மூணாறு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு: ஐந்தாவது நாளாக தொடரும் மீட்புப்பணி!

 

மூணாறு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு: ஐந்தாவது நாளாக தொடரும் மீட்புப்பணி!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு பகுதியில் இருக்கும் தேயிலை தோட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் தூத்துக்குடி மாவட்டத்தின் கயத்தாறு பகுதியில் இருந்து வேலைக்காக சென்றவர்கள் உட்பட 80 பேர் சிக்கினர். தகவல் அறிந்து வந்த தேசிய பேரிடர் மீட்புப்படையினர் 15 பேரை நிலச்சரிவில் இருந்து உயிருடன் மீட்டனர். அதற்குள்ளாகவே 14 பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்து விட்டனர்.

மூணாறு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு: ஐந்தாவது நாளாக தொடரும் மீட்புப்பணி!

இதனைத்தொடர்ந்து நிலச்சரிவில் சிக்கியிருக்கும் மக்களை மீட்கும் பணி தொடர்ந்தது. நேற்று வரை 47 சடலங்கள் மீட்கப்பட்டன. உயிருடன் மீட்கப்பட்டவர்கள் மூணாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே சிக்கியவர்களை மீட்கும் பணியில் 100 மீட்புப்படையினர் ஈடுபட்டிருந்த நிலையில், மேலும் 100 பேர் வரவழைக்கப்பட்டனர். அதே போல கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை இயந்திரங்களும் அதிக அளவில் வரவழைக்கப்பட்டது. இதன் மூலம் கடந்த 2 நாட்களை விட ஞாயிற்றுக் கிழமையில் இருந்து மீட்புப் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. 5ஆவது நாளாக அங்கு மீட்புப்பணி தொடருகிறது என்பது நினைவு கூறத்தக்கது.