சுதந்திர தின நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்கள் பங்கேற்க வேண்டாம் : தமிழக அரசு வேண்டுகோள்!

சுதந்திர தின நிகழ்ச்சியில்  பள்ளி, கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்கள் பங்கேற்க வேண்டாம் : தமிழக அரசு வேண்டுகோள்!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று பாதிப்பு இந்தியாவிலும் தொடர்வதால் கொண்டாட்டங்கள் பலவும் தவிர்க்கப்பட்டு வருகிறது.

சுதந்திர தின நிகழ்ச்சியில்  பள்ளி, கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்கள் பங்கேற்க வேண்டாம் : தமிழக அரசு வேண்டுகோள்!

அதன்படி  ஆகஸ்ட் 15 ஆம் தேதி 74 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது சமூக இடைவெளி, முகக கவசம் அணிதல் உள்ளிட்டவை அவசியம் பின்பற்ற வேண்டும் என கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறை வழிக்காட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. அந்த வகையில் தமிழகத்திலும் சுதந்திர தினவிழா பாதுகாப்புடன் கொண்டாடப்படவுள்ளது.

சுதந்திர தின நிகழ்ச்சியில்  பள்ளி, கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்கள் பங்கேற்க வேண்டாம் : தமிழக அரசு வேண்டுகோள்!

இந்நிலையில் சுதந்திர தின வழிகாட்டுதல்கள் குறித்து தமிழக அரசு சில நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. சென்னை கோட்டையில் காலை  8.45 மணிக்கு முதல்வர் பழனிசாமி தேசியக் கொடியை ஏற்றுகிறார்.  பள்ளி கல்லூரி மாணவர்கள் மூத்த குடிமக்கள் சுதந்திர தின நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கும் உணவு பெட்டகத்தை அவரவரின் விடுதிகளில் சென்று அளிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல் வீடுகளுக்கே சென்று தியாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி ஆட்சியர் மரியாதை செலுத்த அறிவுறுத்தப்பட்ட நிலையில் கொரோனா பணியில் ஈடுபட்ட முன் களப் பணியாளர்களுக்கு பதக்கம் சான்றிதழ் வழங்கி  முதல்வர் பழனிசாமி சிறப்பிக்கிறார். சுதந்திர தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி மற்றும் வானொலி வாயிலாக நேரடியாக ஒளிபரப்ப தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.