கோயம்பேடு மார்க்கெட் விரைவில் திறப்பு! நாளை துணை முதல்வர் ஆய்வு!!

 

கோயம்பேடு மார்க்கெட் விரைவில் திறப்பு! நாளை துணை முதல்வர் ஆய்வு!!

கொரானோ நோய்பரவல் தடுப்பு நடவடிக்கையாக கோயம்பேடு மார்கெட் கடந்த மே 5ம் தேதி மூடப்பட்டது. இதையடுத்து காய்கறி மொத்த விற்பனை திருமழிசைக்கும், மொத்த பழ விற்பனை மாதவரம் பஸ் நிலையத்திற்கும், பூ மொத்த விற்பனை வானகரத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டது. அங்கு சில்லரை வியாபாரிகள் யாருக்கும் கடைகள் ஒதுக்கீடு செய்யப்படாததல் ஏராளமான வியாபாரிகள், ஊழியர்கள், கூலி தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். ஒரு சிலர் வாடகைக்கு கடை பிடித்து ஆங்காங்கே வியாபாரம் செய்து வருகின்றனர்.

திருமழிசையில் காய்கறிகளை பாதுகாக்க போதிய வசதிகள் இல்லாததாலும் தொடர் மழையினலும் காய்கறிகள் வீணாவதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர். எனவே, கோயம்பேடு சந்தையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் தொடர்ந்து தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றனர். மேலும் நேற்று முன்தினம் வியாபாரி சங்க நிர்வாகிகள் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து மார்கெட்டை உடனடியாக திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

கோயம்பேடு மார்க்கெட் விரைவில் திறப்பு! நாளை துணை முதல்வர் ஆய்வு!!

இந்நிலையில் நேற்று காலை சென்னை மேற்கு இணை கமிஷனர் மகேஸ்வரி, அண்ணா நகர் துணை கமிஷனர் ஜவஹர் ஆகியோர் தலைமையில் கோயம்பேடு மார்கெட்டை ஆய்வு செய்தனர். இன்று காலை சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் கார்த்திகேயன், அங்காடி நிர்வாக குழு அதிகாரி கோவிந்தராஜன் ஆகியோர் மார்கெட்டை ஆய்வு செய்தனர். இதனிடையே நாளை காலை 11 மணிக்கு துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆய்வு மேற்கொள்ளவுள்ளார். மேலும் கோயம்பேடு சந்தையை மீண்டும் திறப்பது குறித்து 12 மணிக்கு தலைமை செயலகத்தில் வணிகர் சங்கங்களுடன் ஆலோசனையும் நடத்தவுள்ளார்.