மேற்கு வங்கத்தில் கொடியேற்றுவது தொடர்பாக பிரச்சினை.. பா.ஜ.க. தொண்டரை அடித்து கொன்ற மம்தா கட்சியினர்..

மேற்கு வங்கத்தில் கொடியேற்றுவது தொடர்பாக பிரச்சினை.. பா.ஜ.க. தொண்டரை அடித்து கொன்ற மம்தா கட்சியினர்..

மேங்கு வங்கத்தில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய கம்யூனிஸ்ட் கட்சிகளை இருக்கிற இடம் தெரியாத அளவுக்கு ஆக்கியவர் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி. மக்கள் மத்தியில் மம்தாவுக்கு பெரிய அளவில் செல்வாக்கு உள்ளது. அப்படிப்பட்ட மம்தாவுக்கு தற்போது பா.ஜ.க. ரூபத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பா.ஜ.க. மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது அதனை உறுதி செய்வது போல் அந்த கட்சி அங்கு அசுர வேகத்தில் வளர்ச்சி கண்டு வருகிறது.

மேற்கு வங்கத்தில் கொடியேற்றுவது தொடர்பாக பிரச்சினை.. பா.ஜ.க. தொண்டரை அடித்து கொன்ற மம்தா கட்சியினர்..

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்களும், பா.ஜ.க. தொண்டர்களும் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஹூக்ளியின் ஹானகுல் ஒன்றியத்தில் தேசிய கொடியேற்றுவது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வினர் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அப்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் பா.ஜ.க.வினரை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் பா.ஜ.க. தொண்டர் ஒருவர் கொல்லப்பட்டார்.

மேற்கு வங்கத்தில் கொடியேற்றுவது தொடர்பாக பிரச்சினை.. பா.ஜ.க. தொண்டரை அடித்து கொன்ற மம்தா கட்சியினர்..

கடந்த ஜூலையில் மேற்கு வங்கம் மாநிலம் மிட்னாபூர் மாவட்டம் கசூரி கிராமத்தில் பா.ஜ.க. தொண்டர் பூர்ணாச்சரண் என்பவர் மரத்தில் பிணமாக தொங்கினார். இது குறித்து அவரது குடும்பத்தினர் கூறுகையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேரும்படி தாஸை வலியுறுத்தி வந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர்தான் அவரை கொன்றார்கள் என குற்றம் சாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.