’பாலிடிக்ஸ் பன்ச்’கள்… ‘குறுக்கு விசாரணை’, ’சிண்டு முடிதல்…’ வெல்கம் பேக் கமல் சாரே! பிக்பாஸ் -13-ம் நாள்

 

’பாலிடிக்ஸ் பன்ச்’கள்… ‘குறுக்கு விசாரணை’, ’சிண்டு முடிதல்…’ வெல்கம் பேக் கமல் சாரே! பிக்பாஸ் -13-ம் நாள்

’உங்களின் நான்’ என கமல்ஹாசன் வரும் சனிக்கிழமை நாள் எபிசோட் இது. அதுவும் இந்த சீசனின் முதல் எவிக்‌ஷன் நடைமுறைகள் தொடங்கும் நாள். அதற்கே உரிய கிண்டலும் பரபரப்புமாக அமைந்திருந்தது.

’பாலிடிக்ஸ் பன்ச்’கள்… ‘குறுக்கு விசாரணை’, ’சிண்டு முடிதல்…’ வெல்கம் பேக் கமல் சாரே! பிக்பாஸ் -13-ம் நாள்

கண்ணாடியில் பேசிக்கொண்டே வெல்கமானார் கமல். பிக்பாஸ் பின்கதைச் சுருக்கம் சொல்வதுபோல இன்றைய நாள் நிகழ்ச்சிகளின் முன்கதை சுருக்கமாகப் பேசுகையில் ‘ வில்லன்’னு நினைச்ச ஆள் ஹீரோவாயிடுவார் போல’ என்று தொடங்கி குரூப்பிஸம் பற்றிய இடத்தில் ‘நிறைய ஆள் இருக்கிறதால பெரிய குரூப் இல்ல… நல்ல ஆள் இருந்தாதால் நல்ல குரூப்’ என ’நச்’ என்று பாலிடிக்ஸ் பன்ச்’யைத் தொடங்கி வைத்தார். திமுக, அதிமுக இரண்டுலேயும் நிறைய பேர் இருக்காங்க… இரண்டில் ஒன்றை டார்கெட் செய்யாமல் மய்யமாய் நக்கலை வீசினார்.

வெள்ளிக்கிழமை நாள் நிகழ்ச்சிகள்

’பாலிடிக்ஸ் பன்ச்’கள்… ‘குறுக்கு விசாரணை’, ’சிண்டு முடிதல்…’ வெல்கம் பேக் கமல் சாரே! பிக்பாஸ் -13-ம் நாள்

‘எல்லோரும் ஆடலைன்னா பாயிண்ட்ஸைக் குறைப்பேன்’ என்ற பிக்பாஸின் ‘மிரட்டலுக்கு’ அடிபணிந்து இன்றைய பாடலுக்கு ஒருத்தர் விடாமல் ஆடினார்கள். ஆனாலும், நிஜமாக உணர்ந்து ஆடியது பிக்கி சொல்லாமலே ஆடும் அனிதா, ரம்யா, ஷிவானி, ஆஜித் உள்ளிட்ட சிலர்தான் பாஸ். ‘மயில புடுச்சி கூண்டில் அடிச்சு ஆடச் சொல்லுற உலகம்.

‘ஆத்தா நான் பாஸாயிட்டேன்’ டோன்ல… ’மத்தி மீன் வந்திருக்கு’ என்று சொல்லிக்கொண்டிருந்தார் ரேகா. ‘எப்ப பார்த்தாலும் ரேகா சொல்றதையெல்லாம் பிக்பாஸ் செய்யறாரு… ரேகாவைத்தான் லவ் பண்றாரோ’னு ஒருத்தர் எடுத்துகொடுக்க, “இதிலேருந்து என்ன தெரியுது… பிக்பாஸ் என்ன வயசு ஆள்னு தெரியுது’ என அந்த சீனை ரகளையா முடித்தார் நிஷா. இப்பதான் பட்டிமன்ற கவுண்டர் மோடுக்கு வந்திருக்கீங்க… விட்றாதீங்க நிஷா.

’பாலிடிக்ஸ் பன்ச்’கள்… ‘குறுக்கு விசாரணை’, ’சிண்டு முடிதல்…’ வெல்கம் பேக் கமல் சாரே! பிக்பாஸ் -13-ம் நாள்

இன்னொரு பக்கம், ‘மீன் கறுவாடு ஆகிற வரைக்கும் மீன் குழம்பை யூஸ் பண்ணிக்கலாம்’னு என்பதுபோல தீவிரமாக பாலா, ஷனம், ரேகா உள்ளிட்டோர் டிஸ்கஸனில் இறங்க. ‘குழம்பு இன்னிக்கே பத்தாது’ ஷனம் சொன்னதற்கு, சட்டென்று பத்திக்கொண்டார் பாலா. ’எல்லாத்துலேயும் மூக்கை நுழைக்காதீங்க’ என்றார் செவிளில் அறைந்தார் போல. சுரேஷிடம் பஞ்சாயத்து போக, ’என்னை டார்கெட் செய்யறாங்கனு பயமா இருக்கு’ என பாலா ஓப்பனாகச் சொல்லிவிட, ‘பட் உங்க நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு’ என ஷனம் வெளியேறினார்.

எல்லோருக்கும் தனித்தனியாக உண்டியல் கொடுத்து அனுப்பியிருந்தார் பிக்பாஸ். மீன் – ரேகா, சிங்கம் – அனிதா, வண்ணத்துபூச்சி – ரம்யா, வாத்து – ஆரி’ என தங்களுக்குப் பிடித்த ஸ்டிக்கர் ஒட்டிய உண்டில்களைத் தேர்தெடுத்துக்கொண்டனர்.

’பாலிடிக்ஸ் பன்ச்’கள்… ‘குறுக்கு விசாரணை’, ’சிண்டு முடிதல்…’ வெல்கம் பேக் கமல் சாரே! பிக்பாஸ் -13-ம் நாள்

மாலை நேரம், தலைவர் பற்றிய புகார்களைச் சொல்ல பெட்டி அனுப்பியிருந்தார் பிக்கி. ‘எல்லாமே கம்ப்ளைண்ட்ஸ்தான் வரும்’ என தீர்க்கத் தரிசனத்தைச் சொல்லிக்கொண்டிந்தார் கேப்டன் சுரேஷ். இல்லை பாஸ்… கேப்ரியல்லாவுக்கு நீங்க உதவினதுக்கு அப்பறம் நிலைமையே வேற.

’கோவிட் டெஸ்ட் எடுத்துட்டுதானே உள்ளே வந்தீங்க’ என்ற கேள்வியோடு அகம் டிவி வழியே வீட்டினருக்கு தரிசனம் காட்டினார் கமல். வெளியே இருந்த பலருக்கும் இந்தக் கேள்வி இருந்தது. ஏனெனில், அர்ச்சனா எண்ட்ரிக்கு சில நாள்களுக்கு முன் ‘அர்ச்சனாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியூர் சென்ற போட்டோக்களைப் பகிருந்திருந்தார்.

’பாலிடிக்ஸ் பன்ச்’கள்… ‘குறுக்கு விசாரணை’, ’சிண்டு முடிதல்…’ வெல்கம் பேக் கமல் சாரே! பிக்பாஸ் -13-ம் நாள்

ஷனம் – பாலா சண்டை போட்டுகொண்டாலும் இருவரும் ஒரு நிகழ்ச்சியின் ஜட்ஜாகி சமாதானம் ஆகிவிட்டீர்களே என்பதாகக் கேட்டார் கமல். சற்று முன் நடந்த மீன் குழம்பு சண்டை காட்சிகளை கமல் பார்க்க வில்லை போலும். அப்படியே நகர்ந்து ரியோவிடம் வந்தவர் ‘சுரேஷ் உங்களைப் பற்றி நல்லவிதமாக, பக்கவாத்தியம் செய்யவே நினைத்தா’ என விளக்க, அதை அப்போதைக்கு ஏற்றுக்கொண்டார் ரியோ. (சிறிது நேரம் கழித்து அப்போ நான் சண்டைபோட்டது தவறுன்னாலும், அதெல்லாம் அதற்கு முன் ஏற்பட்ட அழுத்தத்தால் என்பதாகச் சொன்னார். உண்மைதான்)

அப்படியே சுரேஷிடம் நகர்ந்தவர் நல்லா கொளுத்தறீங்க… ஆனா தீபாவளிக்கும் கொஞ்ச வெச்சுக்கோங்க’ என்றார் கமல். ‘எல்லோர் முகமூடியும் எப்போ அவிழப்போகுது காத்திட்டு இருக்காங்க… ஆனா, வேஷ்ட்டி அப்படி இல்லையே…’ என்று வேல்ஸ் விஷயத்துக்கு வந்தார். ‘இந்த பிரச்னையை ரொம்ப நேரம் பேச விடக்கூடாது’ என்பதாக சமாதானக் கொடி கான்வேகேஷன் நடத்தினார் வேல்முருகன்.

’பாலிடிக்ஸ் பன்ச்’கள்… ‘குறுக்கு விசாரணை’, ’சிண்டு முடிதல்…’ வெல்கம் பேக் கமல் சாரே! பிக்பாஸ் -13-ம் நாள்

’அது உரையாடலாகவே இருக்கட்டும் வேல்முருகன். நான் தமிழ்ல பேசினா சில தமிழர்களுக்குப் பிடிக்கல’ என கேமராவைப் பார்த்து கண் சிமிட்டினார். வாஸ்தவம்தான். ‘பிடிக்கிறது… பிடிக்கல’ என்பது இருக்கட்டும். உங்க ட்விட்டெல்லாம் தமிழ்தானா… எனக் கேட்போருக்கு என்ன சொல்லப்போறீங்க சாரே?

அப்படியே அர்ச்சனா விருதுகள் பற்றிய ஏரியாவுக்கு நகர்ந்தார் கமல். இன்னிக்கு செம பேஸ் ஸ்கிரிப்ட்டோடு களம் இறங்கியிருக்கிறார். அதாவது அவர் சொல்வது எல்லாமே ஸ்கிரிப்ட் என்ற முடிவுக்கு வர முடியாது. ஆனால், ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் பேஸிக் விஷயங்களை ’ஸ்கிரிப்ட்’ இருப்பதையும் அதை வைத்துக்கொண்டு இவர் லாவகமாகப் பயணிப்பதும் அருமை.

’பாலிடிக்ஸ் பன்ச்’கள்… ‘குறுக்கு விசாரணை’, ’சிண்டு முடிதல்…’ வெல்கம் பேக் கமல் சாரே! பிக்பாஸ் -13-ம் நாள்

பாலாவின் விசாரணயின்போது ‘வேஸ்ட் இல்லாட்டி விவசாயமே செய்யமுடியாது’ என்று சரியான பக்கம் வண்டியைத் திருப்பினார் கமல். அப்படியே முன்நகர்ந்து ‘இரண்டு வேஸ்ட் இருக்கு’ நியுக்ளியர் வேஸ்ட்டை ஒண்ணுமே பண்ண முடியாது’ என சரியாக இழுத்துச் சென்றார். சிலர் ஆர்வமாக நியுக்ளியர் வேஸ்ட் பற்றி கூகுலில் தேடுவார்கள் என்றாலும் பலருக்கு ‘ஆண்டவர்’ ஏதோ பெரிய விஷயம் சொல்றார் என கடந்துவிடுவார். இதுபோன்ற விஷயங்களைக் கொஞ்சம் இறங்கி பேசினால் நல்லது ஆண்டவரே!

சவாலான போட்டியாளர்களான ரம்யா, ரியோவிடம் பேசுகையில் யாரிடம் போட்டிப்போடுகிறோம் என்பது முக்கியம். பணத்தை எல்லாம் கடன் வாங்கிட்டு, வெளிநாட்டுல பதுங்கிட்டு என்னை என்ன பண்ண முடியும்னு கேட்கிறது சவால் இல்லை. அவன் திருடன்’ என நேரடியாகவே வாளைச் சுழற்றினார் கமல். ஆனா, ‘நீங்க பாசிட்டிவா சொல்றீங்களா… நெகட்டிவா சொல்றீங்களா’னு புரியலனு ரம்யா சொன்னதும், ‘நல்ல வேளை நான்கூட புரிஞ்சிடுச்சோன்னு நினைச்சிட்டேன்’என்பதாக ஜோக்கடித்தார்.

’பாலிடிக்ஸ் பன்ச்’கள்… ‘குறுக்கு விசாரணை’, ’சிண்டு முடிதல்…’ வெல்கம் பேக் கமல் சாரே! பிக்பாஸ் -13-ம் நாள்

சோம்ஸ், சம்யுக்தா இருவரும் பெற்ற ஷோ கேஸ் பொம்மைகள் விருதுக்கு வந்தார். ‘அப்படி இருப்பது நல்லதுதான்’ என ஆரம்பித்தவர்… சில தலைவர்களே அப்படி இருந்திருக்காங்க…’ என்றவாறே ‘என்னாது… இருந்திருக்காங்களா… இருக்காங்கான்னு சொறீங்களா… என்னை ஏங்க வம்புல மாட்டி விடுறீங்க’ என்று சொன்னவரை பிக்பாஸ் பன்ச், ‘நிகழ்ச்சியை நடத்த விடாம செய்ய வம்பு பண்றீங்களே’ என்று அவர் முடித்ததே யதார்த்த பன்ச். கமலில் ’பாலிடிக்ஸ் பன்ச்’கள் தொடர்ந்தால் சிக்கல்களும் அதிகமாகும்.

பிக்பாஸின் முதல் சீசனில் கமலின் பாலிடிக்ஸ் பன்ச்கள் அதிகம் இருந்தன. அப்போது அவர் கட்சி ஆரம்பிக்க வில்லை. ஆனால், அடுத்தடுத்த சீசன்களில் அது குறைந்துகொண்டே கேதார் ஜாதவ் மாதிரி ஆனார். ஆனால், இப்போது சீசனில் மூன்றாம் வாரமாக வருகிறார். ஒவ்வொரு வாரமும் பன்ச், சிண்டு முடிதல், குறுக்கு விசாரணைகள் என விராட் கோலி போல பழைய ஃபார்ம்க்குத் திரும்பி விட்டார். வெல்கம் சாரே!

’பாலிடிக்ஸ் பன்ச்’கள்… ‘குறுக்கு விசாரணை’, ’சிண்டு முடிதல்…’ வெல்கம் பேக் கமல் சாரே! பிக்பாஸ் -13-ம் நாள்

ஆஜித், கேப்பிரியல்லாவுடன் சின்ன உரையாடல் முடித்து வேல்முருகன், ஷிவானி பெற்ற அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்ட் விருதுக்கு வந்தார். இந்த நிகழ்ச்சியை நெறிப்படுத்த பொருத்தமான நபர் கமல் என்பதற்கான அடையாளமாக இந்த ஐந்து நிமிடங்களைச் சொல்லலாம். வழக்கமாக வேறு மொழிகளில் நடக்கும் பிக்பாஸ்களில் இந்தப் பகுதியில் சண்டை மூட்ட கிளறி விட்டிருக்கலாம். ஆனால், கமல் அட்மாஸ்பியர் எவ்வளவு முக்கியம் என்பதை அழகாக விளக்கிட்டார்.

‘பத்து பறவை பறக்கலைன்னா…. அதோ அந்தப் பறவைப்போல பறக்க வேண்டும் என எப்படி பாட முடியும்’ ‘புதிய வானம் புதிய பூமி’ என்ற பாடலே காஷ்மீர்தானே நினைவுக்கு வருகிறது’ என்று வளர்த்தியவர் ‘தலைவா…’என கூப்பிட ஆள் இல்லாவிட்டால் தலைவனே இல்லையே என நச்சென்று முடித்தார் கமல். தன் அனுபவமாக நாயகன் படத்திற்கு விருது கிடைத்ததன் பின்னணியைக் கூடுதலாகச் சொன்னார். குறிப்பாக துணை நடிகர் என்பதற்குப் பதில் சக நடிகர் எனும் பதம் அவர்களுக்கு எவ்வளவு இதம் அளிக்கும் என்பதை உணர்வுபூர்வமாக பகிர்ந்தார்.

’பாலிடிக்ஸ் பன்ச்’கள்… ‘குறுக்கு விசாரணை’, ’சிண்டு முடிதல்…’ வெல்கம் பேக் கமல் சாரே! பிக்பாஸ் -13-ம் நாள்

முன்பே சொன்னதுபோல செமையான பேஸிக் ஸ்கிரிப்ட்டுடன் கமல் வந்திருந்தார். ‘ஆமா சாமி’ விருது பற்றி சொல்லும்போது ‘ஆமா’னு சொல்ல ஆள் இல்லாட்டி வில்லுப்பாட்டில் சுவையே இருக்காது என்று சொல்லிவிட்டு, நமுத்துபோன பட்டாசு பக்கம் நகர்ந்தார்.

டிரெண்டிங் விருது பக்கமாக சுரேஷ், அனிதா சம்பத் பக்கம் வந்தவர், ‘இரண்டு வகை ட்ரெண்டிங் இருக்கு’ என்று ஆரம்பித்து பாசிட்டிவ், நெகட்டிவ் ட்ரெண்டுகளை விளக்கி, அதில் நீங்கள் எந்த வகை என்று முடிக்காமல் சிரித்தார். ‘அது புரியாமத்தானே குழம்பிட்டு இருக்கேன்’ என அனிதா மைண்ட் வாய்ஸை சத்தமாகச் சொல்ல, சிரித்துக்கொண்டே பிரேக் விட்டார் கமல்.

’பாலிடிக்ஸ் பன்ச்’கள்… ‘குறுக்கு விசாரணை’, ’சிண்டு முடிதல்…’ வெல்கம் பேக் கமல் சாரே! பிக்பாஸ் -13-ம் நாள்

‘நான் டவுட் கேட்டதை மக்கள் பார்க்கட்டும். நான் சண்டை போட்டப்ப, பெரியவர்கிட்ட இவ இப்படி பேசறாளேன்னு நினைச்சு இருப்பாங்க. இப்ப அவர் முகம் தெரிஞ்சதால எனக்கு சப்போர்ட் பண்ணுவாங்க’ என ஷனமிடம் அணத்திக்கொண்டிருந்தார் அனிதா. மேடம், சுரேஷின் வில்லன் பிம்பம் உடைந்து தாத்தா பிம்பம் வந்தாச்சு. பழைய எபிசோட்டுலேயே நின்னா எப்படி?

‘அவர் பேசறது புரியல’ என பாலாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார் ஆஜித். ‘எனக்குப் புரியுது’ என்ற பாலா, நீட்டி முழக்கி ஒரு சொன்னதைக் கேட்டப்ப, ஆண்டவர் எவ்வளவு தெளிவாகப் பேசறார்னு நினைச்சிருப்பார் ஆஜித்.

மீண்டும் வந்த கமல், இப்போது சில குறுக்கு விசாரணைகளுக்குள் சென்றார். ‘எவிக்‌ஷன் ப்ரி பாஸின் மகத்துவம் உனக்குப் புரியுதா இல்லையா’னு கேட்க, தலையாட்டினார் ஆஜித்.

’பாலிடிக்ஸ் பன்ச்’கள்… ‘குறுக்கு விசாரணை’, ’சிண்டு முடிதல்…’ வெல்கம் பேக் கமல் சாரே! பிக்பாஸ் -13-ம் நாள்

ஆஜித்க்கு விட்டுக்கொடுத்தீங்களா… என்று ரம்யாவிடம் கேட்டதற்கு ‘சுரேஷிடம் தோற்கக்கூடாது… ஆஜித்திடம் தோற்றால் தப்பில்லை’ என்ற தன் ரகசியத்தை உடைத்தார். அந்தப் பகுதி இடம்பெற்ற நாளில் ரம்யாவைப் பற்றி நான் யூகித்து எழுதியதை சரியென காட்டியிருக்கிறார் இன்று.

ஓகே. டைம் ஆயிடுச்சு. என எவிக்‌ஷன் விஷயத்துக்கு வந்தார். வழக்கம்போல யாரைக் காப்பாற்றலாம் எனும் ஆட்டத்தை அர்ச்சனாவை வைத்து தொடங்கினார். அவர் சட்டென்று போய் அங்கிருந்த பச்சை டப்பாவில் உள்ள சீட்டை எடுத்து காப்பற்றப்பட்டவர் ஆஜித்’ என்று சொல்லிவிட்டார். ‘அப்படி டக்னு சொல்லக்கூடாது’என்ற கமலின் மைண்ட் வாய்ஸில் எத்தனை ஷோ பண்ணியிருக்கிங்க… இது தெரியாதா?’ என்று கேட்டிருக்கலாம்.

’பாலிடிக்ஸ் பன்ச்’கள்… ‘குறுக்கு விசாரணை’, ’சிண்டு முடிதல்…’ வெல்கம் பேக் கமல் சாரே! பிக்பாஸ் -13-ம் நாள்

எவிக்‌ஷனிலிருந்து தப்பிக்கும் அடுத்த நபரைப் பற்றி சொல்லும்போது சின்ன சஸ்பென்ஸ் வைத்து, ஷிவானியைக் காப்பாற்றினார். அடுத்து வருவது மூன்றெழுத்தா… என்றதுமே எல்லா தரப்பினரும் ‘ரம்யா’ என்க, அவரும் ட்ரேட் மார்க் சிரிப்போடு பாதுகாப்பு ஏரியாவுக்கு வந்தார். அடுத்த நபர் நாளைக்கு என விடைபெற்றார் கமல்.

வீட்டுக்குள், என்னை எப்படியும் காப்பாத்திடுவீங்கன்னு தெரியும் என ஷனம் ஒருபக்கம் கேமரா முன்னும், ‘நான்தானு சொல்லிட்டா மத்தவங்க நிம்மதியா இருப்பாங்கனு’ ரேகா, சுரேஷிடமும் அணத்திக்கொண்டிருந்தார். இப்போதைய பட்சி, இவ்வார எவிக்‌ஷன் ரேகா என்றே சொல்கிறது. சென்ற சீசனின் முதல் எவிக்‌ஷன் பாத்திமா பாபு. அதே கேரக்டரில் வந்தவர்தானே ரேகா.

’பாலிடிக்ஸ் பன்ச்’கள்… ‘குறுக்கு விசாரணை’, ’சிண்டு முடிதல்…’ வெல்கம் பேக் கமல் சாரே! பிக்பாஸ் -13-ம் நாள்

இன்னொரு பக்கம் அர்ச்சனா – கேபிரியல்லா, அம்மா – மகள் உறவுக்குத் தயாரானார்கள். பீங்கான் தட்டுல சாப்பிடவே முடியல. எவர்சில்வர் தட்டு வேணும் என டிபிக்கல் மிடில்கிளாஸின் குரலாக நிஷா ஒலிக்க, அன்றைய எபிசோட்டுக்கு எண்ட் போட்டார் பிக்பாஸ்.

01 யாரு ஓவியா… யாரு ஜூலி… யாரு கவின்… யாரு லாஸ்லியா? முதல்நாளிலேவா தேடுவீங்க? #BiggBoss4

02 ’உங்க வேலையை ஆரம்பிச்சிட்டீங்களே பிக்பாஸ்’ நாள் 2 – #BiggBoss4

03 பிக்பாஸில் முதல் அழுகையும் நிஷாவின் நிஜ ‘பிளாக்’ ஹியூமரும்! #BiggBoss4

04. நான் ஒண்ணும் சூப்பர் மாடல் இல்ல’ யாரை வம்புக்கு இழுக்கிறார் சம்யுதா! பிக்பாஸ் 3-ம் நாள் #BiggBoss4

05. அஜித் பாணியைப் பின்பற்றிய ’ஜித்தன்’ ரமேஷ்! பிக்பாஸ் 4-ம் நாள் #BiggBoss4

06. ஒருநாள் ஹீரோயின்… குடிகார அப்பா… அழ வைத்த அம்மா பாட்டு! பிக்பாஸ் 5-ம் நாள் #BiggBoss4

07. ஷிவானியின் ’கண்மணி’யும் கமலின் ’பாலிடிக்ஸ் பன்ச்’ம் இன்னும் சில பஞ்சாயத்துகளும் – பிக்பாஸ் நாள் 6 #BiggBoss4

08 நிஷாவின் முத்தம் எதற்காக… மிஸ் பிக்பாஸ் யார்… எவிக்‌ஷனில் டார்கெட் இவரே! பிக்பாஸ் 8-ம் நாள்

09. ரம்யா இன்னொரு ஓவியாவா? பிக்பாஸ் 9-ம் நாள் #BiggBoss

10. ரியோ –எம்.ஜி.ஆர், கேபி – சாய்பல்லவி, சுரேஷ் – பிரபுதேவா மற்றும் சிலரும்! பிக்பாஸ் 10-ம் நாள்

11. அர்ச்சனா எண்ட்ரியும்… டோட்டல் டேமஜ் விருதுகளும்! பிக்பாஸ் 11-ம் நாள் #BiggBoss4

12. எட்டு நிமிடத்தில் இதயங்களை வென்ற சுரேஷ் தாத்தா – பிக்பாஸ் 12-ம் நாள் #BiggBoss4