“பாஜக வேட்பாளரை வெற்றி பெற செய்யும் மாவட்ட தலைவருக்கு “இன்னோவா கார்” பரிசு : பாஜக எல்.முருகன் அறிவிப்பு!

 

“பாஜக வேட்பாளரை வெற்றி பெற செய்யும் மாவட்ட தலைவருக்கு “இன்னோவா கார்” பரிசு : பாஜக எல்.முருகன் அறிவிப்பு!

தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்க பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக -அதிமுகவுடன் கூட்டணி அமைத்து களம் கண்டது. இந்த தேர்தலில் பாஜகவுக்கு 5 எம்பி சீட்டுகள் ஒதுக்கப்பட்ட நிலையில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இருப்பினும் அடுத்து வந்த உள்ளாட்சி தேர்தலில் பாஜக -அதிமுக உடனே கைகோர்த்து நின்றது.

“பாஜக வேட்பாளரை வெற்றி பெற செய்யும் மாவட்ட தலைவருக்கு “இன்னோவா கார்” பரிசு : பாஜக எல்.முருகன் அறிவிப்பு!

இன்னும் எட்டு மாத காலத்தில் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரவிருப்பதால் அதிமுகவுடன் கூட்டணி அமைக்குமா என்ற கேள்வி எழுந்த நிலையில் பாஜகவின் தலைமையில்தான் தமிழகத்தில் ஆட்சி அமையும் என்று அக்கட்சியின் துணை தலைவர் வி பி துரைசாமி தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

“பாஜக வேட்பாளரை வெற்றி பெற செய்யும் மாவட்ட தலைவருக்கு “இன்னோவா கார்” பரிசு : பாஜக எல்.முருகன் அறிவிப்பு!

இந்நிலையில் நாம் கை காட்டுபவர்கள் தான் 2021ல் ஆட்சிக் கட்டிலில் அமர போகின்றனர் பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் காணொளி காட்சி மூலம் தலைவர் எல். முருகன் கூறியுள்ளார். இன்னும் ஆறு மாதத்தில் தமிழக அரசியலில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும் என்று தெரிவித்த அவர் தேர்தலில் பாஜக வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்து சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் பாஜக வேட்பாளரை வெற்றி பெறச் செய்யும் மாவட்ட தலைவருக்கு கார் பரிசாக வழங்கப்படும்” என்று கூறியுள்ளார்.