தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

 

தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தென் மேற்கு அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், “வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் உள்ளிட்ட தென் தமிழகம், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தென்மேற்கு அரபிக் கடல் பகுதியில் 5 முதல் 55 கி.மீ வேகத்துக்கு காற்று வீசுவதால் அப்பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். தமிழகத்தில் வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் 40 முதல் 42 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் இருக்கும். அதிக வெயில் காரணமாக 11 மணி முதல் 3 மணி வரை பொது மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் வெளியே செல்ல வேண்டாம்.
சென்னையைப் பொறுத்தவரை வானம் தெளிவாக இருக்கும். அதிகபட்ச வெப்பம் 40 டிகிரி செல்ஷியஸ் என்ற அளவில் பதிவாகும்” என்று கூறியுள்ளது.