“அதிமுக தலைமையில்தான் கூட்டணி இருக்கும்” : துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி திட்டவட்டம்!

 

“அதிமுக தலைமையில்தான் கூட்டணி இருக்கும்” : துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி திட்டவட்டம்!

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற அலையே இன்னும் ஓயாத நிலையில் பாஜக தலைமையில் தான் தமிழகத்தில் கூட்டணி அமையும் என்று அக்கட்சியின் துணைத் தலைவர் வி.பி. துரைசாமி கூறியிருப்பது அடுத்தகட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

“அதிமுக தலைமையில்தான் கூட்டணி இருக்கும்” : துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி திட்டவட்டம்!

இன்று சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜகவை அனுசரித்து செல்லும் கட்சிகளுடன் சட்டமன்ற தேர்தலை சந்திப்போம் என்றும் தமிழகத்தில் திமுக vs அதிமுக என்ற நிலை இருந்த நிலையில் இனிவரும் காலத்தில் பாஜக vs திமுக என்ற நிலை மாறி விட்டது என்று கூறியுள்ளார்.

“அதிமுக தலைமையில்தான் கூட்டணி இருக்கும்” : துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி திட்டவட்டம்!
இந்நிலையில் இதுகுறித்து அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி, அதிமுக தலைமையில்தான் கூட்டணி இருக்கும் என்றும் முதல்வர் வேட்பாளர் பற்றி கட்சித் தலைமைதான் உரிய நேரத்தில் முடிவெடுக்கும் என்றும் கூறியுள்ளார். அதேபோல் பாஜக கூட்டணி பற்றி அக்கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா தான் முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.