Home சினிமா பாத்திமா பாபு, ரேகா... முதல் எவிக்‌ஷன் சீனியர்களே... – மக்கள் தீர்ப்பா.. பிக்பாஸின் திட்டமா?

பாத்திமா பாபு, ரேகா… முதல் எவிக்‌ஷன் சீனியர்களே… – மக்கள் தீர்ப்பா.. பிக்பாஸின் திட்டமா?

பிக்பாஸ் சீசன் 4-ல் முதல் நபர் வெளியேற்றம், அந்த நபரின் பிரிவை சக போட்டியாளர்கள் எதிர்கொண்ட விதம், கமல் நடத்திய முகமூடி விளையாட்டு, அனுமதிகப்பட்டிருக்கும் ஆடியன்ஸ் ரியாக்ஸன், சின்னச் சின்ன வருத்தங்களைச் சமாளித்துகொண்ட போட்டியாளர்கள்… எனப் பலவித சுவைகளைக்கொண்ட எபிசோட் ஞாயிற்றுக்கிழமை.

நாற்காலியோடு எண்ட்ரி கொடுத்தார் கமல்ஹாசன். இந்த நிகழ்ச்சிக்காக எட்டு மணிநேரம் நிற்க வேண்டியிருப்பதைக் கூறி, அவ்வப்போது அமர்ந்துகொள்ள என நாற்காலியை காட்டினார். வீட்டுக்குள் தன்னோடு பேசும் போட்டியாளர்களுக்கு தான் நின்றுகொண்டே பேசுவதைச் சங்கடமாகப் பார்ப்பதைச் சொன்னார். சென்ற சீசனில்கூட ஒரு போட்டியாளர் இதைச் சொன்னதான ஞாபகம்.

கொரோனா பரவல்.. டாஸ்மாக்கில் கூடி, ’குடி’த்தனம்… தாவாங்கட்டை அல்ல, மாஸ்க் என நியூ நார்மலை விவரித்துகொண்டே வந்தவர். முகமூடி விளையாட்டுக்குத் தாவினார்.

’தன் உணர்வுகளை வெளிகாட்ட மறைப்பவருக்கு முகமூடியும், அகம் முகம் ஒன்றாக இருப்பவருக்கு பேட்ஜ்வும் கொடுக்க வேண்டும். இதுதான் விளையாட்டின் விதிகள். சனி, ஞாயிறு எபிசோட்களில் இம்மாதிரியான விளையாட்டுகள் இருப்பது வழக்கம். மேலும், இந்த வாரத்தில் பெரியளவில் பஞ்சாயத்துகள் இல்லாததால் இப்படி ஏதாச்சும் லீட் எடுத்துகொடுக்க  வேண்டியதாகி விடும் (சுருக்கமாக பத்த வைத்தல் எனலாம்).

முதலில் வந்தவர் ஆரி, அவர் முகமூடியை ரியோவுக்கும் பேட்ஜை அர்ச்சனாவுக்கும் கொடுத்தார். ‘நான் வெளியில பார்த்த மாதிரி ரியோ இல்லை’ எனக் காரணம் சொன்னார். ரியோவுக்கு அது சற்று அதிர்ச்சி என்பதுபோல முகத்தில் காட்டினார்.

அடுத்து வந்த ஆஜித், கேபி ஆகியோடும் ரியோவுக்கு முகமூடி மாட்ட கண் கலங்கும் அளவுக்கு ஆகிவிட்டார். உண்மையில், இதுபோன்ற விளையாட்டில் முதல் நபர் ஒருவரைத் தேர்ந்தெடுத்தால்… அவரையே பின்பற்றும் போக்கு இருப்பதை பல விளையாட்டுகளில் பார்த்தோம். இதுவும் அது தொடர்ந்தது.

சனம் முகமூடியை அனிதாவுக்கும் பேட்ஜை ஆஜித்க்கும் கொடுத்தார். தன் இமேஜ்க்கு பங்கம் வந்துவிடுமோ எனப் பயந்துகொண்டே ஆடுவதாக அனிதாவுக்கு காரணமும்,

‘எவிக்‌ஷன் ப்ரீ பாஸ் வந்தபோது, ‘இதை மற்றவர்களாகவும் யூஸ் பண்ணலாமா’ என்று கேட்டான் ஆஜித். அப்படியெல்லாம் எனக்குக் கேட்க தோணாது’ என்று காரணம் சொன்னார் ஷனம். ஆமாம்ல, வரமாய் ஒன்று கிடைக்க, அதை பிறரின் நல்லதுக்காகப் பயன்படுத்த உபயோகிக்க சட்டென்று யோசிப்பது நல்ல மனம்தான்.

இந்த விளையாட்டின் போக்கைச் சற்று மற்றினார் ரம்யா பாண்டியன். முகமூடியை ஆரிக்குக் கொடுத்தார். பேட்ஜை சுரேஷ்க்குக் கொடுத்தார். அது அடுத்து வந்தவர்களிடம் தொடர்தது. பாலா, சுரேஷ்,சம்யுக்தா, ரேகா என எல்லோரும் ஆரிக்கு முகமூடியை மாட்டி விட்டனர்.

ரியோ முகமூடியை சுரேஷ்க்கு மாட்டி விட்டார். ‘கொளுத்தி போட்டாதான் பிக்பாஸ் வீட்டில் சர்வேவல் பண்ண முடியும் என தப்பா நினைச்சிட்டு, சில வேளைகளைச் செய்யறார்’ என சரியான காரணத்தைச் சொன்னார். (எனக்கு கண்டண்ட் கொடுக்கிற ஒரே ஆள் அவர்தான். அதுலேயும் மண் அள்ளி போடறியே – பிக்பாஸின் இன்றைய மைண்ட் வாய்ஸ்)

பலரும் ரியோவுக்கு முகமூடி மாட்ட, அவருக்கு அகம் முகம் ஒன்றே என்று பேட்ஜ் குத்தி, தம்பிக்கு ஆறுதல் அளித்தார் நிஷா. உண்மையில் பல வீடுகளில் இருக்கும் அக்காவின் பாத்திரமாகவே மாறிபோயிருந்தார்.

இந்த விளையாட்டின் ஆச்சர்யமாக, வெளிப்படையாக உணர்வுகளைக் காட்டுபவராக ஷிவானியைத் தேர்தெடுத்ததுதான். அர்ச்சனாவுக்கும் பல பேட்ஜ் கிடைத்தது.

தனக்கு ஏன் இத்தனை முகமூடிகள் கொடுக்கப்பட்டது என லெக்‌ஷர் கொடுக்க ஆரி ஆரம்பிக்க, சேரில் உட்கார்ந்துகொண்டார் கமல். இப்போ நம்பறோம் சார். எட்டு மணிநேரம் சூட்டிங் நடக்கிறது என்பதை.

எவ்வளவு நிதானமாகப் பேசறார் ஆரி. ஆத்தாடி. தனக்கு முகமூடி கொடுத்தது சரி என்று முதலில், ஆரி மறுத்து பேசியதும் தானும் எழுந்து மறுத்தார் ரியோ. ஃபேவரிஸம் உருவாகியிருக்கிறது என ஆரி சுற்றி வளைத்துகொண்டிருக்க, ’ குருப் உருவாகியுள்ளதா?’ எனக் கமல் கேட்க அதைச் சொல்லத்தான் வண்டியை சுத்திட்டு இருந்தேன்’ என்பதாக ஒத்துக்கொண்டார். ஆரியின் கருத்துக்கு கேபி, சுரேஷ், ரேகா இடைமறித்து பேசிக்கொண்டே இருக்க… எப்படி இதை முடிப்பது என நினைத்த கமல் பிரேக் விட்டு எஸ்கேப்பானார்.

இடைவெளிக்குப் பிறகு கேப்டன் பற்றிய புகார் கடிதங்களோடு வந்தார் கமல். ஜித்தன் ரமேஷ் எழுதியதை நான் சொன்னா கோவிச்சிப்பீங்க… நீங்களே சொல்லுங்க என்றார். ‘பிக்பாஸ் வீட்டு கேப்டன் கிடைத்ததை இந்தியாவின் பிரதமாக நினைத்து அதிகாரம் செய்தார்’ என்றார். பாஜக ஒட்டிய உவமை என்பதால் நீங்கள் நழுவிக்கொண்டார் என்றும் பேசுவாங்க கமல் சார்.

கேபிரியல்லாவைச் சுமந்த காட்சிகள் பற்றி கமல் சிலாகித்தார் ரொம்பவே டச்சிங்காக இருந்தது என்றார். (நமது தொடரில்கூட அதையே தலைப்பாக்கி எழுதியிருந்தோம்) ஆனால், ’இது எனக்காக பண்ணல… அவருக்காகப் பண்ணல… டாஸ்க் என்பதால் பண்ணினார்’ என்று கேபி அந்த டச்’-ல் வென்னீரை ஊற்றினார். நண்பர்கள் ஆதரவா இல்லைனு வருத்தப்பட்டீங்க,வெளியே இருக்கும் நண்பர்கள் உங்களைக் காப்பாற்றி விட்டார்கள் எனச் சொல்லி எவிக்‌ஷனிலிருந்து கேபியை விடுவித்தார்.

அடுத்து, சம்யுக்தா காப்பாற்றப்பட்டதைச் சொல்ல, ஷனம் தவித்தார். அவர்தான் முதன்நாளிலிருந்து எவிக்‌ஷன் பற்றிய கவலையோடு எல்லா கேமரா முன்நின்று பேசிக்கொண்டிருந்தார். கடைசியில் இருவர் எனும் நிலையில் ஆடியன்ஸ்க்கு ‘எவிக்‌ஷன் யார்’ என்பது தெரியக்கூடாது என்பதால் அவர்களுக்கு விடைகொடுத்தார்.

ஷனம் – ரேகா என்று இருவர் மட்டும் இருக்க, எல்லோருமே யூகித்ததுபோலவே ‘ரேகா’ பெயருள்ள சீட்டைக் காட்டினார் கமல். சென்ற சீசனிலும் சீனியர் போட்டியாளரான பாத்திமா பாபு முதல் வாரத்தில் வெளியேற்றப்பட்டார். இப்போது போட்டி தொடங்கியபோதே ரேகாவே முதலில் வெளியேற்றப்படுவார் என்று கூறப்பட்டது.

உண்மையில் இந்த மக்களின் தீர்ப்புதானா… இல்லை முதல் வாரத்திற்கு அனுப்ப என்று வைத்திருக்கும் பிக்பாஸின் திட்டமா என்பது எல்லோருக்குள்ளும் எழும் கேள்வி.

ஏனெனில், சென்ற சீசனில் முதல் வாரத்தில் வெளியேறிய பாத்திமா பாபு ‘பிக்பாஸ் எதிர்பார்ப்பதுபோல சண்டை போடுவதுபோன்ற காட்சிகள் என் மூலமாகக் கிடைக்காது’ என்பதால் வெளியேற்றபட்டிருக்கலாம்’ எனும் தொனியில் பேட்டிகளில் கூறியிருந்தார். இப்போது ரேகா அனுப்பப்பட்டிருப்பதும் அதுதான் காரணமா? ரேகாவும் அதற்கு தயாராக இருந்தது அதை உறுதிப்படுத்துவது போலிருந்தது.

சென்ற சீசனில் கவின், சாண்டி என யூத் குரூப் ஃபார்மானதுபோல, இப்போது சீனியர் குருப் இருக்கிறது. அதிலிருந்த சூப்பர் சீனியர் ரேகா வெளியேறியதால் நிஷா ரொம்பவே ஃபீல் செய்தார். தனக்கு அகம் முகம் இரண்டு ஒன்று என பேட்ஜ் கொடுத்த ரியோவுக்கு தான் வளர்த்த பூச்செடியையும் தன் மகள் போல பாவித்த ஷிவானிக்கு உண்டியல் காசையும் தந்து விடைபெற்றார் ரேகா.

’மகளைப் பார்க்காமல் இத்தனை நாள் இருந்தது இல்லை’ என்று கமலிடம் ரேகா சம்பிரதாயமாகச் சொல்லி வெளியேறினார்.

புத்தக அறிமுகத்தில் இருவாரங்களும் மொழிபெயர்ப்பு நூல்களை அறிமுகப்படுத்திய கமல், தமிழில் நேரடியாக எழுதப்பட்ட நூலான ‘ஜெயமோகனின் வெண்முரசு’ பற்றி சிலாகித்தார் கமல். 25 ஆயிரம் பக்கம் கொண்ட நாவல் என்றதும் நிச்சயம் பார்வையாளர்கள் ஆச்சர்யப்பட்டிருக்கக் கூடும். சென்ற ஆண்டே எழுதி முடித்ததுபோல சொன்னார் கமல். உண்மையில் ஓரிரு மாதங்களுக்கு முன்புதான் கடைசி பகுதியை முடித்திருந்தார் ஜெயமோகன். இறுதியாக ’வியாசரின் வாரிசு’ என ஜெயமோகனுக்கு முடிசூட்டினார்.

வீட்டுக்குள் ரேகாவின் பிரிவில் ஷனம், ஷிவானி, ரியோ, பாலா உள்ளிட்டோர் அழுதுகொண்டிருந்தனர். ரேகாவுடன் பெட் ஷேர் பற்றி சம்யுக்தாவும், ‘எனக்கு இருந்த ஒரே ஃப்ரெண்ட் அவங்கதான்’ என ஷனமும் சொல்லிக்கொண்டிருக்க, எபிசோட்டை பின்கதை சுருக்கம் இல்லாமல் முடித்தார் பிக்பாஸ்.

01 யாரு ஓவியா… யாரு ஜூலி… யாரு கவின்… யாரு லாஸ்லியா? முதல்நாளிலேவா தேடுவீங்க? #BiggBoss4

02 ’உங்க வேலையை ஆரம்பிச்சிட்டீங்களே பிக்பாஸ்’ நாள் 2 – #BiggBoss4

03 பிக்பாஸில் முதல் அழுகையும் நிஷாவின் நிஜ ‘பிளாக்’ ஹியூமரும்! #BiggBoss4

04. நான் ஒண்ணும் சூப்பர் மாடல் இல்ல’ யாரை வம்புக்கு இழுக்கிறார் சம்யுதா! பிக்பாஸ் 3-ம் நாள் #BiggBoss4

05. அஜித் பாணியைப் பின்பற்றிய ’ஜித்தன்’ ரமேஷ்! பிக்பாஸ் 4-ம் நாள் #BiggBoss4

06. ஒருநாள் ஹீரோயின்… குடிகார அப்பா… அழ வைத்த அம்மா பாட்டு! பிக்பாஸ் 5-ம் நாள் #BiggBoss4

07. ஷிவானியின் ’கண்மணி’யும் கமலின் ’பாலிடிக்ஸ் பன்ச்’ம் இன்னும் சில பஞ்சாயத்துகளும் – பிக்பாஸ் நாள் 6 #BiggBoss4

08 நிஷாவின் முத்தம் எதற்காக… மிஸ் பிக்பாஸ் யார்… எவிக்‌ஷனில் டார்கெட் இவரே! பிக்பாஸ் 8-ம் நாள்

09. ரம்யா இன்னொரு ஓவியாவா? பிக்பாஸ் 9-ம் நாள் #BiggBoss

10. ரியோ –எம்.ஜி.ஆர், கேபி – சாய்பல்லவி, சுரேஷ் – பிரபுதேவா மற்றும் சிலரும்! பிக்பாஸ் 10-ம் நாள்

11. அர்ச்சனா எண்ட்ரியும்… டோட்டல் டேமஜ் விருதுகளும்! பிக்பாஸ் 11-ம் நாள் #BiggBoss4

12. எட்டு நிமிடத்தில் இதயங்களை வென்ற சுரேஷ் தாத்தா – பிக்பாஸ் 12-ம் நாள் #BiggBoss4

13. ’பாலிடிக்ஸ் பன்ச்’கள்… ‘குறுக்கு விசாரணை’, ’சிண்டு முடிதல்…’ வெல்கம் பேக் கமல் சாரே! பிக்பாஸ் -13-ம் நாள்

மாவட்ட செய்திகள்

Most Popular

நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி

பிரபல நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் உடல்நலக்குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை மதுரவாயலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு...

‘ராகுலிடம் நாராயணசாமி பொய் சொன்னார்’ – காங்கிரஸ் மீது மோடி கடும் விமர்சனம்!

ராகுல் காந்தியிடம் நாராயணசாமி பற்றி பெண் ஒருவர் புகாரளித்த வீடியோ குறித்து பிரதமர் மோடி விமர்சித்தார். புதுச்சேரியில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ஆளும்...

“இந்த காலேஜ்ல என்னை தவிர எவன்கிட்டேயும் பேசக்கூடாதுடி” -மறுத்த மாணவிக்கு நேர்ந்த நிலை

தன் காதலி வேறொருவரிடம் நட்பு கொண்டதால் கோவப்பட்ட காதலன், அந்த காதலியை கொன்று ஒரு கால்வாயில் வீசியுள்ளார்.

9,10,11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்க் எப்படி?

சென்னை வாலாஜாசாலையில் இருக்கும் கலைவாணர் அரங்கில் கடந்த 23ம் தேதி இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. அதில் துணை முதல்வர் ஓபிஎஸ் 14-வது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன் பிறகு,...
TopTamilNews