தமிழகத்தின் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

 

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தென் மேற்கு பருவ மழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னையில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன் படி கோடம்பாக்கம், வளசரவாக்கம், போரூர், கிண்டி, அசோக் நகர் உள்ளிட்ட சென்னையின் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதல் சாரல் மழை பெய்தது. அதே போல காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது.

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

இந்த நிலையில் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் நீலகிரி,கோவை, தருமபுரி, ஈரோடு, திண்டுக்கல், திருப்பூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், கரூர் மற்றும் மதுரையில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.