தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிடம் 2ம் நாளாக போலீஸ் விசாரணை!

 

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிடம் 2ம் நாளாக போலீஸ் விசாரணை!

ராமநாதபுரத்தை சேர்ந்தவர் துளசி மணிகண்டன். இவரிடம் சென்னையை சேர்ந்த நீதிமணி, ராமநாதபுரத்தை சேர்ந்த ஆசிரியர் ஆனந்தன் ஆகியோர் வட்டிக்கு பணம் பெற்று ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளனர்.

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிடம் 2ம் நாளாக போலீஸ் விசாரணை!

சுமார் 3 கோடி ரூபாய் பணத்தை பெற்று விட்டு மோசடி செய்ததாக துளசி மணிகண்டன் இருவர் மீதும் புகார் அளிக்க கடந்த ஜூன் 10ஆம் தேதி பஜார் போலீசார் ஆனந்த் மற்றும் நீதி மணி ஆகியோரை கைது செய்தனர் . இவர்களிடம் நடத்திய விசாரணையில் 145 கோடி நிதி திரட்டிய தாகவும், இதில் முதலீட்டாளர்களுக்கு ரூ. 95 கோடி செலுத்தி விட்டதாகவும். ரூ. 50 கோடி பாக்கி உள்ளதாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். இதுதவிர திரைப்பட தயாரிப்பாளரான சேலத்தை சேர்ந்த சிவா, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, முருகானந்தம் ஆகியோரிடம் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து உள்ளதாக அவர்கள் போலீசாரிடம் கூறி உள்ளனர். இதை தொடர்ந்து திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை விசாரணைக்கு ஆஜராகும்படி பஜார் போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் இந்த வழக்கில் இருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனவும் மகாமுனி படத்தின் விநியோகஸ்த உரிமைக்காக நீதிமணி பணம் கொடுத்ததாகவும் இந்த வழக்கில் எனக்கு சம்பந்தம் இல்லை என்று ஞானவேல் ராஜா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து நேற்று இவர் ராமநாதபுரத்தில் உள்ள காவல் நிலையத்தில் ஆஜராகும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிடம் 2ம் நாளாக போலீஸ் விசாரணை!

இதனிடையே கைது செய்வதை தடுக்கும் விதமாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஞானவேல்ராஜா முன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார். இந்த மனு தாக்கலின் அடிப்படையில் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை ஞானவேல் ராஜாவை கைது செய்ய இடைக்கால தடை விதித்த நீதிமன்றம் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவும், ஆகஸ்ட் 14 அன்று மீண்டும் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகும்படியும் கூறினர்.

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிடம் 2ம் நாளாக போலீஸ் விசாரணை!

இந்நிலையில் ராமநாதபுரம் டிஎஸ்பி அலுவலகத்தில் படத் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிடம் 2ம் நாளாக போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் நிதி நிறுவனத்திடம் ரூ.3 கோடி மோசடி செய்த புகார் குறித்து விசாரணை நடந்து வருகிறது.