‘கறுப்பர் கூட்டம்’ சேனலின் 500 வீடியோக்கள் அதிரடி நீக்கம்!

 

‘கறுப்பர் கூட்டம்’ சேனலின் 500 வீடியோக்கள் அதிரடி நீக்கம்!

இந்துக்களின் கடவுளர்கள் மற்றும் புராணங்கள் தொடர்பாக பல்வேறு வீடியோக்களை கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சானல் வெளியிட்டு வருகிறது. அதனால், அந்த யூடியூப் சேனலை தடை செய்யவேண்டும் என்றும், சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என பா.ஜ.க சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது.

‘கறுப்பர் கூட்டம்’ சேனலின் 500 வீடியோக்கள் அதிரடி நீக்கம்!

இதனால் கறுப்பர் கூட்டம் இணையதள சேனல் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கறுப்பர் கூட்டம் யூ-டியூப் சேனலை சேர்ந்த செந்தில்வாசன் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

‘கறுப்பர் கூட்டம்’ சேனலின் 500 வீடியோக்கள் அதிரடி நீக்கம்!

இதை தொடர்ந்து கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரி அரியங்குப்பம் காவல்நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். கந்த சஷ்டி தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் அவர் சரண் அடைந்திருக்கிறார். இதையடுத்து சுரேந்திரனை புதுச்சேரி போலீசார் தமிழக போலீசில் ஒப்படைத்தனர்.  இதையடுத்து  கறுப்பர் கூட்டம் சுரேந்திரனிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

‘கறுப்பர் கூட்டம்’ சேனலின் 500 வீடியோக்கள் அதிரடி நீக்கம்!

இந்நிலையில் கறுப்பர் கூட்டம் சேனலின் 500 வீடியோக்களை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நீக்கியுள்ளனர். கந்த சஷ்டி கவசம் சர்ச்சையால் ஏற்கனவே சுரேந்திரன் உள்பட 4 பேர் கைதாகியுள்ள நிலையில் தற்போது சேனலில் இருந்த வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளன.

முன்னதாக கறுப்பர் கூட்டம் சேனலை முடக்கக் கோரி யூடியூப் நிறுவனத்திற்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடிதம் எழுதினர். கந்த சஷ்டி விவகாரத்தில் கறுப்பர் கூட்டம் சேனலுக்கு எதிராக எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் மேற்கூறிய நிறுவனத்திற்கு நிதி உதவி செய்வது யார் என்ற விசாரணையும் நடைபெற்று வருகிறது.