இந்துக்களின் கடவுளர்கள் மற்றும் புராணங்கள் தொடர்பாக பல்வேறு வீடியோக்களை கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சானல் வெளியிட்டு வருகிறது. அதனால், அந்த யூடியூப் சேனலை தடை செய்யவேண்டும் என்றும், சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என பா.ஜ.க சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது.
இதனால் கறுப்பர் கூட்டம் இணையதள சேனல் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கறுப்பர் கூட்டம் யூ-டியூப் சேனலை சேர்ந்த செந்தில்வாசன் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இதை தொடர்ந்து கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரி அரியங்குப்பம் காவல்நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். கந்த சஷ்டி தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் அவர் சரண் அடைந்திருக்கிறார். இதையடுத்து சுரேந்திரனை புதுச்சேரி போலீசார் தமிழக போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து கறுப்பர் கூட்டம் சுரேந்திரனிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
மேலும் கறுப்பர் கூட்டம் சேனலின் 500 வீடியோக்களை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நீக்கியுள்ளனர். கந்த சஷ்டி கவசம் சர்ச்சையால் ஏற்கனவே சுரேந்திரன் உள்பட 4 பேர் கைதாகியுள்ள நிலையில் தற்போது சேனலில் இருந்த வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளன.
#கந்தனுக்கு_அரோகரா pic.twitter.com/zWfRVpufXk
— Rajinikanth (@rajinikanth) July 22, 2020
இந்நிலையில் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில், “கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து பல கோடி தமிழ் மக்களின் மனதை புண்படுத்தி கொந்தளிக்கச் செய்த இந்த ஈனச்செயலை வாழ்க்கையில் மறக்க முடியாத படி செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கி இதற்காக தமிழக அரசுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். இனிமேலாவது மதத் துவேஷமும் கடவுள் சிந்தனையும் ஒழியட்டும். ஒழியனும்.எல்லா மதமும் சம்மதமே கந்தனுக்கு அரோகரா” என்று பதிவிட்டுள்ளார்.