கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு எதிராக சென்னையில் பாஜகவினர் போராட்டம்!

 

கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு எதிராக சென்னையில் பாஜகவினர் போராட்டம்!

இந்துக்களின் கடவுளர்கள் மற்றும் புராணங்கள் தொடர்பாக பல்வேறு வீடியோக்களை கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சானல் வெளியிட்டு வருகிறது. அதனால், அந்த யூடியூப் சேனலை தடை செய்யவேண்டும் என்றும், சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என பா.ஜ.க சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது.

கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு எதிராக சென்னையில் பாஜகவினர் போராட்டம்!

இதனால் கறுப்பர் கூட்டம் இணையதள சேனல் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கறுப்பர் கூட்டம் யூ-டியூப் சேனலை சேர்ந்த செந்தில்வாசன் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் கறுப்பர் கூட்டம் யூடியூப் நிர்வாகிகளை கண்டித்து தமிழ்நாடு பாஜக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும் பாஜக நிர்வாகிகள் அனைவரும் அவரவர் வீடுகளில் அறப்போராட்டம் செய்தனர். இதில் நடிகையும் பாஜக நிர்வாகியுமான காயத்ரி ரகுராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.