‘கட்சிக்குள் பிரச்னை வேண்டாம்’.. போஸ்டரை கிழிக்க சொன்னாரா துணை முதல்வர் ஓபிஎஸ்?

‘கட்சிக்குள் பிரச்னை வேண்டாம்’.. போஸ்டரை கிழிக்க சொன்னாரா துணை முதல்வர் ஓபிஎஸ்?

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு சில மாதங்களே எஞ்சியுள்ள நிலையில் கட்சிகள் தேர்தல் பணிகளை ஆரம்பித்து விட்டன. சமீபத்தில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது தான் அதிமுகவில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்? என்பது குறித்து பிரச்சனை எழுந்தது.

‘கட்சிக்குள் பிரச்னை வேண்டாம்’.. போஸ்டரை கிழிக்க சொன்னாரா துணை முதல்வர் ஓபிஎஸ்?

இது குறித்து இதுவரை முதல்வர் பழனிசாமியோ அல்லது துணை முதல்வர் ஓபிஎஸ்ஸோ எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால், அவர்களது ஆதரவாளர்களோ போஸ்டர்கள் ஓட்டுவது, நலத்திட்ட உதவிகள் கொடுத்து ஆதரவு திரட்டுவது என பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த செயல்கள் யாதும், முதல்வரோ அல்லது துணை முதல்வர் அறிவுறுத்தல்களில் நடைபெறவில்லை.

‘கட்சிக்குள் பிரச்னை வேண்டாம்’.. போஸ்டரை கிழிக்க சொன்னாரா துணை முதல்வர் ஓபிஎஸ்?

இன்று காலை தேனி மாவட்டத்தின் போடி பகுதியில் துணை முதல்வர் ஓபிஎஸ்க்கு ஆதரவாக போஸ்டர்கள் ஓட்டப்பட்டது. இது சர்ச்சையை கிளப்பிய நிலையில் அவை உடனே கிழக்கப்பட்டன. இது குறித்து ஓ.பிஎஸ் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டதை தொடர்ந்து தற்போது முதல்வருடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கட்சிக்குள் எந்த பிரச்னையும் இருக்க இடம் கொடுக்க கூடாது என துணை முதல்வர் ஓபிஎஸ் அந்த போஸ்டர்களை கிழிக்கச் சொன்னதாக தகவல்கள் வெளியாகின்றன. அவரது அறிவுறுத்தலின் பேரில் அதிமுகவினர் அந்த போஸ்டரை கிழித்ததாகக் கூறப்படுகிறது.