கோயம்பேடு மார்க்கெட் விரைவில் திறக்கப்படும்!

கோயம்பேடு மார்க்கெட் விரைவில் திறக்கப்படும்!

சென்னையில் குறைவாகவே இருந்த கொரோனா வைரஸ் பாதிப்பு, கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா பரவியதன் காரணமாக பெருந்தொற்றாக உருவெடுத்தது. கோயம்பேடு வியாபாரிகள் மூலம் சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்தது.

கோயம்பேடு மார்க்கெட் விரைவில் திறக்கப்படும்!

கோயம்பேடு சந்தை வியாபாரிகள் மூலமாக மற்ற வியாபாரிகள், பொதுமக்கள், காய்கறி இறக்குமதி செய்ய வந்தவர்கள் என பன்மடங்காக பாதிப்பு அதிகரித்தது. இதனால் அந்த சந்தை மூடப்பட்டு திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தை தொடங்கப்பட்டது. மேலும், பழ மார்க்கெட் மாதாவர சந்தைக்கு மாற்றப்பட்டது.

கோயம்பேடு மார்க்கெட் விரைவில் திறக்கப்படும்!

இந்நிலையில் கோயம்பேடு மார்க்கெட் விரைவில் திறக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

கோயம்பேடு மார்க்கெட் விரைவில் திறக்கப்படும்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தலைமை செயலகத்தில் சந்தித்த அவர் பின் செய்தியாளர்களை சந்தித்த போது, கோயம்பேடு மார்க்கெட் திறப்பு பற்றி துணை முதல்வர் ஓ.பி.எஸ்-சிடம் ஆலோசித்து முதல்வர் அறிவிப்பார் என்று கூறினார்.