ரம்யா இன்னொரு ஓவியாவா? பிக்பாஸ் 9-ம் நாள் #BiggBoss

 

ரம்யா இன்னொரு ஓவியாவா? பிக்பாஸ் 9-ம் நாள் #BiggBoss

வெல்கம் டூ பிக்பாஸ் ஹவுஸ்… ஆமாம். இன்றுதான் நிஜமான அனல்பறக்கும் விளையாட்டுகளும் சண்டைகளும் கோபங்களும் வாதங்களும் குரூப்பிஸமும் விட்டுகொடுத்தலும்… முக்கியமாக ஸ்டேடர்ஜி எனும் வார்த்தை அதிகம் பயன்படுத்துதல் என திருவிழா கலைகட்டியிருக்கிறது இன்றைய பிக்பாஸ் எபிசோட்.

ரம்யா இன்னொரு ஓவியாவா? பிக்பாஸ் 9-ம் நாள் #BiggBoss

 ’பட்டாசு’ பாடலுக்கான ஆட்டத்தோடு தொடங்கியது ஒன்பதாம் நாள் நிகழ்ச்சிகள். இப்போதெல்லாம் காலை நேர டான்ஸ்க்கு பெரிய அளவில் முக்கியத்துவம் தருவது போல தெரியவில்லை. பிக்பாஸ் எடிட்டரும் 10-20 நொடிகளில் அடுத்த காட்சிக்குத் தாவிவிடுகிறார்.

வழக்கம்போலவே இன்றைக்கும் சண்டை கிச்சன் டேபிளில்தான். ஆஜித்திடம் சுரேஷ் ஏதோ வேலை சொல்ல, ‘ஒரு அளவு வரைத்தான் பார்ப்பேன்’ என டென்ஷனாகி மேஜை உதைத்துவிட்டு கோபமாக வெளியே சென்றுவிட்டார். ‘அப்படியா சரி.. சரி.. அடுத்த அந்த ரசத்தை ஊத்து’ என்பதுபோல சுரேஷ் அடுத்து வேலையை இன்னொருவரிடம் கொடுத்தார். ’தான் கேப்டன், ஒவ்வொரு டீமிலும் ஒவ்வொரு நாள் இருப்பேன்’ என்றார் சுரேஷ். ஆனால், கிச்சன் கேபினெட்டையே சுற்றிச் சுற்றி வருகிறாரே ஏன்?

ரம்யா இன்னொரு ஓவியாவா? பிக்பாஸ் 9-ம் நாள் #BiggBoss

’இந்த டீம்லேயே ஆஜித்தான் நிறைய வேலை பார்த்தான்’ எனச் சொல்லிக்கொண்டிருந்தார் ரம்யா. ’ இதெல்லாம் சின்ன விஷயம்… அவனை நான் சமாதானம் படுத்தறேன்’ என்றார் சுரேஷ். அதற்கு அவசியம் இல்லாமல், ஆஜித்தே சிறிதுநேரத்தில் தானே வந்து சமாதானமானார்.

உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக… என்பதுபோல, பிக்பாஸ் வரலாற்றிலேயே முதன்முறையாக ’எவிக்‌ஷன் ப்ரிபாஸ்’ திட்டத்தை அறிவித்தார். எல்லோர் கண்களும் ஒளிர்ந்தன.

‘வந்த கதை’ சொன்னதில் எவிக்‌ஷனுக்கு நாமினேஷனான எட்டு பேரில் ஒருவருக்கே இந்த வாய்ப்பு என்று பிக்பாஸின் ஓலையை வாசித்தார் ரம்யா. ’சுரேஷ் கேப்டன் என எவிக்‌ஷனிலிருந்து எக்ஸ்கேப் ஆனாரே அவரும் உண்டா?’ என ஒருவர் எழுப்பிய சந்தேகத்திற்கு ‘நானும் கேட்டேன் பிரதர். அவரும் உண்டாம்’ என்று அழுத்தமாகச் சொன்னார் ரம்யா. சுரேஷிஜி இல்லாட்டி எப்படி கேம் த்ரில்லா இருக்கும்?

ரம்யா இன்னொரு ஓவியாவா? பிக்பாஸ் 9-ம் நாள் #BiggBoss

மியூஸிக்கல் சேர் விளையாட்டுபோல வட்டமாக எட்டு பேரும் உட்கார்ந்தனர். பிக்பாஸ் பஸ்ஸர் அழுத்திய ஒரு நிமிடத்தில் எட்டில் ஒருவர் போட்டியிலிருந்து விலக வேண்டும். இப்படியே விலக கடைசியாக மிஞ்சியிருப்பவருக்கே எவிக்‌ஷன் ப்ரீ பாஸ்.

இந்த இடத்தில் பிக்பாஸை அசர வைத்த மொட்டை பாஸ் சுரேஷைப் பாராட்டியே ஆக வேண்டும். போட்டியின் தன்மையையே மாற்றி, யாருக்கு அதிக எவிக்‌ஷன் ஓட்டு விழுந்தது எனக் கேட்டு அதிகம் உள்ளவர்களிலிருந்து ஒவ்வொருவராக வெளியேற்றுவது என ஆட்டத்தை மாற்றி அமைத்தார். இதில் என்ன வினோதம் எனில், சுரேஷின் ஸ்டேடர்ஜி பற்றி யாருக்கும் கேள்வியே எழ வில்லை. அப்படி எழுவதற்கு நேரமே அவர் கொடுக்க வில்லை. செம பாஸ்.

ரம்யா இன்னொரு ஓவியாவா? பிக்பாஸ் 9-ம் நாள் #BiggBoss

முதலில் ஷனம். ஆட்ட விதியே புரியாததால் கடைசியில் கண்ணீர் எட்டிப்பார்க்க தான் 22 படங்களில் நடித்தும் நல்ல அறிமுகமே கிடைக்கவில்லை என்று தன்னைப் பற்றி சில வார்த்தைகள் சொல்லிவிட்டு வெளியேறினார். வெளியே வந்த பிறகே ஷனம் என்ன நடந்தது என்று புரிந்துகொள்ள முயன்றார். இனி யோசித்து பிரயோஜனமில்லை என்பதாக விட்டுவிட்டார்.

அடுத்தது ஷிவானிக்கு அதிக ஓட்டுகள் எனும் நிலையில், தனக்கு எப்படியும் மக்களின் ஓட்டுகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வெளியே வந்தார். அடுத்து நாமதான் என்ற முடிவுக்கு சம்யுக்தா வந்துவிட்டார். ஏதேனும் செய்து மாற்றலாம் என அவர் நினைப்பதற்கு எல்லோரின் ஓட்டுகளும் இவருக்கு எதிராக விழ, வெளியேறினார்.

ரம்யா இன்னொரு ஓவியாவா? பிக்பாஸ் 9-ம் நாள் #BiggBoss

’சுரேஷ்க்கு இந்த பாஸ் கிடைக்கும் என்றால் நான் வெளியே போகமாட்டேன்’ என வினோத ஸ்டேடர்ஜியை எடுத்தார் ரேகா. ஆனால், உண்மையில் அவர் சொன்னபோதுதான் இந்த விளையாட்டு எதை நோக்கிச் செல்கிறது என்பதன் முதல் பொறி எல்லோருக்கும் விழுந்திருக்கும். ‘ஆஹாஹா.. எனச் சிரித்தபடியே அவரை வெளியேற்றினார் சுரேஷ். அட்டகாசம் பண்றீங்க சுரேசு.

கேப்பிரில்லா வெளியேற வேண்டும் என நிலையில் பந்தை துணிச்சலோடு எதிர்கொண்டார் (உவமை உபயம் ஐபிஎல்). எவிக்‌ஷன் ஓட்டுகள் எவ்வளவு என்பதாகத்தான் வெளியேற வேண்டுமா என்ன? என்ற கேள்வியை அழுத்தமாகக் கேட்க, ரம்யாவுக்குள் விழுந்த பொறி பற்றிக்கொண்டது. ஆனால், அப்போது அது வெளிப்படப்பட வில்லை.

ரம்யா இன்னொரு ஓவியாவா? பிக்பாஸ் 9-ம் நாள் #BiggBoss

இன்னும் கொஞ்சம் சண்டையை வலுவாக கேப்ரில்லா போட்டிருந்தால், அவர் நீடித்திருக்கக்கூடும். ஆனால், கோபத்துடன் கேட்டவருக்கு அதை விவாதமாக நீட்டிக்கத் தெரியாததால் தன் கரியரைப் பற்றிய விளக்கத்தோடு ஆட்டத்திலிருந்து விலகினார். ’ஆட்டமே அர்த்தமில்லாமல் போயிட்டு இருக்கு’ என்றார் வெளியே வந்த கேப்ரில்லா. என்னம்மா இது, இதைத் தெரிஞ்சுக்க இவ்வளவு நேரம் ஆயிருக்கு உங்களுக்கு?

மழையில் நனைந்த விறகுபோல இருந்த ஆட்டம் இப்போதுதான் சரியாகப் பற்றிக்கொண்டது. ஆஜித்தை வெளியே அனுப்பிவிட்டு ரம்யாவோடு வாதத்தில் வென்று (அவருக்கு கைவந்த கலையாயிற்றே…) எவிக்‌ஷன் ப்ரீ பாஸைக் கைப்பற்ற திட்டமிட்டிருந்தார் சுரேஷ். ஆனால், கடைசி ஓவரில் அதிரடி காட்டும் தோனி போல பட்டையக் கிளப்பினார் ரம்யா.

ரம்யா இன்னொரு ஓவியாவா? பிக்பாஸ் 9-ம் நாள் #BiggBoss

இதற்குப் பின் நடக்கும் உரையாடலை மற்ற போட்டியாளர்கள் பார்க்கும் விதமாக வீட்டில் உள்ள டிவியில் ஒளிப்பரப்பினார் பிக்பாஸ். (விளையாட்டை இன்னும் சூடேத்துறீங்க பிக்பாஸ் சாரே) எல்லோரும் ஆவலோடு டிவியின் முன் குத்த வைத்தார்கள்.

‘எல்லோரையும் எவ்வளவு ஓட்டு வாங்கினாங்கன்னு கேட்டுட்டே இருக்கீங்களே… நீங்க லிஸ்ட்லேயே இல்லையே அப்ப நீங்க எப்ப வருவீங்க?’ என்று விளையாட்டின் மையமான கேள்வியைக் கேட்டார் ரம்யா. (வெளியே டிவியில் பார்த்த ரியோ கைத்தட்டி ஆரவாரம் செய்தார்.

‘சட்டென்று தனது ஸ்டேடர்ஜி உடைப்பட்டதை உணர்ந்த சுரேஷ் சுதாரித்துக்கொண்டு, இதுதான் என் ஸ்டேடர்ஜி என்றார். ரம்யா இன்னும் எச்சரிக்கையானார். ’அப்படின்னா… நான் உங்களை நாமினேஷன் பண்றேன்… ஆஜித் நீ என்ன செய்யற?” என்றதும் அவர் ‘நானும்தான்’ என்பதுபோல தலையாட்டினார்.

ரம்யா இன்னொரு ஓவியாவா? பிக்பாஸ் 9-ம் நாள் #BiggBoss

‘ஆஹா… இனி தாமதிக்கிற ஒவ்வொரு நொடியும் ஆபத்து’ என ‘இல்லம்மா… என்னை வெளியே அனுப்பிட்டு வீக்கான போட்டியாளரோடு மோத நினைக்கிறியா… இதுதான் உன் ஸ்டேடர்ஜியா? ‘ என்று ஆஜித்தைச் சீண்டினார். இதன்மூலம் ரம்யாவுக்கு ஆஜித்தின் சப்போர்ட் செல்லாமல் தடுக்க முயன்றார்.

ஐபிஎல் போட்டியில் கடைசி ஓவரில் 20 ரன்கள் எடுக்க வேண்டும் என்றால், எப்படி இருக்கும் அதுபோல இந்தக் காட்சிகள் நகர்ந்தன. ஆனால், சுரேஷின் திருகல் வளையத்தில் ரம்யா மாட்ட வில்லை. ‘நாங்க ரெண்டு பேரும் உங்களை நாமினேஷன் பண்றோம். நீங்க எங்களை கன்வின்ஸ் பண்ண வைங்க’ என்றார் சிரித்தப்படியே விட்டுக்கொடுக்காமல். வெளியே டிவியில் பார்த்தவர்களிடம் ரம்யாவின் கிடுக்குபிடி கேள்விகளுக்கு செம ரெஸ்பான்ஸ்.

ரம்யா இன்னொரு ஓவியாவா? பிக்பாஸ் 9-ம் நாள் #BiggBoss

மற்றவர்கள் பார்க்கிறார்கள் என்பது தெரியாத சுரேஷ், இந்த ரகசியம் நமக்குள்ளே இருக்கட்டும் என்பதுபோல… ரேகாவைப் பற்றி.. வேல்முருகனைப் பற்றி… அனிதா சம்பதைப் பற்றி… ரியோவைப் பற்றி… நிஷாவைப் பற்றி… குருப்பிஸம் பற்றி… ஒவ்வொன்றாக உடைத்தார். இதுவரை எதிராளியே ரசிக்கும்படி ஆடி வந்த சுரேஷ் பெரும் சறுக்கலை அடைந்தார். வீட்டின் எல்லோரின் எதிர்ப்பை சம்பாதித்துக்கொண்டிருந்தார். குறிப்பாக, வேல்முருகனுக்கு வேட்டிக்கொடுத்ததைப் பற்றிப் பேசும்போது வேல்முருகனைப் புண்படும்படி பேசிவிட்டார்.

ரம்யா இன்னொரு ஓவியாவா? பிக்பாஸ் 9-ம் நாள் #BiggBoss

இறுதியில் ரம்யாவை வெல்ல முடியாது என்றதும் கொஞ்சமும் அசராமல், ‘வெரி குட்.. வெரிகுட்’ என ரம்யாவைப் பாராட்டி விட்டு வெளியேறினார். வெளியே ஹவுஸ்மேட்ஸ் கொத்திப்போயிருந்தனர்.

ஆக, ஒரு பந்தில் ஒரு ரன் எடுக்க வேண்டும் என்ற நிலையில் பவுலர் ஒயிடு பால் போட்டு போட்டியை முடிப்பதுபோல, ரம்யா விட்டுகொடுக்க வில்லை  என்று சொல்லியவாறே ஆஜித்க்கு விட்டுக்கொடுத்தார்.

இந்த இடத்தில்தான் ரம்யா இன்னொரு ஓவியாவாக மாறுவார் என்று நினைக்க வைத்தது. ஓவியாவிடம் இருந்த வெகுளித்தன்மை ரம்யாவிடம் குறைவு என்றாலும், ஓவியா போட்டியில் தொடரமுடியாமல் போனதற்கும் நிஜத்தைக் கையாளத் தெரியாதளவு மிகுந்தவிட்ட வெகுளித்தன்மை என்றே சொல்லலாம்.

ரம்யா இன்னொரு ஓவியாவா? பிக்பாஸ் 9-ம் நாள் #BiggBoss

ஆனால், சுரேஷை சிரித்துக்கொண்டே வீழ்த்தியதிலும் ஒரு வார கேப்டன்ஷிப்பில் யாரையும் காயப்படுத்தாமல் ஓட்டியதையும் வைத்துப்பார்க்கையில் சற்றே புத்திசாலியான வெகுளித்தன்மையைக் கொண்டவராக ரம்யா இப்போது வரையிலான எபிசோடுகளைப் பார்க்கையில் தெரிகிறார். ஓவியா – ரம்யா பெயர் ரைமிங்கைப் போலவே இருவரின் சிகையலங்காரமும் கிட்டத்தட்ட ஒத்துப்போகிறது. இன்றைய நிகழ்ச்சியின்மூலம் பிக்பாஸ் ஹவுஸ் மேட்ஸின் அன்பையும் பெற்றுவிட்டார். யாரு ஜூலி?

’முடிவை பஞ்சாயத்து தலைவர் எனும் முறையில் நான்தான் அறிவிப்பேன். அதுவரை கம்னு இருங்க’ என்று சொல்லி அனுப்பியிருந்தார் பிக்பாஸ். வெளியே வந்த ரம்யாவை ரியோ கொண்டாட்டத்தின் உச்சமாய் தூக்கி ஒரு வட்டமடித்து கீழே இறக்கிவிட்டார். ’நான் செய்ய வேண்டியதை நீங்க செய்திட்டீங்க’ என்று ரம்யாவைப் பாராட்டினார் ஷனம்.

ரம்யா இன்னொரு ஓவியாவா? பிக்பாஸ் 9-ம் நாள் #BiggBoss

மறுபுறம் சுரேஷிடம் ரியோ நான் என்ன சொன்னேன்… என்ன குருப்பிஸம் பார்த்தீங்க.. என்று கேள்வி மேல் கேள்விகளாய் கேட்டுக்கொண்டிருந்தார். நீங்க பேசினதைப் பார்த்தோம் என்று சொல்லியும் மனுஷன் அசர வில்லை.  வேல்முருகன் கொந்தளித்து விட்டார். வேட்டி நல்லா இருக்குனு சொன்னேன். வேட்டியைக் கொடுங்கனு கேட்டேனா… வேட்டியைக் கொடுத்து ஏன் அசிங்கப்படுத்தறீங்க.. பதில் சொல்லுங்க… பதில் சொல்லுங்க… என சுரேஷின் பின்னாலாயே சென்றார்.

ரம்யா இன்னொரு ஓவியாவா? பிக்பாஸ் 9-ம் நாள் #BiggBoss

ஆனால் சுரேஷ், அனிதா சொன்ன ஒரு வார்த்தையைப் பிடித்துகொண்டு பதில் பேசாது அலட்சியமாக தட்டில் சோறையும் முட்டையையும் வைத்து நிதானமாகச் சாப்பிட ஆரம்பித்துவிட்டார். இது வேல்முருகனை இன்னும் உஷ்ணப்படுத்தி கத்த வைத்துவிட்டது. கேமராவைப் பார்த்து ‘பத்த வெச்சிட்டியே பரட்ட’ என்றார் சுரேஷ்.

ஒட்டுமொத்த வீடே சுரேஷ்க்கு எதிரணிக்கு வந்துவிட்டது. ஆனாலும் சுரேஷ் இன்னும் ரெண்டு பேர் வந்தால்கூட சமாளிப்பேன் என்பதுபோல திடமாயிருந்தார். இவரைப் போல கண்டஸ்ட்டை எந்தப் பிக்பாஸ்லேயும் பார்த்திருக்க மாட்டாங்க போலிருக்கே… பிக்பாஸ் உற்சாகமாகவே சிரித்திருப்பார்.

முறைப்படி பரிவட்டம் கட்ட வேண்டும் என்பதுபோல, ‘எவிக்‌ஷன் ப்ரீபாஸ் வின்னர் ஆஜித்’ என அறிவித்தார். ரியோவும் பாலாவும் ஆஜித்தை தூக்கி கொண்டாடினர். அவருக்கு கிடைத்ததில் எவருக்கும் வருத்தமோ பொறாமையோ இல்லை என்பதுபோல மற்றவர்கள் நடந்துகொண்டார்கள்.

ரம்யா இன்னொரு ஓவியாவா? பிக்பாஸ் 9-ம் நாள் #BiggBoss

எவிக்‌ஷன் ப்ரீபாஸ் என்பது கடைசி வரை அவரை யாரும் நாமினேஷன் செய்ய முடியாது எனும் பெரும் பிரம்மாஸ்திரம் என்று நினைத்ததற்கு மாறாக, சில விதிகளை அனுப்பியிருந்தார் பிக்பாஸ்.

பிக்பாஸின் 10 வாரங்களுக்குள் ஒருமுறை மட்டுமே எவிக்‌ஷன் ப்ரீ பாஸைப் பயன்படுத்தலாம். தனக்கோ நண்பருக்கோ பகைவருக்கோ இதைப் பயன்படுத்தலாம்.  (பகைவருக்கு எப்படிப் பாஸ் பயன்படுத்தலாம் வெளியே போகச் சொல்லியா?)

கடைசியாகச் சொன்னதுதான் முக்கியமானது. இந்த ப்ரீ பாஸைப் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் யார் வைத்திருக்கிறார்களோ அவருக்கு இந்த பாஸின் சலுகைகள் சென்றுவிடுமாம். போச்சுடா.. இதைத் திருடுவதற்கு ஒரு டாஸ்க் ரெடி பண்ணியிருப்பார் பிக்பாஸ். ரொம்ப லேட் பண்ணிடாதீங்க பாஸ்.

ஒருபக்கம் பிக்பாஸ் வீட்டில் கலை கட்டியிருக்கிறது. மறுபக்கம் சென்னை சூப்பர் கிங்ஸ் போராடி வென்றிருக்கிறது. இன்றைக்கு டபுள் சந்தோஷம் மக்களுக்குக் கிடைத்திருக்கிறது.

01 யாரு ஓவியா… யாரு ஜூலி… யாரு கவின்… யாரு லாஸ்லியா? முதல்நாளிலேவா தேடுவீங்க? #BiggBoss4

02 ’உங்க வேலையை ஆரம்பிச்சிட்டீங்களே பிக்பாஸ்’ நாள் 2 – #BiggBoss4

03 பிக்பாஸில் முதல் அழுகையும் நிஷாவின் நிஜ ‘பிளாக்’ ஹியூமரும்! #BiggBoss4

04. நான் ஒண்ணும் சூப்பர் மாடல் இல்ல’ யாரை வம்புக்கு இழுக்கிறார் சம்யுதா! பிக்பாஸ் 3-ம் நாள் #BiggBoss4

05. அஜித் பாணியைப் பின்பற்றிய ’ஜித்தன்’ ரமேஷ்! பிக்பாஸ் 4-ம் நாள் #BiggBoss4

06. ஒருநாள் ஹீரோயின்… குடிகார அப்பா… அழ வைத்த அம்மா பாட்டு! பிக்பாஸ் 5-ம் நாள் #BiggBoss4

07. ஷிவானியின் ’கண்மணி’யும் கமலின் ’பாலிடிக்ஸ் பன்ச்’ம் இன்னும் சில பஞ்சாயத்துகளும் – பிக்பாஸ் நாள் 6 #BiggBoss4

08 நிஷாவின் முத்தம் எதற்காக… மிஸ் பிக்பாஸ் யார்… எவிக்‌ஷனில் டார்கெட் இவரே! பிக்பாஸ் 8-ம் நாள்