கோயில்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளை கரைக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு அனுமதி!

கோயில்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளை கரைக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு அனுமதி!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி விழா மாநில அரசுகளின் வழிகாட்டுதல்களின்படி ஊரடங்கு உத்தரவுகளுடன் மக்கள் வீடுகளில் வழிப்பட்டு வருகின்றனர்.

கோயில்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளை கரைக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு அனுமதி!

பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், ஊர்வலம் செல்லவும் தமிழக அரசு தடை விதித்த நிலையில் பல்வேறு இடங்களில் இந்து முன்னணி அமைப்பினர் விநாயகர் சிலையை வைத்து வழிபட்டு வருகின்றனர்.

கோயில்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளை கரைக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு அனுமதி!

இந்நிலையில் வீடுகளில் வழிபட்டபின் கோவில்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளை அறநிலையத்துறை கரைக்கலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று விநாயகர் சிலைகளை இந்து சமய அறநிலைத்துறை சேகரித்து நீர்நிலைகளில் கரைக்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. வீடுகளில் வழிபாடு நடத்தி கோவில்களில் வைக்கப்படும் சிலைகளை இந்து சமய அறநிலைத்துறையே சேகரிக்க அரசு அனுமதி கேட்டிருந்தது கவனிக்கத்தக்கது.