Home சினிமா ஷிவானியின் ’கண்மணி’யும் கமலின் ’பாலிடிக்ஸ் பன்ச்’ம் இன்னும் சில பஞ்சாயத்துகளும் - பிக்பாஸ் நாள் 6 #BiggBoss4

ஷிவானியின் ’கண்மணி’யும் கமலின் ’பாலிடிக்ஸ் பன்ச்’ம் இன்னும் சில பஞ்சாயத்துகளும் – பிக்பாஸ் நாள் 6 #BiggBoss4

சனிக்கிழமை. பிக்பாஸின் பஞ்சாயத்து தலைவர் கமல்ஹாசன் வரும் எபிச்சோட். உற்சாகமாகவே தொடங்கி வைத்தார் கமல். சில ஜோக்ஸ்; சில ஜோக் மாதிரி, சில அரசியல் பன்ச், சில அரசியல் பன்ச் மாதிரி என பல மாதிரியாக நிகழ்ந்தேறியது (கமல் வந்தாலே பல தமிழ் வார்தைகள் சரளமாக வந்துடுது)

‘எவிக்‌ஷன் இல்லைன்னு சிலருக்கு வருத்தம் போலிருக்கு. போட்டியாளர்களை நீங்கள் புரிந்துகொள்ளவே இந்த இடைவெளி. இல்லைன்னா, தப்பா ஓட்டுப்போட்டோமேன்னு பின்னாடி யோசிக்கக்கூடாது இல்லையா?’என்பதாக ’அரசியலையும்’ டச் செய்தார்.

ஆறாம் நாள்

’நெஞ்சுக்குள்ளே குடியிருக்கும்….’ எனப் போட்டு ’பிகில்’ கிளப்பலாம் என நினைத்திருப்பார் போல பிக்பாஸ். அவரின் ஆசையை செமையா டான்ஸ் ஆடி தீர்த்து வெச்சாங்க. அதுசரி, விஜய், ரஜினி, தனுஷ், சிவகார்த்தியேன் படத்து பாட்டெல்லாம் போட்டுங்க. மறுபடியும் விஜய் பாட்டா? அப்ப அஜித் பாட்டு? ‘தல’ ரசிகர்களின் கவனத்துக்கு. (ஏதோ நம்மால முடிஞ்சது)

’பழத்துல அழுக்கு இருக்கு. அது ஜூஸ்ல வந்துடும்’ என சம்யுக்தா – பாலா உரையாடலை வேறு கண்டண்ட் இல்லையே என்றுதான் பிக்பாஸ் போட்டிருக்கணும். நான் மட்டும் வெச்சிகிட்டா வஞ்சனை பண்றேன்னு பிக்பாஸ் நினைத்து முடிப்பதற்கு ஏதோ பிரச்சனை வெடிக்கிற மாதிரி ஸ்மெல் அடிக்க கேமராவைத் திருப்பினார்.

ஷனம் கலந்துகொண்ட ஒரு மாடலிங் போட்டியைப் பற்றி, ‘டுபாக்கூர்’ என்று சொல்லிவிட்டார் பாலா. சட்டென்று கோபித்துக்கொண்டு திரும்பிவிட்டார். டைனிங் டேபிளில் இந்தப் பேச்சு நீண்டது. ‘உங்களைச் சொல்ல… அந்த நிகழ்ச்சி பற்றி என் பர்சனல் ஒப்பினியன்’ எனப் பாலா திரும்பத் திரும்ப சொன்னார். ‘அந்தப் போட்டியைப் பற்றி ஒட்டுமொத்தமாக டேமேஜ் பண்ணிட்டு, அதில் கலந்துகிட்டவங்கள சொல்லல’னு பாலா சொல்றது எப்படி இருக்குது தெரியுமா… நல்ல மனுஷன்… கெட்ட கட்சியில இருக்காருன்னு இங்கிலீஷ்ல நம்ம ஊர்ல சொல்வாங்களே அப்படி. (ஒரு நல்ல மனுஷனுக்கு நல்ல கட்சியில சேரக்கூடவா தெரியாது)

இந்த வாரத் தலைவர் பற்றிய புகார் கடிதம் எழுதச் சொன்னார் பிக் பாஸ். அப்போ சுரேஷ், ;கேப்டன் இருந்ததே சந்தேகம்தான்’ என்றார்.  உண்மையில் அதுதான் ’நச்’ புகார். பால் பூத்ல நிற்பதுபோல, எல்லோரும் வரிசையாக நின்னு புகார் எழுதிப்போட்டார்கள். நிஷா மட்டும், ‘இதுல ஐ லவ் யூ’ எழுத முடியாது. அப்பறமா தனியா சொல்றேன்’ என்று சிரிக்க வைக்க ட்ரை பண்ணினார். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.

இரவு 12 மணிக்கு மேல், யாருக்கும் தெரியாமல் ஒரு கேமரா முன் நின்று தன் கணவருக்கு கல்யாண நாள் வாழ்த்துகளைச் சொன்னார் சில துளிகள் கண்ணீரோடு.

அகம் வழி உரையாட கமல் காத்திருந்தார். ’என்னிடமும் பேசுங்க பிக்பாஸ்’ என உரிமையோடு பேச்சு கொடுத்தார். பிக்பாஸ் கரகரப்பான குரலில் ஓரிரு வாத்தைகள் கமலிடம் பேசினார்.

அகம் டிவியில் வீட்டுக்குள் இருப்பவர்களைப் பார்த்ததும் ’நிறைந்த சபை’ என்றார். உண்மைதான். இன்னும் சில வாரங்கள் கழித்து பலர் வெளியே வந்துவிடுவார்கள். சோபா காலியாக இருக்கும்.  நலம் விசாரிப்போடு பேச்சைத் தொடங்கினார். நிஷாவுக்கு கல்யாண நாள் வாழ்த்துகளைச் சொன்னார். ஆடியன்ஸ் வரும்படியான சூழல் இருந்தால் நிஷா கணவரை வரவழைத்து சின்ன டிராமா செய்திருப்பார்கள்.

ஒவ்வொரு சீசனுக்கு முட்டை முழிங்கி ஒருத்தர் இருப்பதைச் சுட்டிக்காட்டிவிட்டு, ‘கோழியே கேட்கறதில்ல; தோழி கேட்கலாமோ… மனசுல வெச்சிக்காதீங்க மசில்தான் முக்கியம்’ என டைமிங்கில் ரைமிங்க் விட்டார். ரசிக்கும்படியாகவே இருந்தது.  

ஷிவானியை ’கண்மணி’யாய் பாட வைத்தார். கமலும் பாடுவார் என்ற எதிர்பார்ப்பு நடக்க வில்லை. அடுத்த விஷயத்துக்கு தாவிட்டார் வேல்முருகனின் பள்ளி மதிய உணவு விஷயம் பற்றிச் சொல்லுகையில், ‘தங்கள் பிள்ளைக்கு தமிழகம் தந்தது’ என அழகான சொற்றொடரைப் பயன்படுத்தினார். ஸ்கிரிப்ட் யாரு தலைவா… நல்லா இருக்கு.

கிராமத்திலேருந்து ஏழ்மையிலிருந்து உச்சிக்கு வரும் விதத்தை  பாலுமகேந்திராவோடு தானும் ரசித்த கதையைச் சொன்னார். பாரதிராஜா, இளையராஜா, பாவலர் சகோதரர்கள் பற்றியெல்லாம் பேச்சு போனது.

ஷன்ம் ஷெட்டி, சோம்ஸ் என ஒவ்வொருவரின் ப்ளாஸ்பேக் கதைகளைப் பற்றிய கமெண்ட்ஸோடு நகர்ந்துகொண்டிருந்தார் கமல். தனது படங்களிலும் திக்குவாய் பாத்திரங்கள் இருப்பதை நினைவூட்டினார். அப்போது ‘மனசு நல்ல நடத்துநர்’ என்றார். அதுவா வந்து விழுது தலைவா…

ஆரியிடம் வரும்போது அம்மா இறந்ததும் சூட்டிங்கில் கலந்துகொண்டதைப் பற்றி பேசுகையில் ‘ஆடுபுலி ஆட்டம்’ சூட்டிங்கின்போது தனது அம்மா இறந்தும் காட்சியை நடித்துக்கொடுத்ததைப் பற்றி விவரித்தார்.

பாலாவை நிறையவே பாராட்டினார். போதையில் சிக்கும் வாய்ப்பிருந்தும் தப்பி வந்ததை ‘பார் பக்கம் போகாமல் பார் பக்கம் வந்தீர்கள்’ என்றார் வழக்கமாக உல்ட்டாவாகச் சொல்லி அதை ஜோக் என்று சொல்லுவார்கள். திரும்ப ஷிவானியிடம் பேச்சுக்கொடுத்தபோது, ‘எனக்கு மிங்கிளாக டைமாகும் சார்’ என்றார் லேசாக இழுவையாக. ’பார்த்து… நூறு நாள்தான் இருக்கு’ என்று ஜோக்கினார். ஆனால், சிரிக்கால் சொன்னதால் எல்லோருக்கும் லேட்டாக அர்த்தமாகி லேட்டாக சிரித்தார்.

நிஷாவிடம் பேசும்போது, ‘சிரித்துக்கொண்டே சொன்னதால் அந்த வலியிலிருந்து வெளியே வந்துவிட்டீங்கன்னு நினைக்கிறேன்’ என்றார் கமல். ஆமாம் என்பதாக நிஷா தலையாட்ட, நிறம் பற்றிய டாபிக் தாவினார். ‘இந்தியாவுல எவ்வளவு சிவப்பாக இருக்கிறவனும், வெளிநாட்டுக்கு போனா கறுப்புதா’ என்று அவர் பல பேட்டிகளில்  கூறியதைச் சொன்னார். நல்லவேளை ஷார்டாக முடித்தது சற்று ஆறுதல்.

’விக்ரமன் படம் போல இவ்வளவு குணமா போய்ட்டே இருக்கே. போரடிக்குமே’ என்பது பிக்பாஸ்க்குத் தெரியாதா என்ன? உடனே, அனிதா சம்பத் – சுரேஷ் சக்கரவர்த்தி பஞ்சாயத்தைக் கையில் எடுத்தார். ‘செத்தாலும் முழிக்க மாட்டேன். உப்புப் போட்டு திங்கிறவங்க இருக்க மாட்டாங்க’ என்பதெல்லாம் பெரிய வார்த்தை இல்லையா? ஏன் அப்படிச் சொன்னீங்க? என்று கேஸ் கட்டைப் பிரித்தார்.

ஆனால், சுரேஷ் இதை வளர்க்க விரும்பல, நான் ஒரு பேட் வேர்டு சொன்னேன். அவங்க ஒண்ணு சொன்னாங்க. இரண்டும் சரியாப் போச்சு’னு டக்குனு ஜட்ஜ்மெண்டை வாசித்திட்டார். மூன்று சீசன் நடத்தின எக்ஸ்பிரியன்ஸில் அந்தப் பிரச்னையை இன்னும் கொஞ்சம் இழுத்தார் கமல்.

‘ஒவ்வொருத்தர் குள்ளேயும் நன்மையும் இருக்கு; தீமையும் இருக்கு. நமக்குள்ள தீமையை சரி செய்யணும் முதல்ல’ என்று ’இந்தத் தீர்ப்பிலிருந்து நாம் கண்டறியும் நீதி என்னவென்றால்…’ என விளக்கிக்கொண்டிருந்தார் சுரேஷ். அரே பாஸ். பிராதே உங்க மேலதான். தொடக்கத்தில் இருந்தே நீங்களே பல தீர்ப்புகளைச் சொல்லிட்டு இருந்தா எப்படி? இதைச் சமாளிக்க, கமல் அழகான ஒரு ஐடியா வைத்திருந்தார். ‘ஒரு சிறிய விளம்பர இடைவேளை’

இடைவேளை முடிந்ததும் ‘நான் பேசியே ஆகணும்’ என அனிதா சம்பத் சில விஷயங்களைச் சொல்ல, சரி… சரி…. சத்தம் போடாமல் இருங்க பிள்ளைங்களா என டீச்சர் சொல்வதுபோல ஒப்புக்குச் சொன்னார். இருவரும் கைக்குலுக்கிக்கொண்டனர். ஆனால், அது இன்றோடு முடியும் எனத் தோன்றவில்லை.

அடுத்து எந்தப் பஞ்சாயத்தும் இல்லை. என்ன செய்யறதாம்? நியூஸ் இல்லைன்னா… நியூஸை க்ரியேட் பண்ணனும் சொல்வாங்க இல்லையா? அதுபோல நாமளே பஞ்சாயத்து பந்த கால் நடுவோம்னு பிக்பாஸ் முடிவு பண்ணிட்டார். மறுபடியும் இதய, உடைந்த இதயம் விளையாட்டை ஆட வைத்தார். இப்போ கமல் முன்னாடி இந்த கேம் நடக்கணும்.

முதலில் வந்த ஷனம், அனிதாவுக்கும் ரேகாவுக்கும் இதயம் கொடுத்தார். உடைந்த இதயத்தை பாலாவுக்குக் கொடுத்தார். அதற்குக் காரணமாக, ‘தான் கலந்துகொண்ட போட்டி பற்றி பாலாவின் கமெண்ட்டால் காயப்பட்டதாகச் சொன்னார்.

மோசமாக நடிகர்களைப் பற்றி திட்டினால் அது நான் இல்லைன்னு போயிடனும் என்பதாக ஒரு விளக்கம் சொல்லி சமாதானப் படுத்த முயன்றார் கமல். ஆனால், அவர் ஷனம் சொன்னதன் முழு அர்த்தத்தைப் புரிந்துகொள்ள வில்லை என்றே தோன்றியது. ஏனெனில், அது அந்தப் போட்டியைப் பற்றி தெரிந்தவர்களுக்கு முழுமையாகப் புரியும் போல. பாலா ஏற்கெனவே என்ன சொன்னாரோ அதையே திரும்பச் சொன்னார். ரொம்ப ஜாக்கிரதையாக எந்தப் பொண்ணைப் பற்றியும் தவறா சொல்லல என்றார். ‘ஒரு நியூஸ் ரீடரைத் தப்பா சொன்னதை எல்லா நியூஸ் ரீடரையும் என தடம் மாறினது அவர் கண் முன்னாடி வந்துட்டு போகும் இல்லையா… தம்பி உஷாரு.

பாலா பஞ்சாயத்தே நீண்ட நேரம் ஓடியதால் சம்யுக்தாவுக்கு ஏன் உடைந்த இதயம் தாரேன்னு பிறகு சொல்றேன் என ஜகா வாங்க பார்த்தார் ஷனம். இல்ல… இல்ல இப்பவே சொல்லிடுங்க என்றார் கமல். சூடு குறையாம பரிமாறனும் அதானே…

வந்த கதை சொன்னவங்களில் யாரையெல்லாம் நாமினேஷனுக்கு அனுப்பலாம் என்ற முடிவை நான் சொல்லலாம்னு நினைத்தேன். ஏன்னா, என்னோட கதையை முழுசா சொல்லல, அதுல கொஞ்சம் சொல்லலாம்னு நினைத்தேன். அதற்காக நான் கேட்டப்ப, ஹார்ஷா மறுத்துட்டாங்க’ என்றார் ஷனம். அப்போது சம்யுக்தா காட்டிய ரியாக்‌ஷன் ’அப்படியா…’ என்றும் புரிந்துகொள்ளலாம். ‘அப்படித்தான்’ என்றும் புரிந்துகொள்ளலாம். அப்படி ஒரு ரியாக்‌ஷன். எத்தனை அப்படி?  ’நான் அப்படி நினைக்கல’ என்பதாகச் சொன்னார் சம்யுக்தா. மறுபடியும் அப்படியா?

’ஷனம் இதயம், உடைந்த இதயமே இவ்வளவு நீண்டுட்டு இருக்கே?’ என நினைத்தபோது, மற்றவர்கள் எல்லாம் நாளைக்கு விளையாடலாம் என பெரிய பிரேக் விட்டார். ஆமா பாஸ்… எங்களாலேயும் முடியல.

நடிகை மனோரமாவின் நினைவு தினம் என்பதால் அவரைப் பற்றிய நினைவுகளோடு விடைபெற்றார் கமல்.

’பாலாவிடம் ‘என்ன சாதி?’ என சுரேஷ் கேட்டதாக, சோஷியல் மீடியாவில் பிக்பாஸ் பற்றி பிராது கொடுக்கப்படிருந்ததே. அதுபற்றி விசாரிக்கப்படுமா என்பதை நாளைதான் பார்க்க வேண்டும்.

முந்தைய எபிசோட்கள் பற்றிய பதிவுகளைப் படிக்க:

01 யாரு ஓவியா… யாரு ஜூலி… யாரு கவின்… யாரு லாஸ்லியா? முதல்நாளிலேவா தேடுவீங்க? #BiggBoss4

02 ’உங்க வேலையை ஆரம்பிச்சிட்டீங்களே பிக்பாஸ்’ நாள் 2 – #BiggBoss4

03 பிக்பாஸில் முதல் அழுகையும் நிஷாவின் நிஜ ‘பிளாக்’ ஹியூமரும்! #BiggBoss4

04. நான் ஒண்ணும் சூப்பர் மாடல் இல்ல’ யாரை வம்புக்கு இழுக்கிறார் சம்யுதா! பிக்பாஸ் 3-ம் நாள் #BiggBoss4

05. அஜித் பாணியைப் பின்பற்றிய ’ஜித்தன்’ ரமேஷ்! பிக்பாஸ் 4-ம் நாள் #BiggBoss4

06. ஒருநாள் ஹீரோயின்… குடிகார அப்பா… அழ வைத்த அம்மா பாட்டு! பிக்பாஸ் 5-ம் நாள் #BiggBoss4

மாவட்ட செய்திகள்

Most Popular

திருவண்ணாமலையில், பிப்.26, 27-ஆம் தேதிகளில் கிரிவலம் செல்ல தடை!

திருவண்ணாமலை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் நாளை முதல் 2 நாட்களுக்கு பௌர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மனைவி வீட்டு வேலைகளை செய்யவேண்டுமென கணவன் எதிர்பார்க்க கூடாது! – உயர் நீதிமன்றம் கருத்து!

திருமண உறவில் மனைவி மட்டுமே அன்றாட வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டும் என்று கணவான்மார்கள் எதிர்பார்க்கக் கூடாது என்று மும்பை உயர் நீதிமன்றம் கருத்து கூறியிருக்கிறது. டீ போட்டுக் கொடுக்காததால்...

நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி

பிரபல நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் உடல்நலக்குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை மதுரவாயலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு...

‘ராகுலிடம் நாராயணசாமி பொய் சொன்னார்’ – காங்கிரஸ் மீது மோடி கடும் விமர்சனம்!

ராகுல் காந்தியிடம் நாராயணசாமி பற்றி பெண் ஒருவர் புகாரளித்த வீடியோ குறித்து பிரதமர் மோடி விமர்சித்தார். புதுச்சேரியில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ஆளும்...
TopTamilNews