திருச்சி பேருந்து நிலையத்தில் செயல்பட்டுவந்த காய்கறி சந்தைகள் இடமாற்றம்!

 

திருச்சி பேருந்து நிலையத்தில் செயல்பட்டுவந்த காய்கறி சந்தைகள் இடமாற்றம்!

தமிழகத்தின் முக்கிய காய்கறிச் சந்தையாகத் திருச்சி காந்தி மார்க்கெட் விளங்குகிறது. இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு காய்கறிகள் அனுப்பப்படுகிறது. கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலிலுள்ள சூழலில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருச்சி காந்தி மார்க்கெட் மூடப்பட்டது. தொடர்ந்து, காய்கறி மொத்த விற்பனைக்காக இரவு நேரங்களில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள பால்பண்ணை பகுதியில் தற்காலிகச் சந்தை செயல்பட்டுவந்தது. இதேபோல் மத்திய பேருந்து நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையத்திலும் தற்காலிக காய்கறி சந்தைகள் செயல்பட்டுவந்தன.

திருச்சி பேருந்து நிலையத்தில் செயல்பட்டுவந்த காய்கறி சந்தைகள் இடமாற்றம்!
நாளை முதல் பேருந்து போக்குவரத்து சேவை தொடங்குவதால் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த தற்காலிக காய்கறி சந்தை இனி தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தையிலும், சத்திரத்தில் செயல்பட்டு வந்த காய்கறி சந்தை இனி செயின்ட் ஜோசப் கல்லூரி மைதானத்திலும் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு அறிவித்துள்ளார்.