நடிகை வனிதா-பீட்டர் பால் திருமண சர்ச்சை : பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான தடுப்பு பிரிவில் பீட்டர் பால் மனைவி புகார்!

பணத்திற்காக இப்படி செய்கிறார். நாங்கள் சட்டரீதியாக வழக்கை சந்திப்போம் என்றார்.

நடிகை வனிதா விஜயகுமார் கடந்த 27 ஆம் தேதி இயக்குநர் பீட்டர் பால் என்பவரை தனது வீட்டிலேயே கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

இதற்கான புகைப்படமும் இணையத்தில் வைரலானது. இதுகுறித்து பீட்டர் பால் மீது அவரின் மனைவி எலிசபெத் ஹெலன் வடபழனி போலீசில் புகார் அளித்துள்ளார். முறையாக விவாகரத்து செய்யாமல் வனிதாவை திருமணம் செய்துகொண்டதாக அவர் புகார் கூறினார். இதற்கு பதிலளித்த வனிதா, அவர் பணத்திற்காக இப்படி செய்கிறார். நாங்கள் சட்டரீதியாக வழக்கை சந்திப்போம் என்றார்.

இந்நிலையில் நடிகை வனிதா, திருமணம் செய்துள்ள பீட்டர் பாலின் முதல் மனைவி கணவருக்கு எதிராக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான தடுப்பு பிரிவு துணை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். அதில், ‘எனது கணவர் பீட்டர் பால் முறையாக என்னை விவாகரத்து செய்யாமல் நடிகை வனிதாவை திருமணம் செய்து கொண்டார். இது குறித்து திருமணத்திற்கு முன்பே நான் வடபழனி போலீசில் புகார் அளித்தேன். காவல் ஆய்வாளர் ரேணுகா, புகாரை முறையாக விசாரித்து இருந்தால், திருமணம் நடந்திருக்காது. போலீசார் ஒரு சார்பாக செயல்படுவதால் தனக்கு நியாயம் கிடைக்காது. இதனால் வேறு ஒரு காவல் ஆய்வாளரை வைத்து தனது புகாரை விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

Most Popular

ராமர் கோயில் பூமி பூஜை! இன்னும் எத்தனை பேரை மருத்துவமனைக்கு அனுப்ப விரும்புகிறீர்கள் மோடிஜி- திக்விஜய சிங்

அயோத்தியில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக உள்ள ராமர் கோயில் கட்டுமான பணிக்கான பூமி பூஜை நாளை நடைபெற உள்ளது. அந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்ட உள்ளார். இந்த...

கொரோன சிகிச்சைக்கு எய்ம்ஸ் செல்லாமல் தனியார் மருத்துவமனைக்கு அமித் ஷா சென்றது ஏன்?… சசி தரூர்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று உறுதியானது. இதனையடுத்து 55 வயதான அமித் ஷா குர்கானில் உள்ள தனியார் மருத்துவமனையான மெதந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக...

பீகார் சட்டப்பேரவையில் ஒரு கேள்வி கூட கேட்காமல் 12 மசோதாக்கள் நிறைவேற்றம்…

பொதுவாக பீகார் சட்டப்பேரவையின் மழைகாலக் கூட்டத்தொடர் 4 நாட்கள் நடைபெறும். ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக கூட்டத்தொடர் 1 நாளாக குறைக்கப்பட்டது. மேலும் பீகார் சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக சட்டப்பேரவை கூட்டத்தொடர்...

ஒரே மாசம்தான் 2.52 லட்சம் வாகனங்கள் காலி.. வேகம் எடுத்த டி.வி.எஸ். மோட்டார் வாகனங்கள் விற்பனை..

நாட்டின் முன்னணி இரு மற்றும் 3 சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி கடந்த ஜூலை மாதத்தில் மொத்தம் 2.52 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. 2020 ஜூனுடன் ஒப்பிட்டால்...