“எல்கேஜி, யுகேஜிக்கு ஆன்லைன் வகுப்பு இல்லை” வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை

 

“எல்கேஜி, யுகேஜிக்கு ஆன்லைன் வகுப்பு இல்லை” வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை

கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 16 முதல் நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. அதனால் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. வழக்கமாக ஜூன் மாதத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் கொரோனா தொற்றால் பள்ளிகள் தற்போது திறக்கப்படும் சாத்தியமில்லை என பள்ளிக்கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். மேலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் துவங்கியுள்ள நிலையில் தனியார் பள்ளிகள் பள்ளி கட்டணத்தை 40% வசூலித்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல அரசுப்பள்ளி மாணவர்களுக்கு டிவி வாயிலாக கல்வி கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“எல்கேஜி, யுகேஜிக்கு ஆன்லைன் வகுப்பு இல்லை” வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை

இந்த நிலையில் இணையவழி வகுப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை அரசாணையாக வெளியிட்டுள்ளது. அதில் முழுமையான இணையவழி, பகுதியளவு இணையவழி, ஆப்லைன் மோடு ஆகிய முறைகளில் வகுப்பு நடத்தலாம் என்றும் தொலைக்காட்சி மூலமாக பாடங்களை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல எல்கேஜி, யுகேஜி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் கிடையாது என்றும் 1-8 ஆம் வகுப்பு வரை 1.30 மணி நேரம், 9-12 ஆம் வகுப்பு வரை 3 மணி நேரம் வகுப்பு நடத்தலாம் என்றும் ஒவ்வொரு வகுப்புகளுக்கான நேரம் 30 முதல் 45 நிமிடங்களாக தான் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், ஒவ்வொரு ஆசிரியரும் ஒரு நாளைக்கு 6 வகுப்புகள் மட்டுமே எடுக்க வேண்டும் என்றும் ஒவ்வொரு வகுப்புக்கும் இடையே 10 முதல் 15 நிமிடங்கள் வரை இடைவேளை இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.