நிலச்சரிவில் சிக்கிய எஜமானர் குடும்பத்தை தேடி வந்த நாய் குவி தத்தெடுப்பு! விரைவில் மோப்ப நாய் படை பிரிவில் சேர்ப்பு?!

நிலச்சரிவில் சிக்கிய எஜமானர் குடும்பத்தை தேடி வந்த நாய் குவி தத்தெடுப்பு! விரைவில் மோப்ப நாய் படை பிரிவில் சேர்ப்பு?!

கேரள மாநிலம் மூணாறு பகுதியில் உள்ள பெட்டி முடி பகுதியில் உள்ள கண்ணன் தேவன் டீ எஸ்டேட் தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்த தொழிலாளர்கள் குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கரமான நிலச்சரிவில் இருபது வீடுகள் முழுமையாக சேதமடைந்த நிலையில் இதுவரை 64 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

நிலச்சரிவில் சிக்கிய எஜமானர் குடும்பத்தை தேடி வந்த நாய் குவி தத்தெடுப்பு! விரைவில் மோப்ப நாய் படை பிரிவில் சேர்ப்பு?!

இந்த சூழலில் மூணாறு நிலச்சரிவு பகுதியில் குவி என்ற நாய் நிலச்சரிவில் ஆற்றில் அடித்து செல்லபட்ட தனது எஜமானர் குடும்பத்தை தேடி வந்தது. அதன் மோப்ப சக்தியினால் எஜமானரின் 2 1/2 வயது குழந்தையின் சடலத்தை கண்டுப்பிடித்தது.

நிலச்சரிவில் சிக்கிய எஜமானர் குடும்பத்தை தேடி வந்த நாய் குவி தத்தெடுப்பு! விரைவில் மோப்ப நாய் படை பிரிவில் சேர்ப்பு?!

இந்நிலையில் மீட்பு பணிக்காக பெட்டிமுடி வந்த கேரளா மாநில மோப்ப நாய் பயிற்சியாளரான அஜித் குவியை தத்தெடுத்து வளர்க்க மாவட்ட ஆட்சியர் மற்றும், கேரள வன விலங்கு வாரியமான வனசமரச சமீதி அமைப்பிடம் கோரிக்கை வைத்த நிலையில் அதற்கான அனுமதி அவருக்கு கிடைத்துள்ளது. மீட்பு பணியின் போது குவியின் செயலால் ஈர்க்கப்பட்ட அஜித், குவியை மோப்ப நாய் படை பிரிவில் சேர்க்கவும் உயர் அதிகாரிகளிடம் அனுமதி கோரியுள்ளார்.