புதிய கல்விக் கொள்கை பற்றி நாளை மக்களிடம் உரையாற்றுகிறார் பிரதமர்!

 

புதிய கல்விக் கொள்கை பற்றி நாளை மக்களிடம் உரையாற்றுகிறார் பிரதமர்!

பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தேசிய கல்விக் கொள்கை 2020-க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி முறையில், பெருமளவிலான மாற்றத்தக்க சீர்திருத்தங்களுக்கு வழிவகுக்கும். 21-ஆம் நூற்றாண்டின் இந்த முதலாவது கல்விக் கொள்கை, 34 ஆண்டுகள் பழமையான தேசிய கல்விக் கொள்கை, 1986-க்கு மாற்றாக அமையும் என்று கூறப்படுகிறது.

புதிய கல்விக் கொள்கை பற்றி நாளை மக்களிடம் உரையாற்றுகிறார் பிரதமர்!

இதில் 3 வயது முதல் குழந்தைகளின் கல்வி கண்காணிக்கப்படும், புத்தகங்கள் மட்டுமின்றி செய்முறை விளையாட்டுகள் மூலம் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கப்படும் என்றும் 5 ஆம் வகுப்பு வரை தாய்மொழி கல்வி கற்பிக்கும் முறை இருக்க வேண்டும் என்றும் ஆன்லைன் கல்விக்கு வழிவகுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதே போல, 34 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றப்படும் இந்த புதிய கல்விக் கொள்கையின் மூலம் 2030க்குள் அனைவருக்கும் கல்வி கிடைக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்தது. மத்திய அரசு அறிவித்த இந்த புதிய கல்விக் கொள்கைக்கு பல தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்வி கொள்கையின் சிறப்பம்சங்கள் குறித்து நாளை மாலை 4.30 மணிக்கு பிரதமர் மோடி மக்களிடம் உரையாற்றவிருக்கிறார்.