“கொரோனா காலத்தினால் பல் பரிசோதனைகளை ஒத்தி வையுங்கள்” : எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்!

“கொரோனா காலத்தினால்  பல் பரிசோதனைகளை ஒத்தி வையுங்கள்” :  எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்!

கொரோனா பரவல் கட்டுக்குள் வரும்வரை பல் பரிசோதனைகளைத் தள்ளிவைக்கும்படி உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

“கொரோனா காலத்தினால்  பல் பரிசோதனைகளை ஒத்தி வையுங்கள்” :  எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்!

கடந்த ஆண்டு சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தொடர்ந்து பல்வேறு நாடுகளை நிலைகுலைய செய்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதில் இருந்து மக்களை காக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

“கொரோனா காலத்தினால்  பல் பரிசோதனைகளை ஒத்தி வையுங்கள்” :  எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்!
இந்நிலையில் கொரோனா பேரிடர் காலத்தில் பல் பரிசோதனைகளைத் தள்ளிவைக்கும்படி உலக சுகாதார நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல் பரிசோதனைகள், பற்களைச் சுத்தம் செய்தல், பராமரிப்பு ஆகியவற்றை ஒத்திவைத்துக்கொள்ளுங்கள். பல் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளும்போது கொரோனா கிருமி பரவுவதற்கான சாத்தியம் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை. இருப்பினும், சிறிய நுண்ணுயிர்களை சுவாசிப்பதன் மூலம் தொற்று ஏற்படுமா என்பதை இன்னும் ஆழமாக ஆராய வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.