பிரதமர் வந்தே மாதரம் சொல்லிய போது கைகளை உயர்த்தாத கெஜ்ரிவால்… திட்டி தீர்த்த டிவிட்டர்வாசிகள்

 

பிரதமர் வந்தே மாதரம் சொல்லிய போது கைகளை உயர்த்தாத கெஜ்ரிவால்… திட்டி தீர்த்த டிவிட்டர்வாசிகள்

நாட்டின் 74வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றி, நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றினார். சுமார் 86 நிமிடங்கள் ஆற்றிய சுதந்திர தின உரையாற்றி பிரதமர் நரேந்திர மோடி, புதிய கல்வி கொள்கை, கோவிட்-19 மற்றும் எல்லை பிரச்சினை என அனைத்து நடப்பு விஷங்கள் அனைத்தும் குறித்து பேசினார். அவர் தனது உரையை முடிக்கும்போது வந்தே மாதரம் என சொன்னார்.

பிரதமர் வந்தே மாதரம் சொல்லிய போது கைகளை உயர்த்தாத கெஜ்ரிவால்… திட்டி தீர்த்த டிவிட்டர்வாசிகள்

உடனே வழக்கம் போல் மக்களும் வந்தே மாதரம் என கைகளை உயர்த்தி கூறினர். இருப்பினும், அந்த சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மட்டும் மற்ற அனைவரும் கைகளை உயர்த்தி வந்தே மாதரம் சொல்லிய போது உயர்த்தாமல் இருந்தது நேரடி ஒளிபரப்பில் வீடியோவில் தெளிவாக தெரிந்தது. மேலும் மாஸ்க் அணிந்து இருந்ததால் அவர் வந்தே மாதரம் என்று சொன்னாரா என்பது உறுதியாக தெரியவில்லை. அரவிந்த் கெஜ்ரிவால் வந்தே மாதரம் சொல்லும் போது கைகளை உயர்த்தாததை டிவிட்டர்வாசிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

பிரதமர் வந்தே மாதரம் சொல்லிய போது கைகளை உயர்த்தாத கெஜ்ரிவால்… திட்டி தீர்த்த டிவிட்டர்வாசிகள்
திவ்யான்ஷு தீட்சித் என்பவர் டிவிட்டரில், உங்களால் அவமானம் என பதிவு செய்து இருந்தார். வந்தே மாதரத்தை மதிக்கும்போது உங்கள் வாக்கு வங்கி கோபப்படுமா? பட்லா பயங்கரவாதிகளுக்காக உங்கள் கைகள் வேகமாக உயர்ந்தன. நீங்கள் விரைவாக ராணுவத்திடம் ஆதராம் கேட்கிறீர்கள். வந்தே மாதரம் சொல்லும்போது உங்கள் கைகளை உயர்த்த முடியாத அளவுக்கு உங்களுக்கு இன்று உங்களுக்கு என்ன நோய் ஏற்பட்டது தாஜிந்தர் பாகா என்பவர் கோபமாக டிவிட் செய்து இருந்தார். பிரவீன் சவுத்ரி என்பவர், இந்த மனிதரிடம் டெல்லி மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என உண்மையில் எனக்கு தெரியவில்லை. உங்களால் அவமானம் என பதிவு செய்து இருந்தார். இப்படி பலர் டிவிட்டரில் கெஜ்ரிவாலை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தனர்.