சென்னை திருமழிசை மார்க்கெட்டில் காய்கறிகளின் இன்றைய விலை நிலவரம்!

 

சென்னை திருமழிசை மார்க்கெட்டில் காய்கறிகளின் இன்றைய விலை நிலவரம்!

சென்னையில் குறைவாகவே இருந்த கொரோனா வைரஸ் பாதிப்பு, கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா பரவியதன் காரணமாக பெருந்தொற்றாக உருவெடுத்தது. கோயம்பேடு வியாபாரிகள் மூலம் சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்தது. கோயம்பேடு சந்தை வியாபாரிகள் மூலமாக மற்ற வியாபாரிகள், பொதுமக்கள், காய்கறி இறக்குமதி செய்ய வந்தவர்கள் என பன்மடங்காக பாதிப்பு அதிகரித்தது. இதனால் அந்த சந்தை மூடப்பட்டு திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தை தொடங்கப்பட்டது. மேலும், பழ மார்க்கெட் மாதாவர சந்தைக்கு மாற்றப்பட்டது.

சென்னை திருமழிசை மார்க்கெட்டில் காய்கறிகளின் இன்றைய விலை நிலவரம்!

இந்நிலையில் இன்று சென்னை திருமழிசை காய்கறி விலை நிலவரத்தை பார்க்கலாம். ஒரு கிலோ பெரிய வெங்காயம் 9 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 60 ரூபாய்க்கும், தக்காளி 12 ரூபாய்க்கும், உருளை 22 ரூபாய்க்கும், கத்தரிக்காய் 15 ரூபாய்க்கும் கேரட் 20 ரூபாய்க்கும் வெண்டை 10 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. மேலும், பீட்ரூட் 28 ரூபாய்க்கும் பீன்ஸ் 80 ரூபாய்க்கும் பூண்டு 120 ரூபாய்க்கும் முட்டை கோஸ் 12 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. திருமழிசை சந்தையை விட எம்.ஜி.ஆர் நகரில் காய்கறிகள் ரூ.2 முதல் 10 வரை அதிகமாக விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.