மீண்டும் திறக்கவுள்ள கோயம்பேடு : ஓபிஎஸ் இன்று நேரில் ஆய்வு!

 

மீண்டும் திறக்கவுள்ள கோயம்பேடு : ஓபிஎஸ் இன்று நேரில் ஆய்வு!

கோயம்பேடு வியாபாரிகள் மூலம் சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்தது. கோயம்பேடு சந்தை வியாபாரிகள் மூலமாக மற்ற வியாபாரிகள், பொதுமக்கள், காய்கறி இறக்குமதி செய்ய வந்தவர்கள் என பன்மடங்காக பாதிப்பு அதிகரித்தது. கொரானோ நோய்பரவல் தடுப்பு நடவடிக்கையாக கோயம்பேடு மார்கெட் கடந்த மே 5ம் தேதி மூடப்பட்டது. சந்தை மூடப்பட்டு திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தை தொடங்கப்பட்டது. மேலும், பழ மார்க்கெட் மாதாவர சந்தைக்கு மாற்றப்பட்டது.

மீண்டும் திறக்கவுள்ள கோயம்பேடு : ஓபிஎஸ் இன்று நேரில் ஆய்வு!

இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு கோயம்பேடு மார்க்கெட் திறக்க தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்தார். இதை தொடர்ந்து சென்னை கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையை விரைவில் திறப்பது தொடர்பாக சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் கார்த்திகேயன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

மீண்டும் திறக்கவுள்ள கோயம்பேடு : ஓபிஎஸ் இன்று நேரில் ஆய்வு!

இந்நிலையில் கோயம்பேடு திறப்பது குறித்து துணை முதல்வர் ஓபிஎஸ் இன்று காலை 11 மணிக்கு கோயம்பேடு சந்தையில் நேரில் ஆய்வு மேற்கொள்கிறார். அத்துடன் மதியம் 12 மணிக்கு வணிகர் சங்க நிர்வாகிகளுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தவுள்ளார்.