தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு !
Jul 23, 2020, 13:42 IST1595491969000
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கோவை, நீலகிரி, சேலம், தருமபுரி,கிருஷ்ணகிரி, நாமக்கல் தேனி, வேலூர், திண்டுக்கல், மாவட்டங்களில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென் கிழக்கு அரபிக்கடல், கேரளா, கர்நாடகா அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.