அஜித் பாணியைப் பின்பற்றிய ’ஜித்தன்’ ரமேஷ்! பிக்பாஸ் 4-ம் நாள் #BiggBoss4

 

அஜித் பாணியைப் பின்பற்றிய ’ஜித்தன்’ ரமேஷ்! பிக்பாஸ் 4-ம் நாள் #BiggBoss4

பிக் பாஸ் இந்த சீசனில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் எல்லாரும் ‘நிதானத்தை’க் கடைபிடித்து வருகிறார்கள். நாம் பேசுவது எப்படி வெளியே காட்டப்படும், அது எப்படிப் புரிந்துகொள்ளப்படும் எப்படி ட்ரோல் செய்யப்படுவோம் என்பதையெல்லாம் கணக்கிட்டப்படி அளந்து பேசுகிறார்கள். அதனால், பிக்பாஸ் இன்னும் கொஞ்ச நாள்களுக்கு அனிதா சம்பத் – சுரேஷ் சக்கரவர்த்தியையே போக்கஸ் செய்ய வேண்டியிருக்கும் போல.

அஜித் பாணியைப் பின்பற்றிய ’ஜித்தன்’ ரமேஷ்! பிக்பாஸ் 4-ம் நாள் #BiggBoss4

நேற்றின் தொடர்ச்சியாக உருளைக்கிழங்கு சண்டை நீடித்தது. ‘நா நல்லா டாய்லெட் கழுவுவேன். என்னை டீம் மாத்திக்கொடுங்க’ என்று சுத்தம் செய்யும் அணியிடமும், தலைவி ரம்யா பாண்டியனிடமும் (இந்த வார கேப்டன்ல… மறந்தே போயிடுச்சு) சொல்லிக்கொண்டிருந்தார் சுரேஷ். ’இந்த மேடத்திடம்தான் எனக்கு பிரச்சனை’ என அனிதாவைக் கைக்காட்ட, உள்ளே சென்று ‘நா அவருக்கு என்ன செய்ஞ்சேன்’ என கண்ணீர் விட்டார்.

அஜித் பாணியைப் பின்பற்றிய ’ஜித்தன்’ ரமேஷ்! பிக்பாஸ் 4-ம் நாள் #BiggBoss4

சமையலுக்கு உதவிக்கொண்டிருந்த சோம் பேச்சு வாக்கில், ‘அனிதா – வனிதா’ என்று சொல்லிவிட உஷாராகி விட்டார் அனிதா. இப்படியான பெயர் சேர்க்கை வந்துவிட்டால் அந்தக் கேரக்டரோடு தன்னைப் பொருத்தியே பார்ப்பார்கள் என நினைத்து புலம்பிக்கொண்டிருந்தார். அவர் பயந்ததின் தீவிரம் புரிந்த சோம் காலில் விழாத குறையாக மன்னிப்பு கேட்டுக்கொண்யிருந்தார். வனிதா அளவுக்கா அனிதாவை நினைக்கப்போகிறார்கள்? ஆனால், வேறு யாரோடு ஒப்பிட்டுத்தான் அனிதாவை சோஷியல் மீடியாவில் எழுதுகிறார்கள். பார்ப்போம். எந்த ஒப்பீடு நிற்க போகிறது என்று.

அனிதா மீண்டும் சுரேஷ் பேசிய ’எச்சில்’ விவகாரத்தைக் கையிலெடுத்தார். அந்த விஷயத்தில் தான் எப்படி வெளியுலகத்தால் புரிந்துகொள்ளப்படுவோம் என்ற கவலை அனிதாவுக்கு இருப்பதாகத் தோன்றியது. ’என்னைய ட்ரிக்கர் பண்ணும் வேலையை பிக்பாஸ் சுரேஷ்க்குக் கொடுத்திருக்கிறார்’ என்று பிக்பாஸ் மேலேயே புகார் அளித்துக்கொண்டிருந்தார். ‘இது யோசனை நல்லா இருக்கே’ என்று நினைத்திருப்பார் பிக்பாஸ். அதனால், இனிமேல்தான் சுரேஷ்க்கு ஏதாவது டாஸ்க் கொடுக்கக்கூடும். ஆனால் ரியோ ரொம்பவும் இந்த விஷயத்தைக் கணித்தார். ‘அவர் ஒரு தடவைத்தான் சொன்னார். நீதான் திரும்பத் திரும்ப பேசிட்டு இருக்க… இது நல்லதுக்கு இல்ல… பார்த்துக்கோ” என்று எச்சரித்தார். இன்னும் கொஞ்சம் அழுத்தமாகச் சொல்லுங்க பாஸ். எங்களுக்குமே முடியல.

அஜித் பாணியைப் பின்பற்றிய ’ஜித்தன்’ ரமேஷ்! பிக்பாஸ் 4-ம் நாள் #BiggBoss4

இதுவரைக்கும் சொன்ன கதையில் இருந்து நான்கு பேரை எலிமினேஷனிலிருந்து விடுவிங்க என்றதும், கூடி குசு குசுவென முடிவெத்தனர். இதை ஒழுங்கு செய்தவர் பாலா. (அவரை ஏன் பாகுபலி என்றார்கள்) ‘வேல்முருகன், நிஷா, ரியோ, ஆரி’ என்று அறிவிக்க, இதெல்லாம் தெரிந்ததுதானே என்று பெரிய ரியாக்‌ஷன் எவரிடமும் இல்லை. தன் பெயர் இல்லாதது வருத்தமாக அதுவும் லேசாகக் காட்டியது ரேகா மட்டுமே. இதன்மூலம் சின்னச் சின்ன சலசலப்பு வரலாம் என நினைத்த பிக்பாஸின் எண்ணத்தில் மண்ணைப் போட ‘இன்னும் என்னதான் செய்யறது’ எனக் குழம்பியிருப்பார் பிக்பாஸ்.

நான்காம் நாள்…

அஜித் பாணியைப் பின்பற்றிய ’ஜித்தன்’ ரமேஷ்! பிக்பாஸ் 4-ம் நாள் #BiggBoss4

’காந்த கண்ணழகி…’ பாடலை ஒலிக்க விட்டார் பிக்பாஸ். தூங்கி எழுந்தவர்களின் கண்களைப் பார்த்து இப்படிப் பாட தனி துணிச்சல் வேணும் பாஸ். நேற்றையை விட இன்று உற்சாகமாக ஆடினர். சோம்ஸ் பாம்பு டான்ஸ் ஆடினார். சுரேஷ் துண்டை தலையில் கட்டிக்கொண்டு மிக உற்சாகமாக ‘மனதிற்குள்’ ஆடிக்கொண்டார். அதுதான் நல்லது சுரேஷ் சார்.

’வந்த கதை’ சொல்ல அனிதா சம்பத் வந்தார். ‘அழமாக பேச ட்ரைப் பண்றேன்’ என்று ஆரம்பித்தார். இரண்டு வகையான நடுத்தர குடும்பங்கள் இருக்கின்றன. ஒன்று குறைவான ஆனால், நிலையான வருமானம் கொண்டவை. மற்றது, வருமானம் கொஞ்சம் அதிகம், குறைவாக வரும். ஆனால், அது நிலையில்லை. அனிதாவின் குடும்பம் இரண்டாம் வகையைச் சேர்ந்தது போல.

அஜித் பாணியைப் பின்பற்றிய ’ஜித்தன்’ ரமேஷ்! பிக்பாஸ் 4-ம் நாள் #BiggBoss4

தினமும் சென்னையிலிருந்து திருவள்ளூருக்கு படிக்கச் சென்று, திரும்பி டியூசன் சொல்லிக்கொடுக்க ஒரு மணிநேரம் நடந்து சென்ற அவஸ்தையைச் சொன்னார். மிடில் கிளாஸில் படிக்க விரும்பும்  பெண்கள் பலரும் டியூசன் சொல்லிக்கொடுப்பதைப் பார்த்திருக்கிறோம். இன்னமும் கிராமத்திலும் நடுத்தர குடும்பத்திலும் பெண்கள் அடம் பிடித்தால் மட்டுமே கல்லூரி படிப்பெல்லாம் சாத்தியம் என்பதே உண்மை. அப்படி இருக்கையில் கல்லூரி தேவைக்களுக்கு தாமே சம்பாதித்துக்கொள்ள வேண்டியவர்களாகவும் இருக்கின்றனர்.

கடும்போராட்டத்தின் மூலமாகவே தனக்கான ஓர் இடத்தைப் பிடித்திருத்திருப்பதை விளக்கிச் சொன்னார் அனிதா. கூடுதலாக சில அட்வைஸஸ். அவற்றில் ஒன்று ‘கல்யாணத்துக்கு அதிக செலவு செய்யாதீங்க’ என்பது. நிஜமாகவே சரியான விஷயம்தான்.

அஜித் பாணியைப் பின்பற்றிய ’ஜித்தன்’ ரமேஷ்! பிக்பாஸ் 4-ம் நாள் #BiggBoss4

வந்த கதையை குறுகிய நேரத்தில் சொன்ன சாதனையை ஷிவானி செய்திருக்கிறார். சரியாகச் சொல்வதென்றால் போட்டியாளர்களை ஆடியன்ஸ் புரிந்துகொள்ள உதவும் பகுதி இது. அதை சரியாகப் பயன்படுத்தியவர்கள் மட்டுமே சென்ற் சீசன்களில் வாக்குகளால் காப்பாற்றப்பட்டு வந்திருக்கிறார்கள். ஆனால், அதை இந்த சீசனில் ரேகா, ஷிவானி, கேப்ரில்லா மூவரும் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவே இல்லை. ‘புரோமோல ஷிவானி பேசற பார்த்திட்டு பிக்பாஸ் பார்த்தால், அதுலேயும் இவ்வளவுதான் பேசியிருக்காங்களானு நினைப்பாங்க’ என நிஷா அடித்த ஜோக் உண்மைதான். ஆக, எல்லார் கவனமும் ப்ரோமோ மேலதான் இருக்கு? (ஆனா, கண்டண்ட் கொடுக்க மாட்டேங்கிறீங்களே – இது பிக்பாஸ் மைண்ட் வாய்ஸ்)

அஜித் பாணியைப் பின்பற்றிய ’ஜித்தன்’ ரமேஷ்! பிக்பாஸ் 4-ம் நாள் #BiggBoss4

சுரேஷ் சக்கரவர்த்தி நிதானமாகப் பேசினார். ஏற்றமும் இறக்கமும் தொடர்ந்து நீடித்த வாழ்க்கையை சுருக்கமாக ஆனால், ஆடியன்ஸ்க்குப் புரியும் விதத்தில் சொன்னார். ’அழகன்’ படத்தில் இவர் கால் அடிபட்டவராக போனில் ஒட்டுக்கேட்கும் காட்சி நினைவில் வந்தது. அப்போதைய தோற்றத்திற்கும் இப்போதையும் தொடர்பே இல்லாததுபோல ஆகியிருந்தார். ஆனால், இந்த இடைவெளிக்குள் ஆஸ்திரேலியா, அமெரிக்கா என பல நாடுகளில் தொழில் தொடங்கி நஷ்டமும் லாபம் அடைந்து திரும்பிய கதை இருக்கிறது. மகனுக்கு ப்ளட் கேன்சர் வந்தது பற்றிச் சொல்லுகையில் குரல் உடைந்து விட்டார். சில நொடிகளில் தானே தேறிக்கொண்டு ’ரொம்ப கடினமான போட்டியாளராக இருப்பேன்’ என்று அழுத்தமாகச் சொல்லி முடித்தார். உடனே அனிதாவின் ரியாக்ஸனைக் காட்டினார் பிக்பாஸ்.

அஜித் பாணியைப் பின்பற்றிய ’ஜித்தன்’ ரமேஷ்! பிக்பாஸ் 4-ம் நாள் #BiggBoss4

ரேகா தூங்கிக்கொண்டிருக்க, ரம்யா, கேப்ரில்லா டீம் நாய்க் குறைப்பதுபோல சத்தம் போட்டு எழுப்பினர். ‘இவ்வளவு கேவலமாக மிமிக்ரி செய்றீங்க..  நான் இப்ப செஞ்சுக்காட்டுறேன்னு ரேகா நாய் குறைக்கும் மிமிக்ரி செய்ய… பிக்பாஸ் உங்களுக்கு கண்டண்ட் கிடைக்கல என்பதற்காக ஆடியன்ஸைச் சோதிக்காதீங்க?

ஜித்தன் ரமேஷ் கதை கேட்காமலே நடித்த கதையைச் சொன்னார். ’எக்ஸாமில் பெயிலானதை எப்படிச் சொல்வது என்ப் பயந்திட்டு இருந்தப்ப, நடிக்க கூப்பிட்டாங்க. ஜித்தன் சக்ஸஸானதும் அமைதிப்படை சத்தியராஜ் போல ஆகிட்டேன். அடுத்தடுத்து வந்த படங்களுக்கு கதையைக்கூட கேட்கல. பணத்தை மட்டுமே பார்த்தேன்’ என்றார். தமிழ் சினிமாவில் கதை கேட்காமல் நடிக்க ஒத்துக்கொண்டவர் அஜித். அதை பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். ‘அவ்வளவு பெரிய தொகையைப் போட்டு படம் எடுக்கிறாங்க… அவங்க இந்தக் கதையை நம்பிதானே ஓகே சொல்லியிருப்பாங்க’ என்பதாகப் பதில் சொல்லிக்கொண்டிருந்தார் அஜித். ஆனால், தன் முடிவு தவறானது என்பதையும் பின்னால் வந்த பேட்டிகளில் சொல்லியிருக்கிறார்.

அஜித் பாணியைப் பின்பற்றிய ’ஜித்தன்’ ரமேஷ்! பிக்பாஸ் 4-ம் நாள் #BiggBoss4

‘விருது விழாவில் என்னைய பேட்டி எடுத்திட்டு இருந்தாங்க. இன்னொரு ஸ்டார் வந்ததும் அப்படியே விட்டுட்டு போய்ட்டாங்க. காலேஜ் பங்ஷனில் கூப்பிட்டப்பவும் வேறொரு ஸ்டார் வந்ததும் என்னைய கண்டுக்கல. அன்னிக்கு இரவு ரொம்ப அழுதேன்’ என்றார். பல ஆண்டுகளாக ஒருவர் மீது லைட் விழுந்துகொண்டே இருக்க வேண்டுமானால் அவர் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் ரமேஷ் பேச்சின் ஒன்லைன்.

அவர் குழந்தை மாடியிலிருந்து விழுந்ததைப் பற்றிச் சொல்லும்போதே அவரிடம் பதற்றம் தொற்றிக்கொண்டது. இந்த சீசனில் நிஷா, சுரேஷ், அம்ருதா, ரமேஷ் என தங்கள் குழந்தைகளுக்கு நேர்ந்ததைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்கள். அந்நேரங்களில் அவர்களின் குரலும் முகமும் வேறு விதமாக இருந்தன.

அஜித் பாணியைப் பின்பற்றிய ’ஜித்தன்’ ரமேஷ்! பிக்பாஸ் 4-ம் நாள் #BiggBoss4

’15 வருஷத்துக்கு முன்னாடியே இந்த மேடை எனக்குக் கிடைச்சது. அதை சரியா பயன்படுத்திக்கொள்ள தெரியல. அதனாலதான் இப்போ வந்திருக்கேன்’ என்று சொல்லி முடித்தார் ரமேஷ். இரண்டாம் சீசனில் வையாபுரி சொன்னது நினைவுக்கு வருகிறது. சின்னச் சின்ன பாத்திரங்களில் நடிப்பவர் அவர். அதனால், சில நாட்களே சூட்டிங் இருக்கும். வேலை கிடைக்காத வேதனையை கோபமாக மனைவியிடம் காட்டியதாகப் பேசியிருந்தார்.

அஜித் பாணியைப் பின்பற்றிய ’ஜித்தன்’ ரமேஷ்! பிக்பாஸ் 4-ம் நாள் #BiggBoss4

அனிதா சம்பத் இன்றும் ’செய்திகள் வாசிப்பது…’ என ஆரம்பித்தபோது ரியோ செம எக்ஸ்பிரஸன் கொடுத்தார். அது ஒட்டுமொத்த வீட்டின் மைண்ட் எக்ஸ்பிரஷனாகக்கூட இருக்கலாம். இன்னொரு பக்கம் ஷனம் ஷெட்டி கிச்சன் ஏரியாவில் ரேகாவுடன் சண்டை போட ட்ரை பண்ணிட்டு இருந்தார். வனிதா மாதிரியான ஜாம்புவான்கள் கதகளி ஆடின இடத்தில் இதெல்லாம் கொசுறு. தூரத்தில் உட்கார்ந்திருந்த அனிதா சம்பத், ‘ரொம்ப போரிங்கா இருந்துச்சுன்னு நினைச்சேன். சத்தம் போட ஆரம்பிச்சிட்டாங்க’ என்றார். ஆடியன்ஸ் மைண்ட் வாய்ஸூம் இதுதான்.

முந்தைய எபிசோட்கள் பற்றிய பதிவுகளைப் படிக்க:

01 யாரு ஓவியா… யாரு ஜூலி… யாரு கவின்… யாரு லாஸ்லியா? முதல்நாளிலேவா தேடுவீங்க? #BiggBoss4

02 ’உங்க வேலையை ஆரம்பிச்சிட்டீங்களே பிக்பாஸ்’ நாள் 2 – #BiggBoss4

03 பிக்பாஸில் முதல் அழுகையும் நிஷாவின் நிஜ ‘பிளாக்’ ஹியூமரும்! #BiggBoss4

04. நான் ஒண்ணும் சூப்பர் மாடல் இல்ல’ யாரை வம்புக்கு இழுக்கிறார் சம்யுதா! பிக்பாஸ் 3-ம் நாள் #BiggBoss4