தொற்று நோயை பரப்புவதாக சூர்யா தேவி மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு!

தொற்று நோயை பரப்புவதாக சூர்யா தேவி மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு!

நடிகை வனிதா, பீட்டர் பால் 3வது திருமணம்  பற்றி கடுமையாக விமர்சித்து யூடியூபில் சூர்யாதேவி வீடியோ வெளியிட்டிருந்தார். இதையடுத்து அவர் மீது  காவல் நிலையத்தில் வனிதா புகார் அளித்தார். வனிதா கஞ்சா வியாபாரி என அவதூறான வார்த்தைகள் பேசி தனது மனதை புண்படுத்தி உள்ளதால், வனிதா மீது நடவடிக்கை கோரி, வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையில் சூர்யாதேவியும்  புகார் அளித்துள்ளார்.

தொற்று நோயை பரப்புவதாக சூர்யா தேவி மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு!

இதை தொடர்ந்து வனிதாவை விமர்சனம் செய்த சூர்யா தேவிவை கடந்த 23 ஆம் தேதி வடபழனி மகளிர் போலீசார் கைது செய்த நிலையில் அன்றைய தினமே அவருக்கு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

தொற்று நோயை பரப்புவதாக சூர்யா தேவி மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு!

இதையடுத்து  நடிகை வனிதா விவகாரத்தில் சர்ச்சைக்குள்ளான சூர்யா தேவிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.  சூர்யா தேவியை விசாரித்த பெண் காவல் ஆய்வாளர் ரேணுகாவுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்ட சூர்யாதேவி தலைமறைவாகி விட்டதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதை  சூர்யா தேவி தனக்கு கொரோனா இல்லை என்று வீடியோ வெளியிட்டார்.

தொற்று நோயை பரப்புவதாக சூர்யா தேவி மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு!

இந்நிலையில் சென்னை மாநகராட்சி அதிகாரி ரமேஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் சூர்யா தேவி மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாகி தொற்று நோயை பரப்புவதாக சூர்யாதேவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.