“எனக்கு என் கணவர் வேண்டும்; வனிதாவின் திருமணம் செல்லாது: பீட்டர் பால் மனைவி பரபரப்பு பேட்டி!

 

“எனக்கு என் கணவர் வேண்டும்; வனிதாவின் திருமணம் செல்லாது: பீட்டர் பால் மனைவி பரபரப்பு பேட்டி!

நடிகர் விஜய் நடித்து 1995 ஆம் ஆண்டு வெளியான சந்திர லேகா படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை வனிதா விஜயகுமார். தனது இரண்டு கணவர்களையும் விவாகரத்து செய்த பின் மூன்றாவதாக டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டை திருமணம் செய்து கொள்ள இருந்தார்.இதையடுத்து இவர்கள் கருத்து வேறுபாட்டால் பிரிந்ததாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், அண்மையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டதால் தற்போது யூடியூப் பக்கம் ஒன்றைத் தொடங்கி, தனது சமையல் வீடியோக்களைப் பதிவிட்டு வருகிறார்.

“எனக்கு என் கணவர் வேண்டும்; வனிதாவின் திருமணம் செல்லாது: பீட்டர் பால் மனைவி பரபரப்பு பேட்டி!

இதை தொடர்ந்து கடந்த 27 ஆம் தேதி நடிகை வனிதா இயக்குநர் பீட்டர் பால் என்பவரை தனது வீட்டிலேயே கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இதற்கான புகைப்படமும் இணையத்தில் வைரலானது. இதுகுறித்து பீட்டர் பால் மீது அவரின் மனைவி எலிசபெத் ஹெலன் வடபழனி போலீசில் புகார் அளித்துள்ளார். முறையாக விவாகரத்து செய்யாமல் வனிதாவை திருமணம் செய்துகொண்டதாக அவர் புகார் கூறினார். இதற்கு பதிலளித்த வனிதா, அவர் பணத்திற்காக இப்படி செய்கிறார். நாங்கள் சட்டரீதியாக வழக்கை சந்திப்போம் என்றார்.

“எனக்கு என் கணவர் வேண்டும்; வனிதாவின் திருமணம் செல்லாது: பீட்டர் பால் மனைவி பரபரப்பு பேட்டி!
இந்நிலையில் பீட்டரின் முதல் மனைவி எலிசபெத் இணையதள ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், “நான் திருமணம் நடப்பது குறித்து கடந்த 19 ஆம் தேதியே புகார் அளித்தேன். ஆனால் விவாகரத்து வாங்கும் வரை திருமணம் செய்ய மாட்டேன். 27ஆம் தேதி கேக் மட்டும் வெட்டி கொள்கிறோம் என்று காவல் நிலையத்தில் பீட்டர் தெரிவித்தார். ஆனால் போலீசாரோ கேக் எல்லாம் வெட்ட கூடாது என்று அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். இப்போது ஷூட்டிங்கிற்காக தான் கேக் வெட்டினோம் என்று கூறுகிறார்கள். நான் ஒரு கோடி ரூபாய் கேட்டதாகவும் கூறுகிறார்கள். இதற்கு ஆதாரம் உண்டா? ஆனால் அவர்கள் சட்டபூர்வமாக திருமணம் செய்துள்ளோம் என்று கூறியதற்கு ஆதாரம் இருக்கிறது. அவர்கள் குடியிருப்பில் இருந்த அனைவரையும் திருமணத்திற்கு அழைத்துள்ளார்கள். நான் பணத்தை எதிர்பார்க்கவில்லை. நான் ஒரு தமிழ் பெண். எனக்கு என் கணவர் வேண்டும். என் கணவர் இல்லாமல் நாங்கள் இல்லை, அவர் செய்துகொண்ட திருமணம் செல்லாது” என்று கூறியுள்ளார்.