“ஒன்றுபட்டு உழைக்க வேண்டிய நேரம் இது…சலசலப்புக்கு இடம் கொடுக்க வேண்டாம்” – ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டறிக்கை

 

“ஒன்றுபட்டு உழைக்க வேண்டிய நேரம் இது…சலசலப்புக்கு இடம் கொடுக்க வேண்டாம்” – ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டறிக்கை

சமீபத்தில் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜு பேசியதில் இருந்து, அதிமுகவில் பெரும் பரபரப்பு நிலவியது. இதில் முதல்வர் பழனிசாமியும் துணை முதல்வர் பன்னீர் செல்வமும் எந்த கருத்தையும் சொல்லவில்லை என்றாலும், அதிமுக தொண்டர்களால் சலசலப்பு ஏற்பட்டது. அதாவது ஓபிஎஸ்க்கு ஆதரவாக போஸ்டர் ஓட்டுவது, இபிஎஸ்க்கு ஆதரவாக நலத்திட்ட உதவிகள் வழங்குவது போன்ற பல செயல்கள் நடந்து சர்ச்சையை கிளப்பின. இதற்கு ஒரு முற்றிப்புள்ளி வைக்க எண்ணிய அதிமுக தலைமை, மூத்த அமைச்சர்களுடன் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தப்பட்டது. அந்த ஆலோசனையின் முடிவுகள் அறிக்கையாக வெளியிடப்படும் என கூறப்பட்டது.

“ஒன்றுபட்டு உழைக்க வேண்டிய நேரம் இது…சலசலப்புக்கு இடம் கொடுக்க வேண்டாம்” – ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டறிக்கை

இந்த நிலையில் அனைவரும் ஒன்றுபட்டு சிறப்பான ஆட்சியை நடத்துவோம் என முதல்வரும் துணை முதல்வரும் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், கட்சி நிர்வாகிகள் கடந்த சில நாட்களாக பேசியது பேச்சு பொருளாக ஆகிவிட்டதாகவும், அதிமுக தலைமையின் ஒப்புதல் இல்லாமல் தனிப்பட்ட கருத்துக்களை கூறினார் நடவடிக்கை எடுக்கும் என்றும் ஜெலலிதா காட்டிய வழியில் ஜனநாயக ரீதியில் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், கடந்த 4 ஆண்டை போலவே வரும் ஆட்சிக்காக ஒன்றுபட்டு உழைக்க வேண்டிய நேரம் இது என்றும் சலசலப்புகளுக்கு இடம் தராமல் தொண்டர்கள் அனைவரும் மக்கள் பணிகளிலும், கட்சி பணிகளிலுமே ஈடுபட வேண்டும் என்றும் தெரிவித்துள்னர். இந்த அறிக்கையின் மூலம் அதிமுகவில் எந்த விதமான பிளவோ அல்லது பிரிவோ ஏற்படப்போவதில்லை என்பது தெளிவாக தெரிகிறது.