நிலச்சரிவில் மண்ணில் புதையுண்ட எஜமானர் குடும்பத்தை தேடி வரும் நாய் : மூணாறில் ஓர் பாச போராட்டம்!

நிலச்சரிவில் மண்ணில் புதையுண்ட எஜமானர் குடும்பத்தை தேடி வரும் நாய் : மூணாறில் ஓர் பாச போராட்டம்!

கேரள மாநிலம் மூணாறு பகுதியில் உள்ள பெட்டி முடி பகுதியில் உள்ள கண்ணன் தேவன் டீ எஸ்டேட் தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்த தொழிலாளர்கள் குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கரமான நிலச்சரிவில் இருபது வீடுகள் முழுமையாக சேதமடைந்த நிலையில் இதுவரை 50 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து 5 வது நாளாக மீட்புபணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தேசிய பேரிடர் மீட்பு குழு, தீயணைப்பு துறையினர், மோப்ப நாய் உதவியுடன் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

நிலச்சரிவில் மண்ணில் புதையுண்ட எஜமானர் குடும்பத்தை தேடி வரும் நாய் : மூணாறில் ஓர் பாச போராட்டம்!

இந்த சூழலில் தனது மூணாறு நிலச்சரிவு பகுதியில் நாய் ஒன்று தனது எஜமானரை தேடி வருகிறது. பெரும் பாடுபட்டு ஒவ்வொரு உடலையும் மீட்பு படையினர் மீட்கும் போது அது நம்மை வளர்த்த எஜமானரா? என்று பதறிப் போய் ஓடி பார்த்தும், பின்பு ஏமாற்றத்துடன் வருவதுமாக உள்ளது. இந்த நாயை வளர்த்த தொழிலாளியின் குடும்பமே மண்ணுக்குள் புதைந்துவிட்டது. பேரிடரில் இருந்து தப்பித்த இந்த நாய் கடந்த சில நாட்களாக அங்கேயே சுற்றிதிரிந்து வருகிறது.

நிலச்சரிவில் மண்ணில் புதையுண்ட எஜமானர் குடும்பத்தை தேடி வரும் நாய் : மூணாறில் ஓர் பாச போராட்டம்!

இதை கண்டு அப்பகுதிவாசிகள், மீட்பு படையினர் ஆச்சரியத்தில் மலைத்து போயுள்ளனர். மேலும் உணவில்லாமல் தவித்து வரும் இந்த நாய்க்கு அங்கிருக்கும் மக்களும் மீட்பு படையினரும் உணவு கொடுத்தால் கூட அதை சாப்பிட மறுக்கும் இந்த நாய், தனது எஜமானரின் குடும்பத்தை எதிர்பார்த்து காத்துக் கிடக்கிறது.