நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவுக்கு கொரோனா உறுதி; அர்ஜுன் குடும்பத்துக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி!

 

நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவுக்கு கொரோனா உறுதி; அர்ஜுன் குடும்பத்துக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி!

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை பாகுபாடு இல்லாமல் தாக்கும் இந்த கொரோனா வைரஸ், பலரையும் உயிரிழக்க செய்துள்ளது. நடிகை ஐஸ்வர்யா ராய், அமிதாப் பட்சன் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது நடிகர் அர்ஜுனின் மகளான நடிகை ஐஸ்வர்யாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவுக்கு கொரோனா உறுதி; அர்ஜுன் குடும்பத்துக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி!

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களே நடித்திருந்தாலும் இவருக்கு ரசிகர்கள் அதிகம் என்றே கூறலாம். ஐஸ்வர்யாவுக்கு கொரோனா உறுதியாகியுள்ளதால் அவர் தன் வீட்டிலேயே தனிமைபடுத்தப்பட்டுள்ளார். இது குறித்து ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனக்கு கொரோனா உறுதியாகியுள்ளதால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் தான் கொரோனாவில் இருந்து மீண்டதும் தெரிவிக்கிறேன். லவ் யூ ஆல் என்றும் பதிவிட்டுள்ளார்.சில நாட்களுக்கு முன்னர் நடிகர் அர்ஜுனின் மனைவி மற்றும் சகோதரருக்கு கொரோனா உறுதியானது குறிப்பிடத்தக்கது.