’புதிய கல்விக்கொள்கை மாநில உரிமைகளைப் பறிக்கும்’ தமிழ்த்தேசியப் பேரியக்கம் கண்டனம்

 

’புதிய கல்விக்கொள்கை மாநில உரிமைகளைப் பறிக்கும்’ தமிழ்த்தேசியப் பேரியக்கம் கண்டனம்

சென்ற ஆண்டு 484 பக்கங்கள் கொண்ட புதிய கல்விக் கொள்கை வரைவை இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் மத்திய அமைச்சரிடம் வழங்கியது..அதில் உள்ள பல அம்சங்கள் தமிழகத்தில் பல எதிர்ப்புகளை உருவாக்கியது. குறிப்பாக, கலை, அறிவியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு, தொடக்கக் கல்விக்கான வயதைக் குறைத்தது உள்ளிட்ட பல விஷயங்கள் விமர்சிக்கப்பட்டன. நடிகர் சூர்யா கடும் விமர்சனங்களை புதிய கல்விக் கொள்கை வரைவு மீது வைத்தார்.

இந்த நிலையில் நேற்று மத்திய அரசு புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் வந்துகொண்டிருக்கின்றன.

’புதிய கல்விக்கொள்கை மாநில உரிமைகளைப் பறிக்கும்’ தமிழ்த்தேசியப் பேரியக்கம் கண்டனம்

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன், புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “தேசியக் கல்விக் கொள்கை வரைவு – 2019” என்ற பெயரால், கடந்த ஆண்டு (2019) மே மாதத்தில் முனைவர் கஸ்தூரிரெங்கன் குழுவின் 484 பக்க அறிக்கையை இந்திய அரசு முன்வைத்தது. இதன் மீது, இந்தியா முழுவதிலுமிருந்து கல்வியாளர்கள் மாணவர் இயக்கங்கள், சில அரசியல் கட்சிகள், மக்கள் இயக்கங்கள் ஆகியவை மிக விரிவான மாற்றுக் கருத்துகளை முன்வைத்திருந்தனர்.

குறிப்பாக, தமிழ்நாட்டில் இந்தக் கல்விக் கொள்கை வரைவு – 2019-இன் மீது மிக விரிவான கருத்துரையாடல்கள் நடைபெற்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பிலும், தனி நபர்களாகவும் ஏராளமான கருத்துகள் இந்திய அரசுக்கு அனுப்பப்பட்டன.

’புதிய கல்விக்கொள்கை மாநில உரிமைகளைப் பறிக்கும்’ தமிழ்த்தேசியப் பேரியக்கம் கண்டனம்

இவை எதையுமே சட்டை செய்யாமல், தாங்கள் ஏற்காததன் காரணத்தையும் விளக்காமல் அதே வரைவை 60 பக்கத்தில் இன்னும் மோசமாக வடிவமைத்து, நேற்று (29.07.2020) இந்திய அமைச்சரவை “தேசியக் கல்விக் கொள்கை – 2020 (NEP – 2020)” என்ற பெயரால் இறுதி செய்து அறிவித்துவிட்டது.

அரசமைப்புச் சட்டத்தின் பொது அதிகாரப் பட்டியலில் கல்வித்துறை இருப்பதை அப்படியே வைத்துக் கொண்டு, அரசமைப்புச் சட்டத்தில் எந்தத் திருத்தமும் செய்யாமலேயே இந்திய அரசின் கைகளுக்கு கல்வி குறித்த முழு அதிகாரத்தையும் மாற்றிக் கொள்வது என்ற சூதானத் திட்டம் இக்கல்விக் கொள்கையின் வழியாக செயல்படுத்தப்படுகிறது.

’புதிய கல்விக்கொள்கை மாநில உரிமைகளைப் பறிக்கும்’ தமிழ்த்தேசியப் பேரியக்கம் கண்டனம்

சமற்கிருதத்தைப் பள்ளிக் கல்வியிலிருந்தே திணிப்பது, மூன்றாவது மொழி என்ற பெயரால் கொல்லைப்புற வழியில் இந்தியைத் திணிப்பது, கல்வித்துறையில் தனியார்மயத்தை ஊக்குவிப்பது, பல்கலைக்கழக இணைப்பிலிருந்து கல்லூரிகளைப் பிரித்து தன்னாட்சிக் கல்லூரிகள் என்ற பெயரால் தனியார் கல்வி முதலாளிகளின் வேட்டைக்கு வழிதிறப்பது, மருத்துவக் கல்லூரிக்கு அனைத்திந்திய “நீட்” தேர்வு இருப்பதுபோல், கலை அறிவியல் பாடங்கள் உள்ளிட்ட கல்லூரி வகுப்புகள் அனைத்திற்கும் அனைத்திந்திய நுழைவுத் தேர்வு வைப்பது, அதற்கென தனியார் நிறுவனங்களின் நுழைவை உறுதி செய்யும் வகையில் “தேசியத் தேர்வு ஆணையம்” (National Testing Agency) உருவாக்குவது, கல்வி தொடர்பான மாநில அரசின் அதிகாரம் அனைத்தையும் பறிப்பது, மழலையர் வகுப்பிலிருந்து உயர்கல்வி வரை அனைத்திலும் இந்திய அரசின் அதிகாரத்தை நிறுவும் வகையில் “இராஷ்ட்ரிய சிக்ஷா அபியான்” என்ற பெயரில் இந்தியக் கல்வியமைச்சர் தலைமையில் ஆணையத்தை உருவாக்குவது என அனைத்து முனைகளிலும் பிற்போக்கான கல்விக் கொள்கையை செயல்படுத்துவதற்கு பா.ஜ.க. ஆட்சி முனைகிறது.

எனவே, மாநில அரசின் கல்வி உரிமையைப் பறிக்கிற, சமற்கிருதம் மற்றும் இந்தியைத் திணிக்கிற, கல்வித்துறையில் தங்குதடையற்ற தனியார் கட்டணக் கொள்ளைக்கு வழி ஏற்படுத்துகிற, கல்வி உளவியலுக்கு முரணான இந்த “தேசியக் கல்விக் கொள்கை – 2020”-ஐ தமிழ்த்தேசியப் பேரியக்கம் முற்றிலும் நிராகரிக்கிறது! பிற்போக்கான இந்தக் கல்விக் கொள்கையை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டுமென்று வலியுறுத்துகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.