மூணாறு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு!

 

மூணாறு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு!

கேரளா நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 58ஆக அதிகரித்துள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு பகுதியில் இருக்கும் தேயிலை தோட்டத்தில் கடந்த 6 ஆம் தேதி நள்ளிரவு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் தூத்துக்குடி மாவட்டத்தின் கயத்தாறு பகுதியில் இருந்து வேலைக்காக சென்றவர்கள் உட்பட 80 பேர் சிக்கினர். தகவல் அறிந்து வந்த தேசிய பேரிடர் மீட்புப்படையினர் 15 பேரை நிலச்சரிவில் இருந்து உயிருடன் மீட்டனர். அதற்குள்ளாகவே 14 பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்து விட்டனர். இதில் இருபதுக்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் முழுமையாக புதைந்ததாக கூறப்பட்டது.

மூணாறு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு!

இந்நிலையில் நிலச்சரிவு ஏற்பட்ட இடுக்கி மாவட்டம் ராஜமலை பகுதியிலிருந்து இன்று மேலும் 2 உடல்கள் இன்று மீட்கப்பட்டன. இதன் மூலம் பலி எண்ணிக்கை 58ஆக உயர்ந்திருக்கின்றது. நிலச்சரிவின்போது காணாமல் போன மேலும் 12 பேர் மண்ணில் புதைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால், அவர்களையும் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக இடுக்கி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. உயிருடன் மீட்கப்பட்டவர்கள் மூணாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே சிக்கியவர்களை மீட்கும் பணியில் 100 மீட்புப்படையினர் ஈடுபட்டிருந்த நிலையில், மேலும் 100 பேர் வரவழைக்கப்பட்டனர்.