ‘முன்னாடி வெகுளியாக இருந்துட்டேன். இப்போ 40 வயசாயிடுச்சு’ என கிட்டத்தட்ட ஏதோ சொல்ல வந்தார்.

’வீட்டுல யார் யார் முகமூடி போட்டிருக்காங்க’ என கொளுத்திங் கேள்வியைக் கேட்டார்கள். ’எல்லோரும்தான். ரியோவை உதாரணத்திற்குச் சொல்ல ஆரம்பித்ததும் செம கடுப்பாகி விட்டார் ரியோ. என்னை ஏன் எக்ஸாம்பிள் சொல்றீங்க என சண்டைக்கு வந்துவிட்டார்.

’பயங்கர’ சுரேஷே ஒருநிமிடம் சுதாரித்துவிட்டு, ‘நான் அவரை உதாரணத்திற்குச் சொல்லவில்லை… ஊன்றுகோலாகச் சொன்னேன்’ என்று சமாளித்த விதம்  செம. ஆள் ஃபுல் ஃபார்ம்ல இருக்கார். இந்த வாரம் செமையா இருக்கும் போல.

ஆனால், ஆச்சர்யம் பாருங்க… விவேகானந்தரா எனக் குழம்பிய ஷிவானி மிஸ் பிக்பாஸ், பதில் சொன்ன மாதிரி இருந்த ஜித்தன் ரமேஷ்தான் மிஸ்டர் பிக்பாஸ். சூப்பரா இருக்குல…

இரவு 12 மணிக்கு மேல, நிஷா தனது பிறந்த நாளுக்கு அம்மாவை மிஸ் பண்ணுவதைச் சொல்லி, கண் கலங்கி அதைச் சமாளிக்க தனக்குத்தானே வாழ்த்துகளைச் சொல்லிக்கொண்டார்.

ஆனால், பிக்பாஸ் அடுத்த பத்து நிமிடத்தில் சுடச்சுட கேக்  அனுப்பிவிட்டார். நிஷாவின் பிள்ளையை மடியில் வைத்துக்கொண்டு நிஷாவின் அம்மா பேசியபோது நிஷா ஓடிச்சென்று டிவியில் ஒளிர்ந்த பிள்ளைக்கு முத்தம் கொடுத்தது உருக்கமாக இருந்தது.

பிள்ளையைப் பிரிந்து ஒரு வாரம்தான் ஆயிருந்தது என்றாலும் அது பெரும் சோகத்தை நிஷாவுக்கு தந்திருக்கும்போல. இதைப் பார்த்ததும் வீட்டு ஞாபகம் வந்து ஷிவானி தனியே சென்று அழுதுகொண்டிருந்தார்.

கேக் வாசனை வீட்டில் நிறைந்துகொண்டிருக்கையில் பிக்பாஸ் விளக்குகளை அணைத்தார். நிஷா தம் பிள்ளையை நினைத்து தூங்க நீண்ட நேரமாகியிருக்கும்.  

மாவட்ட செய்திகள்

Most Popular

கோயில் பூட்டை உடைத்து அம்மன் சிலை திருட்டு!

கோவை கோவையில் அம்மன் கோயில் பூட்டை உடைத்து, மர்மநபர்கள் சுவாமி சிலையை திருடிசென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை காட்டூர்...

சசிகலாவுக்காக காலியாக இருக்கும் ‘அமமுக தலைவர்’ பதவி!

நெருங்கி வரும் தமிழக சட்டமன்றத் தேர்தல் அரசியல் களத்தை அதிரி புதிரியாக மாறியுள்ளது. தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு, விருப்ப மனு பெறுதல் என அரசியல் கட்சிகள் அனைத்தும் விறுவிறுப்பாக...

பெண்களாக மாறிய ‘ஆண்’ இரட்டையர்கள்… “பிடிக்காத உறுப்பு நீக்கப்பட்டது” என பெருமிதம்!

ஆணாதிக்க மனோபாவத்தில் ஒருசில ஆண்கள் பாலுறுப்பை காரணம் காட்டி 'ஆண் நெடில்' பெருமை பேசுவார்கள். அவர்கள் எந்த உறுப்பை வைத்து பெருமிதம் கொண்டார்களோ அதே உறுப்பை வேண்டாமென நீக்கி திருநங்கைகள்...

“கர்ப்பமா இருக்கும் போது கூடவா இப்படி செய்வே” -கணவனால் கர்ப்பிணிக்கு நேர்ந்த கதி

கர்ப்பிணி மனைவி மீது சந்தேகப்பட்ட ஒரு கணவன், அவரை கொன்று உடலை இரண்டு நாள் வீட்டிலேயே வைத்திருந்ததால் கைது செய்யப்பட்டார்
TopTamilNews