கைலாசா நாட்டு நாணயங்களை வெளியிட்ட நித்தியானந்தா

 

கைலாசா நாட்டு நாணயங்களை  வெளியிட்ட நித்தியானந்தா

சிறுமிகள் கடத்தல், பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் பிரபல சாமியார் நித்தியானந்தா. ஒரு சிறிய தீவை விலைக்கு வாங்கி, அதை கைலாசம் என்ற தனிநாடாக அறிவிக்கப்போவதாக கதைவிட்டார். இதற்காக தனி இணையதளம் தொடங்கப்பட்டது. லட்சக் கணக்கான மக்கள் குடியுரிமை கோரி விண்ணப்பித்ததாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், தனித் தீவு எல்லாம் வாங்கவில்லை என்றும் அகதியாகக் கூட அவரை ஏற்க முடியாது என்றும் சில நாடுகள் தெரிவித்தன. சர்வதேச போலீசாரல் தேடப்பட்டுவரும் நித்தியானந்தா, தொடர்ந்து யூடியூபில் சத்சங்கம் நிகழ்ச்சியில் உரையாற்றிவருகிறார். தொடர்ந்து தனது கைலாசா நாடு தொடர்பாக தற்போது ஒரு முக்கிய அறிவிப்புகளை விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிட உள்ளதாக தெரிவித்தார்.

கைலாசா நாட்டு நாணயங்களை  வெளியிட்ட நித்தியானந்தா

அதில், நிறைய நன்கொடைகள் கிடைத்திருப்பதால் நல்ல காரியங்களுக்காக செலவிட வங்கி தொடங்கியுள்ளேன். கைலாசா நாட்டிற்கு உரிய கரன்சி நோட்டுகளும் தயாராக இருக்கிறது. வெளிநாடுகளுக்கு ஒரு கரன்சியும், உள்நாட்டில் ஒரு கரன்சியும் பயன்படுத்தப்பட இருக்கிறோம். வாடிகன் வங்கியை மாதிரியாக வைத்து ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா உருவாக்கப்பட்டுள்ளது. 300 பக்க பொருளாதார கொள்கையும் தயாராக உள்ளது. மேலும் கால் காசு முதல் 10 காசு வரை 5 வகையான தங்க நாணயங்கள் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிடப்படும் என்று நித்தியானந்தா கூறியிருந்தார்.

கைலாசா நாட்டு நாணயங்களை  வெளியிட்ட நித்தியானந்தா

இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியான இன்று கைலாசா நாட்டின் வர்த்தக நாணயங்களை நித்தியானந்தா வெளியிட்டுள்ளார். அதற்கான புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.