பீட்டர் பாலின் மனைவி புகாரை உதாசினப்படுத்தி, வனிதாவின் 3வது திருமணத்திற்கு போலீஸ் உதவியதா?

 

பீட்டர் பாலின் மனைவி புகாரை உதாசினப்படுத்தி, வனிதாவின் 3வது திருமணத்திற்கு போலீஸ் உதவியதா?

நடிகர் விஜய் நடித்து 1995 ஆம் ஆண்டு வெளியான சந்திர லேகா படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை வனிதா விஜயகுமார். தனது இரண்டு கணவர்களையும் விவாகரத்து செய்த பின் மூன்றாவதாக டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டை திருமணம் செய்து கொள்ள இருந்தார். இதையடுத்து இவர்கள் கருத்து வேறுபாட்டால் பிரிந்ததாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், சண்டைக்கு பெயர் போனவர் என்ற பெயர் எடுத்ததோடு, தனது தாய்மை உணர்வையும் வெளிப்படுத்தினார்.

பீட்டர் பாலின் மனைவி புகாரை உதாசினப்படுத்தி, வனிதாவின் 3வது திருமணத்திற்கு போலீஸ் உதவியதா?

தற்போது வனிதா தனது இரண்டு மகள்களோடு வசித்து வருகிறார். அண்மையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்ட இவர் தற்போது யூடியூப் பக்கம் ஒன்றைத் தொடங்கி, தனது சமையல் வீடியோக்களைப் பதிவிட்டு வருகிறார். இதற்கிடையில் நேற்று நடிகை வனிதா, விஷூவல் எபக்ட்ஸ் இயக்குநர் பீட்டர் பால் என்பவரை தனது வீட்டிலேயே கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இதற்கான புகைப்படமும் இணையத்தில் வைரலானது.

பீட்டர் பாலின் மனைவி புகாரை உதாசினப்படுத்தி, வனிதாவின் 3வது திருமணத்திற்கு போலீஸ் உதவியதா?

இந்நிலையில் பீட்டர் பால் மீது அவரின் மனைவி எலிசபெத் ஹெலன் வடபழனி போலீசில் புகார் அளித்துள்ளார். புகார் மனுவில்‘‘எனது கணவர் பீட்டர் பாலுக்கும் எனக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 7 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறோம். இந்நிலையில் எனது கணவர் என்னை விட்டு விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். எனது கணவர் என்னை முறைப்படி விவாகரத்து செய்ய வில்லை. அவருடன் நான் சேர்ந்து வாழ விரும்புகிறேன். அதனால் அவரிடம் விசாரணை நடத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகார் மனு கடந்த 19ம் தேதியே போலீஸ் நிலையத்தில் கொடுக்கப்பட்டது. அது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் நேற்று வனிதா – பீட்டர் பால் திருமணம் நடைபெற்று விட்டது. ஆனால் திருமணம் நடைபெறபோவது தெரிந்தும் போலீசார் இந்த திருமணத்தை நடத்தவில்லை. பீட்டர் பால் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.