ரூ.28 ஆயிரம் மதிப்பிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல்; கையும் களவுமாக சிக்கிய இளைஞர்கள்!

 

ரூ.28 ஆயிரம் மதிப்பிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல்; கையும் களவுமாக சிக்கிய இளைஞர்கள்!

கொரோனா பாதிப்பு மக்களின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக புரட்டி போட்டுள்ளது. குறிப்பாக பண ரீதியாக மக்களும் தொழில் நிறுவனங்களும் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப பல மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது. இதில் வருத்தமளிக்கும் மற்றொரு விஷயமாக, ஆயிரக்கணக்கான மக்கள் வேலையிழந்து தவிக்கின்றனர். விரைவில் கொரோனாவில் இருந்து இந்தியா மீண்டு இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதனிடையே பண ரீதியாக ஏற்பட்ட பாதிப்பால், கள்ளநோட்டுகள் புழக்கங்களும் மீண்டும் தலையெடுத்து வருகிறது.

ரூ.28 ஆயிரம் மதிப்பிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல்; கையும் களவுமாக சிக்கிய இளைஞர்கள்!

இந்த நிலையில், திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள குன்னத்தூரில் ரூ.28 ஆயிரம் மதிப்பிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அப்பகுதியில் இருக்கும் மளிகைக்கடையில், 2 இளைஞர்கள் அந்த கள்ளநோட்டுகளை மாற்றிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். அச்சமயம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், இளைஞர்களை மடக்கி பிடித்துள்ளனர். இதனையடுத்து அந்த இளைஞர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்ற போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.