தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை கைது செய்ய ஆகஸ்ட் 14 வரை இடைக்காலத் தடை!

 

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை கைது செய்ய ஆகஸ்ட் 14 வரை இடைக்காலத் தடை!

நிதி நிறுவனம் தொடங்குவதாக கூறி மணிகண்டன் என்பவரிடம் ரூபாய் 300 கோடி வழங்கியதாக புகார் அளிக்கபட்ட நிலையில் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் இன்று (ஆகஸ்ட் 7) நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சம்மன் தொடர்பாக நேரில் ஆஜராகவிட்டால் போலீசார் அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என நீதிபதி இளந்திரையன் கூறியிருந்தார்.

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை கைது செய்ய ஆகஸ்ட் 14 வரை இடைக்காலத் தடை!

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை இன்று நடந்த நிலையில் பண மோசடி வழக்கில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை கைது செய்ய ஆகஸ்ட் 14 வரை இடைக்காலத் தடை விதித்துள்ளது. காவல்துறையில் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற கிளையில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மனுதாக்கல் செய்திருந்தார். அதில் நீதிமணி என்பவருக்கு திரைப்படத்தின் உரிமைக்காக 6.25 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டதாகவும், இதுவரை இரண்டரை கோடி வழங்கிய நிலையில் மீதம் 1.95 கோடி வழங்க வேண்டும் என்றும் ஆனால் தன் மீது தவறாக பண மோசடி புகாரை நீதிமணி அளித்துள்ளதாகவும் அந்த மனுவில் ஞானவேல் ராஜா குறிப்பிட்டுள்ளார்.